பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/483

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 475, (துடி) உடுக்கைக்கு நேர் ஒப்பாக நின்று நன்கு விளங்குவதும் மெல்லிய கொடி போன்றதுமான இடையை உடையவளும், தோகைக்கு இசைந்த ஒண்தொடி - மயிலனையவளும், ஒளி பொருந்திய தொடியை (கைவளையை) அணிந்தவளும், தேவர்கள் வாழப் பிறந்தவளுமான சுந்தரி ஆகிய தேவசேனையின் அல்லது வள்ளியின் மணவாளனே! அல்லது - ஒண் டொடி - வள்ளிக்கும். தேவர்குலம் வாழ்ந்து விளங்கப் பிறந்த அழகி தேவசேனைக்கும் மணவாளனே! கிரவுஞ்சகிரி மாளும்படி அதைப் பிளந்தெறிந்த செவ்விய கையில் உள்ள கூர்வேலைக் (கொடு அந்த) கொண்டு அந்த வஞ்சக வடிவுடன் ஒளிந்து வந்து சண்டை செய்த சூரனுடைய வலிமை அழியும்படி துரந்த போக்கினவன்திறல் - வலிய பராக்ரமத்தைக் கொண்ட முருகனே! மல் பொருந்து மற்போருக்குத் தகுதியான - திண்புய திண்ணிய வலிய திருப்புயங்களை உடையவனே (வடிவா) அழகனே! அல்லது திண்புய அழகனே! (மற்று) (மேலும்), (அநந்தம்) அளவற்ற இந்திரர்களுக்கும் பெருமாளே! (வஞ்சகம் ஒழியாதோ) 1193. (முனை) துணிவு - தைரியம் அழிந்து போயிற்று (மேட்டி) இருந்த ஆணவம் - தானெனும் மேன்மை தொலைந்து போயிற்று: வயது ஏறிவிட்டது; வாயிலிருந்த பற்கள் உதிர்ந்து போயின; முதுகு நன்றாய் வளைந்த வில் என்று சொல்லும்படி வளைந்து போய்விட்டது; ஒளிவீசி நேர் நின்ற முகம் (ஒளி மழுங்கித்) தாழ்ந்து தொங்கிவிட்டது; பார்வை இருள் அடைந்தது. இருமல் வந்து விட்டது. துாக்கம் ஒழிந்து விட்டது. பேச்சு தளர்ந்து சோர்வடைந்து விட்டது. நாக்கு விழுந்துவிட்டது (பேச்சுக்குத்த டையாய்), அறிவுகெட்டுப் போய் அளித்த திருவாக்கு இப்பாடலிற் பொலிவுற்று விளங்குகின்றது. t பல் விழுதல் நாக்குவிழுதல்: 'பல்வி ழ்ந்து நாத்தளர்ந்து சம்பந்தர் I-59-8 'சொல்தளர்ந்து கோலுான்றிச் சோர்ந்த நடையினராய்ப் பல்கழன்று" நாலடி -2-3