திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1184 மங்காதிங் காக்கு (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1184 mangkAdhingkAkku (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன தந்தானந் தாத்தந் தனதன ...... தனதான ......... பாடல் ......... மங்காதிங் காக்குஞ் சிறுவரு முண்டேயிங் காற்றுந் துணைவியும் வம்பாருந் தேக்குண் டிடவறி ...... தெணும்வாதை வந்தேபொன் தேட்டங் கொடுமன நொந்தேயிங் காட்டம் பெரிதெழ வண்போதன் தீட்டுந் தொடரது ...... படியேமன் சங்காரம் போர்ச்சங் கையிலுடல் வெங்கானம் போய்த்தங் குயிர்கொள சந்தேகந் தீர்க்குந் தனுவுட ...... னணுகாமுன் சந்தாரஞ் சாத்தும் புயவியல் கந்தாஎன் றேத்தும் படியென சந்தாபந் தீர்த்தென் றடியிணை ...... தருவாயே கங்காளன் பார்த்தன் கையிலடி யுண்டேதிண் டாட்டங் கொளுநெடு கன்சாபஞ் சார்த்துங் கரதல ...... னெருதேறி கந்தாவஞ் சேர்த்தண் புதுமல ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி கண்டான்வெங் காட்டங் கனலுற ...... நடமாடி அங்காலங் கோத்தெண் டிசைபுவி மங்காதுண் டாற்கொன் றதிபதி அந்தாபந் தீர்த்தம் பொருளினை ...... யருள்வோனே அன்பாலந் தாட்கும் பிடுமவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை அஞ்சாநெஞ் சாக்கந் தரவல ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மங்காது இங்கு ஆக்கும் சிறுவரும் உண்டே இங்கு ஆற்றும் துணைவியும் வம்ப(பா)ரும் தேக்கு உண்டிட ... பெருமைகள் குறைவு படாமல் இவ்வுலகில் உதவும் மக்களும் அமைந்து, இவ்வாழ்வில் கூட இருந்து துணை புரியும் மனைவியும், புதிய உறவினரும் சேர்ந்து செல்வத்தை வைத்து உண்டு வாழ்ந்திருக்கும்போது, வறிது எ(ண்)ணும் வாதை வந்தே பொன் தேட்டம் கொடு மன(ம்) நொந்தே இங்கு ஆட்டம் பெரிது எழ ... தரித்திரம் என்று எண்ணப்படுகின்ற துன்பம் வந்து சேர, பொன் சேர்த்து வைக்க வேண்டிய கவலையால் மனம் வருந்தி, இவ்வாழ்க்கையில் அலைச்சல் நிரம்ப உண்டாக, வண் போதன் தீட்டும் தொடர் அது படி ஏமன் சங்காரம் போர்ச் சங்கையில் உடல் வெம் கானம் போய்த் தங்கு உயிர் கொள்ள சந்தேகம் தீர்க்கும் தனு உடன் அணுகா முன் ... செழிப்புள்ள தாமரை மலரில் இருக்கும் பிரமன் எழுதி வைத்த எழுத்து வரிசையின்படி யமன் (என் உயிரை அழிப்பதற்குச்) செய்யும் போரின் அச்சத்துடன் உடல் சுடுகாட்டுக்குப் போய்ச் சேரும்படி உயிரைக் கவர, (இந்த உயிர் பிழக்குமோ, பிழைக்காதோ என்னும்) சந்தேகம் தீரும்படி வில் முதலான ஆயுதங்களுடன் என்னை அணுகுவதற்கு முன், சந்து ஆரம் சாத்தும் புய இயல் கந்தா என்று ஏத்தும் படி என சந்தாபம் தீர்த்து என்று அடியிணை தருவாயே ... சந்தனமும் கடப்ப மாலையும் அணிந்துள்ள திருப்புயங்களை உடையவனே, இயற்றமிழ் ஆகிய (முத்தமிழ் வல்ல) கந்தப் பெருமானே என்று நான் உன்னைப் போற்றும்படி, என்னுடைய மனத் துன்பத்தைத் தீர்த்து எப்பொழுது உன் திருவடி இணைகளைத் தந்து அருள்வாய்? கங்காளன் பார்த்தன் கையில் அடி உண்டே திண்டாட்டம் கொ(ள்)ளும் நெடு கல் சாபம் சார்த்தும் கரதலன் எருது ஏறி ... எலும்பு மாலையை அணிந்தவன், அர்ச்சுனன்* கை வில்லால் அடியுண்டு திண்டாட்டம் கொண்டவன், பெரிய மேரு மலையாகிய வில்லைச் சார வைத்துள்ள திருக் கரத்தை உடையவன், (நந்தி என்னும்) ரிஷப வாகனன், கந்த ஆவம் சேர்த் தண் புது மலர் அம்பால் வெந்து ஆர்ப்பு ஒன்றிட விழி கண்டான் வெம் காட்டு அங்கு அனல் உற நடமாடி ... பற்றுக் கோடாக வைத்துள்ள அம்புக் கூட்டில் குளிர்ந்த புதிய மலர்ப் பாணங்களை உடைய மன்மதன் வெந்து கூச்சலிடும்படி (நெற்றிக்) கண் கொண்டு பார்த்தவன், கொடிய சுடு காட்டில் நெருப்பை ஏந்தி நடனம் ஆடுபவன், அங்கு ஆலம் கோத்து எண் திசை புவி மங்காது உண்டாற்கு ஒன்று அதிபதி அம் தாபம் தீர்த்து அம் பொருளினை அருள்வோனே ... அந்தப் பாற்கடலில் ஆலகால விஷத்தை ஒன்று சேர்த்து, எட்டுத் திசைகளைக் கொண்ட பூமியில் உள்ளவர்கள் அழிவுறாமல் இருக்க தானே உண்டவனாகிய சிவபெருமானுக்கு, பொருந்திய உபதேசத் தலைவனாய் (பிரணவ மந்திரத்தை அறிய வேண்டும் என்னும்) அந்த நல்ல தாகத்தைத் தீர்த்து அழகிய அந்த ஞானப் பொருளை உபதேசித்தவனே, அன்பால் அம் தாள் கும்பிடும் அவர் தம் பாவம் தீர்த்து அம் புவி இடை அஞ்சா நெஞ்சு ஆக்கம் தர வல்ல பெருமாளே. ... அன்புடன் அழகிய உனது திருவடியை வணங்கும் அடியார்களுடைய பாவத்தைத் தீர்த்து, அழகிய இப்பூமியில் எதற்கும் பயப்படாத மனதையும் செல்வத்தையும் கொடுக்க வல்ல பெருமாளே. |
* அர்ச்சுனன் இமயமலையில் தவம் செய்திருந்த போது, துரியோதனன் ஏவ, மூகன் என்னும் அசுரன் பன்றி உருவம் கொண்டு அவனைக் கொல்ல வந்தான். அதை அறிந்த சிவபெருமான் வேட உருவம் கொண்டு அப்பன்றியின் பின் பாகத்தைப் பிளந்தார். இதை அறியாத அர்ச்சுனன் பன்றி வருவதைக் கண்டு அதன் முகத்தில் ஒரு அம்பைச் செலுத்தினான். முன்பு நீ எப்படி அம்பைத் தொடுத்தாய் என்று சிவனுக்கும், அர்ச்சுனனுக்கும் விற்போர் நடந்தது. நாண் அறுபட அர்ச்சுனன் சிவனை நாண் அறுந்த வில் தண்டால் அடித்தான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.454 pg 3.455 pg 3.456 pg 3.457 WIKI_urai Song number: 1183 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1184 - mangkAdhing kAkku (common) mangAthing kAkkunj chiRuvaru muNdEying kAtRun thuNaiviyum vampArun thEkkuN didavaRi ...... theNumvAthai vanthEpon thEttang kodumana nonthEying kAttam perithezha vaNpOthan theettun thodarathu ...... padiyEman sangAram pOrcchang kaiyiludal vengAnam pOyththang kuyirkoLa santhEkan theerkkun thanuvuda ...... naNukAmun santhAranj chAththum puyaviyal kanthAen REththum padiyena santhApan theerththen RadiyiNai ...... tharuvAyE kangALan pArththan kaiyiladi yuNdEthiN dAttang koLunedu kanchApanj chArththung karathala ...... neruthERi kanthAvanj chErththaN puthumala rampAnven thArppon Ridavizhi kaNdAnveng kAttang kanaluRa ...... nadamAdi angAlang kOththeN disaipuvi mangAthuN dARkon Rathipathi anthApan theerththam poruLinai ...... yaruLvOnE anpAlan thAtkum pidumavar thampAvan theerththam puviyidai anjAnen jAkkan tharavala ...... perumALE. ......... Meaning ......... mangAthu ingu Akkum chiRuvarum uNdE ingu AtRum thuNaiviyum vampa(a)rum thEkku uNdida: I happen to have helpful children who would never let the family's prestige down and a wife who provides support to me throughout the life and I can afford to enjoy immense wealth, feasting in the company of new relatives; vaRithu e(N)Num vAthai vanthE pon thEttam kodu mana(m) nonthE ingu Attam perithu ezha: however, when the misery of poverty strikes, I have to brood over ways and means of amassing gold, and in that process, I roam about extensively in this life; vaN pOthan theettum thodar athu padi Eman sangAram pOrc changaiyil udal vem kAnam pOyth thangu uyir koLLa santhEkam theerkkum thanu udan aNukA mun: according to the destiny pre-scripted for me by Lord Brahma, seated on a lush lotus, I am scared of Yaman (God of Death) who is all set to wage a war with me to take my life till I am taken to the crematorium; until the doubt (whether this life will be spared or not) is cleared, he is going to be armed with weapons like the bow; before he actually approaches me, santhu Aram sAththum puya iyal kanthA enRu Eththum padi ena santhApam theerththu enRu adiyiNai tharuvAyE: I wish to praise You with these words "Oh Lord with broad and handsome shoulders smeared with sandalwood paste and wearing the kadappa garland, Oh Lord KandhA who is well-versed in all the three branches of Tamil"; and for that, when will You remove my mental desolation by granting Your hallowed feet? kangALan pArththan kaiyil adi uNdE thiNdAttam ko(L)Lum nedu kal chApam chArththum karathalan eruthu ERi: He wears a garland of bones; He was beaten by the bow by Arjunan* and subjected to suffering; He holds in His hallowed hand (leaning on His shoulder) Mount MEru as the bow; He mounts the bull (Nandi) as His vehicle; kantha Avam chErth thaN puthu malar ampAl venthu Arppu onRida vizhi kaNdAn vem kAttu angu anal uRa nadamAdi: He looked with His fiery eye (on His forehead) at Manmathan (God of Love), who was carrying, as his support, a quiver for arrows where he kept fresh and cool flowers, and sent him down screaming and burning; He dances on the cremation ground holding a pot of fire in His hand; angu Alam kOththu eN thisai puvi mangAthu uNdARku onRu athipathi am thApam theerththu am poruLinai aruLvOnE: On the milky ocean, He scooped the AlakAla poison in its entirety and imbibed it all by Himself in order that all the people in the eight directions of this earth could be spared their life; to that Lord SivA, You came as the apt preacher and removed His holy thirst (for understanding the significance of PraNava ManthrA) by graciously teaching Him the amazing meaning of that ManthrA! anpAl am thAL kumpidum avar tham pAvam theerththu am puvi idai anjA nenju Akkam thara valla perumALE.: Removing the sins of all Your devotees who worship Your hallowed feet with love, You are also able to grant them on this beautiful earth a mind that does not fear anything and all the wealth, Oh Great One! |
* When Arjunan went on a penance in Mount HimAlayAs, a demon mUkan (at the behest of DuryOdhanan) took the disguise of a boar and sprang to kill Arjunan. When Lord SivA came to know about this, He came to Arjunan's rescue in the disguise of a hunter and split the rear end of the boar. Unaware of this, Arjunan wielded an arrow at the face of the boar. Dispute arose between the hunter (SivA) and Arjunan as to who hit the boar first which resulted in a battle of bows. When SivA tore the string of Arjunan's bow, Arjunan beat up SivA with the bare stem of the bow. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |