பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/456

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4.4B முருகவேள் திருமுறை 17 திருமுறை கந்தாவஞ் சேர்த்தனன் புதுமல ரம்பான்வெந் தார்ப்பொன் றிடவிழி கண்டான்வெங் காட்டங் கனலுற _நடமாடி, அங்காலங் கோத்தெண் டிசைபுவி மங்கா துண் டாற்கொன் றதிபதி அந்தாயந் தீர்த்தம் பொருளினை யருள்வோனே அன்பாலந் தாட்கும் பிடுமவர் தம்பாவந் தீர்த்தம் புவியிடை - அஞ்சாநெஞ் சாக்கந் தரவல பெருமாளே (193) (47-ம் பக்கம் தொடர்ச்சி) # பார்த்தன் கையில் அடி உண்டது. அருச்சுனன் தவஞ் செய்திருந்தபொழுது துரியோதனன் ஏவலால் மூகன் என்னும் அசுரன் அருச்சுனனைக் கொல்லப் பன்றி வடிவுடன் வருவதை அறிந்த சிவபிரான் தான் ஒரு வேடரூபம் கொண்டுவந்து அம்பெய்தி அப்பன்றியின் பின்பாகத்தைப் பிளந்தார். அதன்பின் அருச்சுனனும் பன்றி வருவதைக் கண்டு அதன் முகத்தில் அம்பெய்தினான். இருவர் செலுத்தின அம்பினால் பன்றி இறந்துவீழ்ந்தது. எங்கள் வேடராஜன் முன்பு அம்பு தொடுக்க நீ எப்படிப் பின்பு அம்பு தொடுத்தாய் என்று வேடராஜனுடைய பரிவாரங்கள் அருச்சுனனைச் சண்டைக்கு இழுக்க வேடராஜனான (சிவனுக்கும்) அருச்சுனனுக்கும் விற்போர் நடந்தது. நடந்த விற்போரில் (வேடன் - சிவபிரான்) அருச்சுனனுடைய வில்லின் நாணை அறுத்து எறிந்தார். நாண் அறுபட்ட வில் தடியால் அருச்சுனன் வேடராஜனுடைய முடிமேல் அடித்தான். அவன் அடித்த அடி திருமால், பிரமன் ஆகிய சகல உயிர்கள் மீதும் விழுந்தது. 'விண்ணிலுறை வானவரில் யாரடி படாதவர் விரிஞ்சன் அளியே முதலினோர், மண்ணிலுறை மாணவரில் யாரடி படாதவர். எண்ணில் பல யோனியிலும் யாரடி படாதன. பிறப்பிலி இறப்பிலி. நரன் கை அடி உண்டபொழுதே" - வில்லி, அருச்சுனன் தவம் 107.108 - திருப்புகழ் 103-பக்கம் 243 கீழ்க்குறிப்பு. XX கன் சாபம் சார்த்தும் = மலையாகிய வில்லைத் தரித்த மேருவில் - திரிபுரம் எரித்தபோது - பாடல் 285-பக்கம் 206 கீழ்க்குறிப்பு.