திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1165 நகரம் இரு பாதமாகி (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1165 nagaramirupAdhamAgi (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனதன தான தான தனனதன தான தான தனனதன தான தான ...... தனதான ......... பாடல் ......... நகரமிரு பாத மாகி மகரவயி றாகி மார்பு நடுசிகர மாகி வாய்வ ...... கரமாகி நதிமுடிய சார மாகி உதயதிரு மேனி யாகி நமசிவய மாமை யாகி ...... எழுதான அகரவுக ரேத ரோம சகர வுணர் வான சூரன் அறிவிலறி வான பூர ...... ணமுமாகும் அதனைஅடி யேனும் ஓதி இதயகம லாலை யாகி மருவுமவ தான போதம் ...... அருள்வாயே குகனுமரு ளாண்மை கூர மகரமெனு சாப தாரி குறையகல வேலை மீது ...... தனியூருங் குழவிவடி வாக வேநம் பரதர்தவ மாக மீறு குலவுதிரை சேரு மாது ...... தனைநாடி அகிலவுல கோர்கள் காண அதிசயம தாக மேவி அரியமண மேசெய் தேக ...... வலைதேடி அறுமுகவன் மீக ரான பிறவியம ராசை வீசும் அசபைசெகர் சோதி நாத ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நகரம் இரு பாதமாகி மகர(ம்) வயிறாகி ... ('நமசிவய' என்னும் பஞ்சாக்ஷரத்தில்*1 'ந' என்னும் எழுத்து (நடராஜ மூர்த்தியின்) இரண்டு பாதங்களாகும். 'ம' என்னும் எழுத்து அவருடைய திரு வயிறு ஆகும். மார்பு நடு சிகரம் ஆகி வாய் வகரமாகி நதி முடி ய சாரம் ஆகி ... நடுவில் உள்ள 'சி' என்னும் எழுத்து அவருடைய மார்பு ஆகும். 'வ' என்னும் எழுத்து அவருடைய வாய் ஆகும். கங்கையைத் தாங்கிய திருமுடி, 'ய' என்னும் எழுத்தின் சாரமாக விளங்கும். உதய திரு மேனி ஆகி நமசிவய மாமை ஆகி எழு(த்) தான ... இங்ஙனம் தோன்றி இறைவனது திருமேனியாக விளங்கும் 'நமசிவாய' என்னும் பஞ்சாக்ஷரம் ஆகிய அழகுடன் கூடிய ஐந்து எழுத்துக்களும் அகர உகர ஏதர் ஓம சகர உணர்வான சூரன் அறிவில் அறிவான பூரணமும் ஆகும் ... அகரம், உகரம் என்னும் எழுத்துக்கள் மூல காரணமாக உள்ளவருடைய ஓம் (அ+உ+ம்) என்று கூடிய அப்பிரணவத்தின் பொருள் உணர்ந்த சூரபத்மனுடைய*2 அறிவின் அறிவொளி பரி பூரணப் பொருளாகும். அதனை அடியேனும் ஓதி இதய கமல ஆலையாகி மருவும் அவதான போதம் அருள்வாயே ... அந்தப் பொருளை அடியேனும் உணர்ந்து, எனது உள்ளத் தாமரையை ஆலயமாகக் கொண்டு விளங்கும் அனுபவ ஞானத்தை அருள்வாயாக. குகனும் அருள் ஆண்மை கூர மகரம் என்னும் சாபதாரி குறை அகல ... (தன் தாய் பார்வதி தேவிக்கு உற்ற சாபத்தைப் பொறாத) முருகன்*3 தன் அருளையும், ஆண்மையையும் நிரம்பக் காட்டுவதற்காக, சுறா மீனாகச் சாபம் பெற்ற (சிவ வாகனமாகிய) நந்தி தேவரின் குறை நீங்குமாறு, வேலை மீது தனி ஊரும் குழவி வடிவாகவே ... (பார்வதி தேவியும்) கடற்கரையில் தனியாகக் கிடந்த பெண்குழந்தை வடிவு கொண்டு, நம் பரதர் தவம் ஆக மீறு குலவு திரை சேரும் மாது தனை நாடி ... நமது வலைஞர் குலத்தவர் செய்த தவத்தின் பயனாக மிக்கு எழுகின்ற அலைகள் வீசும் கடற்கரையில் சேர்ந்த செம்படவப் பெண்ணாக வளர்ந்த பார்வதியைத் தேடி வந்து, அகில உலகோர்கள் காண அதிசயம் அதாக மேவி ... எல்லா உலகங்களில் உள்ளவர்களும் பார்க்கும்படி அதிசயமான (வலைஞர்) உருவத்துடன் வந்து, அரிய மணமே செய்து ஏகு அவ்வலை தேடி ... அருமையான திருமணம் செய்து நீங்கிய அந்த 'வலை - தேடி' யாக வந்த சிவபெருமான்தான் அறு முக வன் மீகரான ... ஆறு முகத்தராய் எனக்கு விளங்கி வன்மீக நாதர் என்னும் பெயருடன் (இந்தத் திருவாரூரில்) விளங்கி நிற்க, பிறவி யம ராசை வீசும் அசபை செகர் சோதி நாத பெருமாளே. ... பிறப்பையும், யம ராஜனையும் (இறப்பையும்) ஒதுக்கித் தள்ள வல்ல அஜபா*4 மந்திரப் பொருளாகி, உலக மக்கள் காண ஜோதி வடிவமாய் விளங்கும் பெருமாளே. |
இப்பாடலில் ஐந்தெழுத்து மந்திரத்தின் எழுத்து விளக்கமும், ஓம் என்னும் பிரணவத்தின் விளக்கமும், சிவபெருமானே ஆறு முக வள்ளலாகத் தோன்றினார் என்னும் தத்துவமும் விளக்கப்பட்டுள்ளன. சிவன் வேறு, முருகன் வேறு அல்ல என்பது கருத்து. |
(*1) பஞ்சாக்ஷர விளக்கம்: ந = திருவடி, ம = வயிறு, சி = தோள் (மார்பு), வ = முகம், ய = தலை. ஐந்து எழுத்தால் அமைந்த திருமேனியே திருவருளாகும். அத்திருமேனியே திருவடி உணர்வாகும். |
(*2) 'ஓம் சகர உணர்வான சூரன்': 'ஓம்' என்னும் பிரணவத்தின் பொருள் உணர்வை சூரபத்மன் அறிந்திருந்தான். "யார்க்கும் மூல காரணமாய் நின்ற மூர்த்தியின் மூர்த்தி யன்றோ, இப்பொழுதில் ஈசன் இவனெனும் தன்மை கண்டேன்" ... என்று சூரனுக்கு முருகவேள் தரிசனம் அளித்தபோது போற்றி நின்றான் - கந்த புராணம் 4.13.430. அந்த ஞானத்தை எனக்கும் அருள் புரிக என்று அருணகிரியார் வேண்டுகிறார். |
(*3) இது சிவபெருமான் வலை வீசிய திருவிளையாடலைக் குறிக்கும். தாய்க்கு உற்ற சாபத்தைக் கேட்ட விநாயகரும், முருகனும் கோபித்து சிவபெருமானின் புத்தகங்களைக் கடலில் வீசி எறிந்தனர். முருகனை நீ வணிகர் குலத்தில் ருத்திர சன்மன் என்ற ஊமைப் பிள்ளையாகப் பிறக்கக் கடவாய் என்று சபித்தார். தந்தை முன் அஞ்சாது நின்றதால் முருக வேள் ஆண்மையாளர் எனப்பட்டார். செம்படவப் பெண்ணாக வந்த பார்வதியை சிவபெருமான் வலைஞராக வந்து மணந்தார். |
(*4) இது அஜபா மந்திரம்: ஸோஹம் = ஸஹ + அஹம் = 'அவன் நான்' எனப்படும் ஸோஹம். அதாவது 'ஜீவாத்மாவும், பரமாத்மாவும் ஒன்று' என்று பாவித்தல் வேண்டும் என்பது கருத்து. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.406 pg 3.407 pg 3.408 pg 3.409 pg 3.410 pg 3.411 WIKI_urai Song number: 1165-1 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர் Thiru T. Balachandhar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1165 - nagaram iru pAdhamAgi (common) nakaramiru pAtha mAki makaravayi RAki mArpu nadusikara mAki vAyva ...... karamAki nathimudiya sAra mAki uthayathiru mEni yAki namasivaya mAmai yAki ...... ezhuthAna akaravuka rEtha rOma sakara vuNar vAna cUran aRivilaRi vAna pUra ...... NamumAkum athanaiadi yEnum Othi ithayakama lAlai yAki maruvumava thAna pOtham ...... aruLvAyE gukanumaru LANmai kUra makaramenu sApa thAri kuRaiyakala vElai meethu ...... thaniyUrum kuzhavivadi vAka vEnam paratharthava mAka meeRu kulavuthirai sEru mAthu ...... thanainAdi akilavula kOrkaL kANa athisayama thAka mEvi ariyamaNa mEsey thEka ...... valaithEdi aRumukavan meeka rAna piRaviyama rAsai veesum asapaisekar jOthi nAtha ...... perumALE. ......... Meaning ......... nakaram iru pAtha mAki makaravayi RAki: [In the five-lettered ManthrA "Namasivaya"*1 ] 'Na' represents the two hallowed feet (of Lord NadarAjar); 'ma' represents His abdomen; mArpu nadusikara mAki vAy vakaramAki: His chest is denoted by the middle letter 'si'; His mouth is represented by the letter 'va'; nathimudiya sAra mAki uthayathiru mEni yAki: and the essence of the letter 'ya' is to be found in His matted hair with the River Ganga; namasivaya mAmai yAki ezhuthAna: thus all the sacred and exquisite letters of the five-lettered ManthrA "NAMASIVAYA" represent the hallowed body of the Lord Almighty; akaravuka rEthar Oma sakara vuNar vAna cUran aRivilaRi vAna pUraNamum Akum: the letters 'a' and 'u' constitute the initial letters of OM (AUM) whose causal One is that Lord, and the significance of OM was known to the demon SUran*2 whose Knowledge was one of total enlightenment! athanaiadi yEnum Othi ithayakama lAlai yAki maruvumava thAna pOtham aruLvAyE: as I too would like to realise the significance of that ManthrA, kindly bless me with that Knowledge to be experienced inside the lotus temple of my heart! gukanumaru LANmai kUra makaramenu sApa thAri kuRaiyakala: (Unable to bear the curse heaped on His mother PArvathi), Lord Murugan*3 came to this world to reveal His grace and valour and also to eradicate the curse imposed on (SivA's vehicle) Nandi, who was born as a shark; vElai meethu thaniyUrum kuzhavivadi vAkavE: (Devi PArvathi) appeared as a lonely baby-girl on the sea-shore nam paratharthava mAka meeRu kulavuthirai sEru mAthu thanainAdi: and was reared by our fishermen-folk, to whose family the Goddess came as a boon and grew up on the wavy sea-shore as a fisher-woman; wooing her, akilavula kOrkaL kANa athisayama thAka mEvi: as the entire world watched, He came assuming a wonderful disguise of a fisherman (with a fishing net) ariyamaNa mEsey thEka valaithEdi: and wedded the fisherwoman nicely and left with her; that pursuer with the fishing net was none other than Lord SivA aRumukavan meeka rAna: who appears to me as the six-faced Murugan, (having an abode in this place, ThiruvArUr) with the name of VanmeekanAthar; piRaviyama rAsai veesum asapaisekar jOthi nAtha perumALE.: You stand as an effulgence in the form of ajapA ManthrA*4 that is capable of doing away with birth and Lord Yaman (death), Oh Great One! |
In this song, the explanation of the five letters of NAMASIVAYA ManthrA is provided, the significance of PraNava ManthrA OM is stated and the fact that Lord SivA and the six-faced Murugan are one and the same is established. |
(*1) Explanation of NAMASIVAYA: NA = the holy feet; MA = the abdomen; SI = chest and shoulders; VA = the mouth; and YA = the head; thus the body of Lord Almighty is the graceful ManthrA. |
(*2) The demon SUran realised at the end the significance of OM. When Lord Murugan appeared in his vision before SUran was killed, he realised that the Causal One in this world had come in the form of Murugan - KandapurANam. AruNagirinAthar seeks the same knowledge as was graciously bestowed on SUran. |
(*3) This is an episode from ThiruviLaiyAdal PurANam: Once, PArvathi was cursed by Lord SivA to be born as a fisherwoman on the earth. His vehicle, Nandi, was also cursed to be born as a shark. Unable to bear the curse on their mother, Ganapathi and Murugan threw all the text books of SivA into the sea. Murugan was also cursed to be born as a deaf and mute child with the name Rudrasanman in a merchant family. As Murugan boldly faced His father with composure, His valour is praised here. Ultimately, Lord SivA came to this world, disguised as a fisherman, with a fishing net in His hand, and married the fisherwoman (PArvathi). |
(*4) This is ajapA ManthrAm: "sOham" meaning saha (He) + aham (I) = He is I. In other words, the soul and the Lord are one and the same. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |