திருப்புகழ் 1117 எற்றா வற்றா  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1117 etRAvatRA  (common)
Thiruppugazh - 1117 etRAvatRA - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

எற்றா வற்றா மட்டா கத்தீ
     யிற்காய் செக்கட் ...... பிறைவாளே

யிற்றார் கைப்பா சத்தே கட்டா
     டிக்கோ பித்துக் ...... கொடுபோமுன்

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பா
     ரொட்டோம் விட்டுக் ...... கழியீரென்

றுற்றோ துற்றே பற்றா நிற்பா
     ரக்கா லத்துக் ...... குறவார்தான்

பற்றார் மற்றா டைக்கே குத்தா
     பற்றா னப்பிற் ...... களைவோனே

பச்சே னற்கா னத்தே நிற்பாள்
     பொற்பா தத்திற் ...... பணிவோனே

முற்றா வற்றா மெய்ப்போ தத்தே
     யுற்றார் சித்தத் ...... துறைவோனே

முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

எற்றா வற்றா மட்டாகத் தீயில் காய் செம் கண் ... உதைத்து
மோதுபவர்களும், தீயும் ஒளியும் மட்டாகும்படி காய்ந்த சிவந்த
கண்களை உடையவர்களும்,

பிறைவாள் எயிற்றார் கைப் பாசத்தே கட்டு ... பிறை போல்
வளைந்து, வாள் போலக் கூரியதாக உள்ள பற்களை
உடையவர்களுமான யம தூதர்கள் தங்களுடைய பாசக் கயிற்றால்
கட்டி,

ஆடிக் கோபித்துக் கொடுபோமுன் ... ஆட்டுவித்து, அலைத்துக்
கோபித்து (என்னைக்) கொண்டு போவதற்கு முன்பாக,

உற்றார் பெற்றார் சுற்றா நிற்பார் ஒட்டோம் விட்டுக் கழியீர்
என்று
... சுற்றத்தாரும், நண்பர்களும், பெற்றோர்களும், சூழ்ந்து
நிற்பவர்களும் உம்மை விட்டுப் பிரிய மாட்டோம், போகாதீர் என்று

உற்று ஓதுற்றே பற்றா நிற்பார் ... சமீபத்தில் இருந்து கொண்டு
கூறிக் கூறி அன்பு காட்டி நிற்பார்கள்.

அக் காலத்துக்கு உறவு ஆர்தான் ... அந்த உயிர் போகும்
சமயத்துக்கு (இறைவனைத் தவிர) வேறு யார்தான் துணையாக
நிற்பார்கள்?

பற்றார் மல் தாடைக்கே குத்தா பல் தான் அப்பில்
களைவோனே
... பகைவர்களுடைய வலிமை மிகுந்த தாடையில்
குத்தி, பற்களை அம்பினால் தகர்த்து எறிவோனே,

பச்சு ஏனல் கானத்தே நிற்பாள் பொற் பாதத்திற்
பணிவோனே
... பசுமையான தினைப் புனத்தின் கண் (காவல்
கொண்டு) நிற்கும் வள்ளியின் அழகிய பாதங்களில் பணிந்து
வணங்குபவனே,

முற்றா வற்றா மெய்ப்போ தத்தே யுற்றார் சித்தத்
துறைவோனே
... முற்றி வற்றாததான மெய்ஞ்ஞான நிலையில்
உள்ளவர்களின் மனத்தில் வீற்றிருப்பவனே,

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான* அக்கினி
வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே,
முக்தி அளிக்கும் பெருமாளே.


* மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:

     யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது.
     தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.
     காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.

... திருமுருகாற்றுப்படை.


இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     341 - கொத்தார் பற் கால், 
     595 - மெய்ச் சார்வு அற்றே, 
     768 - கட்காமக்ரோத, 
     1116 - உற்பாதம் பூ, 
     1118 - செட்டாகத் தேனை, 
     1119 - பட்டு ஆடைக்கே, 
     1120 - பத்து ஏழு எட்டு, 
     1121 - பொற்கோ வைக்கே, 
     1122 - பொற் பூவை, 
     1123 - மெய்க்கூணைத் தேடி  ... என்று தொடங்கும் பாடல்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.270  pg 3.271  pg 3.272  pg 3.273 
 WIKI_urai Song number: 1120 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 1117 - etRA vatRA (common)

etRA vatRA mattA kaththee
     yiRkAy sekkat ...... piRaivALE

yitRAr kaippA saththE kattA
     dikkO piththuk ...... kodupOmun

utRAr petRAr sutRA niRpA
     rottOm vittuk ...... kazhiyeeren

RutRO thutRE patRA niRpA
     rakkA laththuk ...... kuRavArthAn

patRAr matRA daikkE kuththA
     patRA nappiR ...... kaLaivOnE

pacchE naRkA naththE niRpAL
     poRpA thaththiR ...... paNivOnE

mutRA vatRA meyppO thaththE
     yutRAr siththath ...... thuRaivOnE

muththA muththee yaththA suththA
     muththA muththip ...... perumALE.

......... Meaning .........

etRA vatRA mattAkath theeyil kAy sem kaN: They kick and lambast; their reddish eyes are so fiery that fire and light pale in comparison;

piRaivAL eyitRAr kaip pAsaththE kattu: their teeth are crooked like the crescent moon and sharp like the sword; they are the messengers of Yaman (God of Death) who tie with their rope (of attachment)

Adik kOpiththuk kodupOmun: shaking my body, tossing it about with rage and are ready to take me away; before that,

utRAr petRAr sutRA niRpAr ottOm vittuk kazhiyeer enRu: my relatives, friends, parents and all other surrounding me say "We shall not let you go; do not leave us yet"

utRu OthutRE patRA niRpAr: so saying repeatedly, they stand close by, showering their love;

ak kAlaththukku uRavu ArthAn: Who else (other than God) could stand guard at the time of death?

patRAr mal thAdaikkE kuththA pal thAn appil kaLaivOnE: Hitting at the strong jaws of the enemies, You knocked off their teeth with Your arrow, Oh Lord!

pacchu Enal kAnaththE niRpAL poR pAthaththiR paNivOnE: She stands guard to the fertile crop of millet in the field; You prostrate at the beautiful feet of that VaLLi!

mutRA vatRA meyppO thaththE yutRAr siththath thuRaivOnE: They have realised true knowledge which is ripe and never shallow; in the hearts of those devotees, You are happily seated!

muththA muththee yaththA suththA: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy fires*! You are impeccably pure!

muththA muththip perumALE.: You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One!


* Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai:

     YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs;
     DakshinAgni - Fire for offering sacrifices to the celestials;
     Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth.


The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this:

     0341 - koththAr paR kAl, 
     0595 - meych chArvu atRE, 
     0768 - katkAmakrOtha, 
     1116 - uRtpAtham pU, 
     1118 - settAgath thEnai, 
     1119 - pattu AdaikkE, 
     1120 - paththu Ezhu ettu, 
     1121 - poRtkO vaikkE, 
     1122 - poRt pUvai    and
     1123 - meikkUNai thEdi. 

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1117 etRA vatRA - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]