திருப்புகழ் 1116 உற்பாதம் பூ  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 1116 uRtpAthampU  (common)
Thiruppugazh - 1116 uRtpAthampU - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தா தத்தா தத்தா தத்தா
     தத்தா தத்தத் ...... தனதான

......... பாடல் .........

உற்பா தப்பூ தக்கா யத்தே
     யொத்தோ டித்தத் ...... தியல்காலை

உட்பூ ரித்தே சற்றே சற்றே
     யுக்கா ரித்தற் ...... புதனேரும்

அற்பா யிற்றாய் நிற்பா ரைப்போ
     லப்பா வித்துத் ...... திரிவேனுக்

கப்பா சத்தா லெட்டா அப்பா
     லைப்போ தத்தைப் ...... புரிவாயே

பொற்பார் பொற்பார் புத்தே ளிர்க்கா
     கப்போய் முட்டிக் ...... கிரிசாடிப்

புக்கா ழிச்சூழ் கிட்டா கிச்சூர்
     பொட்டா கக்குத் ...... தியவேலா

முற்பா டப்பா டற்றா ருக்கோர்
     முட்கா டற்கப் ...... பொருளீவாய்

முத்தா முத்தீ யத்தா சுத்தா
     முத்தா முத்திப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

உற்பாதம் பூ தக் காயத்தே ... கெட்ட சகுனங்களைக் காட்டவல்ல
ஐம்பூதங்களால் ஆகிய இந்த உடலைப் போற்றுதற்கு,

ஒத்து ஓடித் தத்து இயல் காலை உள் பூரித்தே சற்றே சற்றே
உக்காரித்து
... உடன்பட்டு ஓடி, ஆபத்துக்கள் நேரும்போது உள்ளம்
கவலையால் நிரம்பப்பட்டு, கொஞ்சம் கொஞ்சமாக ஐயோ என்று
சத்தமிட்டு வேதனைப்பட்டு,

அற்புதன் நேரும் அற்பாய் இல் தாய் நிற்பாரைப் போலப்
பாவித்துத் திரிவேனுக்கு
... கடவுளிடத்தே உண்டாகும் அன்பு
பூண்டவராய் இல்லறத்தைத் தழுவி நிற்கின்ற மக்களைப் போல்
ஏமாற்றித் திரிகின்ற எனக்கு,

அப்பாசத்தால் எட்டா அப்பாலைப் போதத்தைப் புரிவாயே ...
அந்தப் பாசங்களால் எட்ட முடியாமல் அப்பாற்பட்டு நிற்கும் ஞான
அறிவை உபதேசித்து அருள்வாயாக.

பொற்பு ஆர் பொன் பார் புத்தேளிர்க்காகப் போய் முட்டிக்
கிரி சாடி
... அழகு நிறைந்த பொன் உலகத்தில் இருந்த
தேவர்களுக்காகப் போர்க்களத்துக்குப் போய் அசுரர்களை எதிர்த்து,
கிரெளஞ்ச மலையை அழித்து,

புக்கு ஆழிச்சூழ் கிட்டாகிச் சூர் பொட்டாகக் குத்திய வேலா ...
கடலிடைப் புகுந்து, (சூரனுடைய) சூழ்ச்சி நிலையை (மாமரமாக
நின்றதை) சமீபித்து, அந்தச் சூரன் பொடியாகும்படி அவனை வேலால்
குத்திய வேலனே,

முன் பாடப் பாடு அற்றாருக்கு ஓர் முள் காடு அற்கப்
பொருள் ஈவாய்
... (பொய்யாமொழிப் புலவர்) முன்னதாகப் பாட,
அப்பாட்டைக் குற்றமின்றிப் பாடாத அப்புலவருக்கு, ஒரு முள் தைக்கும்
காடு என்று அப்புலவர் குறித்த இடத்தில் பிழை நிலை பெற்றிருப்பதைக்
காட்டி, சரியான பொருளைக் காட்டும் பாடலை அப்புலவருக்கு
அளித்தவனே*,

முத்தா முத்தீ யத்தா சுத்தா முத்தா முத்திப் பெருமாளே. ...
முத்துப் போல அருமை வாய்ந்தவனே, மூன்று வகையான** அக்கினி
வேள்விக்குத் தலைவனே, பரிசுத்தமானவனே, பற்று அற்றவனே, முக்தி
அளிக்கும் பெருமாளே.


* சிவனையே பாடும் பொய்யாமொழிப் புலவர் முருகனைப் பாடாது இருக்க,
அவரது ஆணவத்தை அடக்க முருகன் வேலைத் தோளில் தாங்கி வேடனாக
வந்து காட்டில் புலவர் தனிவழி செல்கையில் மடக்கி ஆட்கொண்டார்.


** மூன்று வகையான அக்கினிகள் பின்வருமாறு:

     யாகவனீயம் - வேதத்தை வழங்கச் செய்வது.
     தக்ஷிணாக்கினி - தேவர்களுக்குக் காணிக்கை கொடுக்கச் செய்வது.
     காருகபத்தியம் - பூலோகத்தை ரக்ஷிக்கச் செய்வது.

... திருமுருகாற்றுப்படை.


இந்த முடிவுள்ள மற்ற 10 திருப்புகழ் பாடல்கள் பின்வருமாறு:

     341 - கொத்தார் பற் கால், 
     595 - மெய்ச் சார்வு அற்றே, 
     768 - கட்காமக்ரோத, 
     1117 - எற்றா வற்றா, 
     1118 - செட்டாகத் தேனை, 
     1119 - பட்டு ஆடைக்கே, 
     1120 - பத்து ஏழு எட்டு, 
     1121 - பொற்கோ வைக்கே, 
     1122 - பொற் பூவை, 
     1123 - மெய்க்கூணைத் தேடி  ... என்று தொடங்கும் பாடல்கள்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.268  pg 3.269  pg 3.270  pg 3.271 
 WIKI_urai Song number: 1119 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 1116 - uRtpAtham pU (common)

uRpA thappU thakkA yaththE
     yoththO diththath ...... thiyalkAlai

utpU riththE satRE satRE
     yukkA riththaR ...... puthanErum

aRpA yitRAy niRpA raippO
     lappA viththuth ...... thirivEnuk

kappA saththA lettA appA
     laippO thaththaip ...... purivAyE

poRpAr poRpAr puththE LirkkA
     kappOy muttik ...... kirisAdip

pukkA zhicchUzh kittA kicchUr
     pottA kakkuth ...... thiyavElA

muRpA dappA datRA rukkOr
     mutkA daRkap ...... poruLeevAy

muththA muththee yaththA suththA
     muththA muththip ...... perumALE.

......... Meaning .........

uRpAtham pUthak kAyaththE: This body is constituted by the five elements that could cause ill-omens;

oththu Odith thaththu iyal kAlai uL pUriththE satRE satRE ukkAriththu: to nurture that body, I managed to run along with it; whenever I faced perils, my heart filled up with worries and I used to bemoan little by little until my sobbing became loud;

aRputhan nErum aRpAy il thAy niRpAraip pOlap pAviththuth thirivEnukku: I pretended to act like people fully involved in family life and totally devoted to God;

appAsaththAl ettA appAlaip pOthaththaip purivAyE: kindly teach me the true knowledge that stands alone, way beyond the reach of all those worldly attachments!

poRpu Ar pon pAr puththELirkkAkap pOy muttik kiri sAdi: To help the DEvAs who used to live in the beautiful and golden celestial land, You went to the battlefield; You confronted the demons and knocked down the mount Krouncha;

pukku AzhicchUzh kittAkic chUr pottAkak kuththiya vElA: You entered the sea approaching the demon in disguise (as a mango tree) and wielded the spear piercing that SUran and smashing him to pieces, Oh Lord!

mun pAdap pAdu atRArukku Or muL kAdu aRkap poruL eevAy: When the Poet (PoyyAmozhi) first sang a song, there was a flaw in the meaning; You pointed out the flaw and offered him a revised song with correct meaning, Oh Lord!*

muththA muththee yaththA suththA: You are like a rare pearl! You are the deity in charge of three kinds of holy sacrificial fires**! You are impeccably pure!

muththA muththip perumALE.: You are totally detached! You are the only one that can grant us liberation, Oh Great One!


* PoyyAmozhi was a poet bent upon praising only SivA and was totally against Murugan. In an interesting episode, Murugan came in the disguise of a hunter with a spear, encountered the poet in a forest, challenged him for a debate and eventually won him to His side.


** Three kinds of holy fires as per the ancient Tamil Text ThirumurugAtRuppadai:

     YAgavaneeyam - Fire for offering sacrifices to obtain the VEdAs;
     DakshinAgni - Fire for offering sacrifices to the celestials;
     Karukapathyam - Fire for offering sacrifices for the prosperity of the earth.


The following are 10 other songs from Thiruppugazh having the same last line as this:

     0341 - koththAr paR kAl, 
     0595 - meych chArvu atRE, 
     0768 - katkAmakrOtha, 
     1117 - etRA vatRA, 
     1118 - settAgath thEnai, 
     1119 - pattu AdaikkE, 
     1120 - paththu Ezhu ettu, 
     1121 - poRtkO vaikkE, 
     1122 - poRt pUvai    and
     1123 - meikkUNai thEdi. 

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 1116 uRtpAtham pU - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]