திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1052 மன கபாட (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1052 managapAda (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தான தானான தனன தான தானான தனன தான தானான ...... தனதான ......... பாடல் ......... மனக பாட பாடீர தனத ராத ராரூப மதன ராச ராசீப ...... சரகோப வருண பாத காலோக தருண சோபி தாகார மகளி ரோடு சீராடி ...... யிதமாடிக் குனகு வேனை நாணாது தனகு வேனை வீணான குறைய னேனை நாயேனை ...... வினையேனைக் கொடிய னேனை யோதாத குதலை யேனை நாடாத குருட னேனை நீயாள்வ ...... தொருநாளே அநக வாம னாகார முநிவ ராக மால்தேட அரிய தாதை தானேவ ...... மதுரேசன் அரிய சார தாபீட மதனி லேறி யீடேற அகில நாலு மாராயு ...... மிளையோனே கனக பாவ னாகார பவள கோம ளாகார கலப சாம ளாகார ...... மயிலேறுங் கடவு ளேக்ரு பாகார கமல வேத னாகார கருணை மேரு வேதேவர் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... மனகபாட ... கதவால் அடைக்கப்பட்டது போன்ற ரகசிய மனம் உள்ளவர்களும், பாடீர தன தராதரா ரூப ... சந்தனப் பூச்சு அப்பிய மலை போன்ற மார்பகமுள்ள உருவத்தாரும், மதன ராச ராசீப சரகோப ... மன்மத ராஜனின் தாமரைமலர் அம்பு பாய்ந்த கோபத்துக்கு ஆளாகி, வருண பாதக அலோக ... குல வேற்றுமையால் ஏற்படும் குற்றத்தைப் பாராட்டாமல் எல்லாரோடும் சேர்பவர்களும், தருண சோபித ஆகார ... இளமை வாய்ந்த உடலைக் காட்டிக்கொண்டு இருப்பவருமான மகளிரோடு சீராடி யிதமாடிக் குனகுவேனை ... பொது மாதர்களோடு செல்வச் செருக்குடன் விளையாடியும் இன்பத்தில் திளைத்தும் காலம் கழிப்பவனும், நாணாது தனகுவேனை ... வெட்கம் இன்றிச் சரசம் செய்பவனும், வீணான குறையனேனை ... நாளை வீணாக்கும் குறையை உடையவனும், நாயேனை வினையேனைக் கொடியனேனை ... நாயைப்போன்றவனும், கொடுவினையாளனும், பொல்லாதவனும், ஓதாத குதலையேனை ... உன்னைப் போற்றிப் புகழாது வெறும் கொச்சை மொழி பேசித் திரிபவனும், நாடாத குருடனேனை ... உன்னை விரும்பித் தேடாத குருடனுமான என்னையும் நீயாள்வ தொருநாளே ... நீ ஆண்டருளும்படியான நாள் ஒன்று உண்டா? அநக வாமனாகார முநிவராக மால்தேட ... பாவமற்ற குறுமுநி வாமனராக அவதாரம் செய்த திருமால் (சிவனாரின்) பாதத்தைத் தேட அரிய தாதை தானேவ மதுரேசன் ... அவருக்கு எட்டாதவராய் நின்ற உன் தந்தை மதுரைச் சொக்கநாதனால் (பாண்டிய மன்னனுக்கு) அளிக்கப்பட்ட அரிய சாரதாபீடம் அதனிலேறி ஈடேற ... அருமையான சரஸ்வதியின் இருப்பிடமான சங்கப்பலகையில்* ஏறி, அகில நாலும் ஆராயும் இளையோனே ... நான்கு திக்கிலும் உள்ள உலகத்து உயிர்களை எல்லாம் ஆராய்ந்து காக்கும் இளையோனே, கனக பாவனாகார பவள கோமளாகார ... பொன் போன்ற தூய உடம்பினனே, பவளம் போன்ற அழகிய சிவந்த மேனியனே, கலப சாமளாகார மயிலேறும் கடவுளே ... தோகை உடையதும், பச்சை நிறமானதுமான மயிலின் மீது ஏறும் கடவுளே, க்ருபாகார கமல வேதனாகார ... அருள்வடிவோனே, இதயத் தாமரையில் பொருந்திய ஞான சொரூபனே, கருணை மேருவே தேவர் பெருமாளே. ... கருணைப் பெருமலையே, தேவர்களின் பெருமாளே. |
* மதுரையில் சரஸ்வதிதேவியின் 48 எழுத்துக்களின் அம்சங்கள் 48 புலவர்களாகத் தோன்றி, பாண்டியனின் ஆதரவோடு தமிழ்ச் சங்கம் அமைத்தனர். மதுரை சோமசுந்தரக்கடவுள் இவர்களுக்கு ஒரு சங்கப்பலகை தந்தருளினார். முருகன் இந்தச் சாரதாபீடத்தில் ருத்ரசன்மன் என்ற புலவராக அமர்ந்து மற்ற புலவர்களிடையே ஏற்பட்ட சண்டையைத் தீர்த்து வைத்தார் - திருவிளையாடற் புராணம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.142 pg 3.143 pg 3.144 pg 3.145 pg 3.146 pg 3.147 WIKI_urai Song number: 1055 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 1052 - mana gapAda (Madhurai) mana kapAta pAteera thana dharAdharA rUpa madhana rAja rAjeepa ...... sarakOpa varuNa pAthaka AlOka tharuNa sObitha AkAra magaLirOdu seerAdi ...... idhamAdik kunagu vEnai nANAdhu thanagu vEnai veeNAna kuRaiya nEnai nAyEnai ...... vinaiyEnai kodiya nEnai OdhAdha kudhalai yEnai nAdAdha kuruda nEnai nee ALvadhu ...... orunALE anaka vAmana AkAra muniva rAga mAl thEda ariya thAdhai thAnEva ...... madhurEsan ariya sAradhA peetam adhanilEri eedERa akila nAlum ArAyum ...... iLaiyOnE kanaka pAvanA kAra pavaLa kOma LAkAra kalaba sAma LAkAra ...... mayilERung kadavuLE krupAkAra kamala vEdha nAkAra karuNai mEruvE dhEvar ...... perumALE. ......... Meaning ......... mana kapAta: They have a clandestine heart like a closed door; pAteera thana dharAdharA rUpa: they have buxom bosoms like hills, coated with sandal paste; madhana rAja rAjeepa sarakOpa: being aroused by the angry flowery arrows flung by the God of Love (Manmathan), varuNa pAthaka AlOka: they indiscriminatingly cohabit with men of any lineage; tharuNa sObitha AkAra: they proudly display their youthful bodies; magaLirOdu seerAdi idhamAdik kunagu vEnai: and these are the whores with whom I indulge in carnal pleasure, showing off my richness and pride, nANAdhu thanagu vEnai: and flirt shamelessly! veeNAna kuRaiya nEnai nAyEnai vinaiyEnai kodiya nEnai: My blemish is in wasting time like this; I am the lowly dog, doing my bad deeds, and am very wicked. OdhAdha kudhalai yEnai: Without praising Your glory, I roam around speaking gibberish. nAdAdha kuruda nEnai: I am totally blind, having failed to seek You. nee ALvadhu orunALE: Yet, will You take me over one of these days? anaka vAmana AkAra muniva rAga mAl thEda: He took the form of an innocent and dimunitive sage (VAmana); He is Vishnu; He went to find the feet ariya thAdhai thAnEva madhurEsan: of Your Father SivA who stood beyond His reach. That SivA, as Lord ChokkanAthan of Madhurai, presented (to King PANdiyan) ariya sAradhA peetam adhanilEri eedERa: a unique plank, the Seat of Sharada,* on which You mounted akila nAlum ArAyum iLaiyOnE: and protected all lives in this world, covering the four directions, by Your deep insight, Oh Young One! kanaka pAvanA kAra pavaLa kOma LAkAra: You have the purest body shining like gold and Your complexion is like the beautiful red coral! kalaba sAma LAkAra mayilERung kadavuLE: You are the Lord mounting the pretty-feathered and green Peacock! krupAkAra kamala vEdha nAkAra: Oh Compassionate One, You reside in the lotus of my heart in the form of Wisdom! karuNai mEruvE dhEvar perumALE.: You are the Mount MEru of Grace and the Lord of the celestials, Oh Great One! |
* In Madhurai, the 48 letters, which are the aspects of Goddess Saraswathi, took birth as 48 Tamil Poets and adorned the court of King PANdiyan. They formed an assembly of poets (Tamil Sangham) under the auspices of PANdiyan. Lord Somasundaram (SivA), presented a plank, known as Sharada Peetam (Sanghap palakai), on which Murugan mounted as Rudrasanman, a poet, and resolved the disputes among the other poets - ThiruviLaiyAdal PurANam. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |