பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 137 (வருண பாதகம்) குல வேற்றுமையால் வரும் பாவம் (அலோகம்) (தம்) கண்ணுக்குப் புலப்படாதவரும், இளமை அழகு வாய்ந்த (ஆகாரம்) உடம்பொடு கூடியவருமான மாதர்களுடன் செல்வச்செருக்குடன் விளையாடியும், இன்பம் திளைத்தும் (குனகுவேனை) கொஞ்சிக் காலம் கழிப்பவனும், (நாணாது தனகுவேனை) கூச்சமில்லாமல் - வெட்க்ப்படாமல் - சரசஞ் செய்பவனும், வீண்காலம் போக்கும் குறையை உடையவனும், நாய் அனையவனும், வினைக்கு ஈடானவனும், பொல்லாதவனும், (உன்னைப்) போற்றி ஒதாத கொச்சைப் பேச்சு உடையவனும், (உன்னை) விரும்பித் தேடாத குருடனுமான என்னை நீ ஆண்டருளும்படியான ஒருநாள் உண்டா! (அநக) பாபமற்றவனே! (அல்லது) பாவமற்ற வாமன ஆகாரம் - குறள்வடிவம் கொண்ட (முனிவர் ஆகம்) தவமுநிவர து (உடல்) உருவத்தை (மாவலிக்காக எடுத்த திருமால் தேட அவருக்கு (அரியராய்) எட்டாதவராய் நின்ற (தாதை) உன் தந்தையாகிய (தானேவ மதுரேசன்) - (மதுரேசன் தான் ஏவ). மதுரைச் சொக்கநாதர் (ஏவ) அனுப்ப (அவர் சொல்லின்படி) - (அல்லது அரியதாதை தான் ஏவ, (மதுரேசன்) அந்த மதுரைச் சொக்கப் பெருமானால் அளிக்கப்பட்ட) ருமை வாயப்ர் (சார பீடம்) சரஸ்வதியின் @g೨ತಿಸಿ: •ax'g9) ஏறி விင္ဆို (ஈடேற) உலகத்தார் உய்ய (அகில நாலும்) நாற்றின்ச்யில் உள்ள ர்களை எல்லாம் ஆய்ந்து புரக்கும் இளையோனே! அல்லது ஏறி, நாற்றிசையோரும் அறியப் புலவ்ர்களின் உரையை ஆராய்ந்தவனே! "சதுரமா யளவிரண்டு சாணதிப் பலகை யம்ம மதியினும் வாலிதாகும் மந்திர வலிய தாகும். முதியதும் போல்வார்க் கெல்லாம் முழம் வளர்ந் திருக்கை நல்கும். இது துமக்களவு கோலாய் இருக்குமென் றியம்பி யீந்தார்" - திருவிளை - சங்கப்பலகை தந்த படலம் 25 " புலமை துாக்கி அளப்பதாய்" இருந்த காரணத்தால் இந்தச் சங்கப் பலகையைச் சாரதா பீடம்' என்ற அருமையான சொற்றொடரால் அருணகிரியார் குறிப்பிடுகின்றார். இந்தச் சாரதா பீடத்தில் முருகவேள் சிவபிரான் திருவுளப்படி - அமர்ந்து - சங்கப் புலவர்களுக்குள் ஏற்பட்ட கலகத்தைத் தீர்த்தருளிய வரலாற்றைப் பாடல் 350-பக்கம் 378 கீழ்க்குறிப்பிற் காண்க 0 ஈடேற = உலகத்தார்) உப்ய. * அகில நூலும் ஆராயும் என்றும் பாடம். * புருடார்த்தம் நான்கையும் மறை நான்கையும் எனலுமாம்.