திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1015 விடம் என அயில் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1015 vidamenaayil (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தனதன தனதன தனதன தனதன தனதன தத்தத் தத்தன தத்தத் தத்தன ...... தந்ததான ......... பாடல் ......... விடமென அயிலென அடுவன நடுவன மிளிர்வன சுழல்விழி வித்தைத் குப்பக ரொப்புச் சற்றிலை ...... யென்றுபேசும் விரகுடை வனிதைய ரணைமிசை யுருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டுயிர் தட்டுப் பட்டுவு ...... ழன்றுவாடும் நடலையில் வழிமிக அழிபடு தமியனை நமன்விடு திரளது கட்டிச் சிக்கென வொத்திக் கைக்கொடு ...... கொண்டுபோயே நரகதில் விடுமெனு மளவினி லிலகிய நறைகமழ் திருவடி முத்திக் குட்படு நித்யத் தத்துவம் ...... வந்திடாதோ இடியென அதிர்குரல் நிசிசரர் குலபதி யிருபது திரள்புய மற்றுப் பொற்றலை தத்தக் கொத்தொடு ...... நஞ்சுவாளி எரியெழ முடுகிய சிலையின ரழகொழு கியல்சிறு வினைமகள் பச்சைப் பட்சித னைக்கைப் பற்றிடு ...... மிந்த்ரலோகா வடவரை யிடிபட அலைகடல் சுவறிட மகவரை பொடிபட மைக்கட் பெற்றிடு முக்ரக் கட்செவி ...... யஞ்சசூரன் மணிமுடி சிதறிட அலகைகள் பலவுடன் வயிரவர் நடமிட முட்டிப் பொட்டெழ வெட்டிக் குத்திய ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... விடம் என அயில் என அடுவன நடுவன மிளிர்வன சுழல் விழி ... நஞ்சு போலவும் அம்பு போலவும் கொல்லும் தன்மையை உடையனவாய், யமனுக்கு ஒப்பாக விளங்குவனவாய், சுழலுகின்ற கண்களின் வித்தைக்குப் பகர் ஒப்புச் சற்று இ(ல்)லை என்று பேசும் ... (மயக்கும்) வித்தைக்கு சொல்லக் கூடிய உவமைப் பொருள் ஏதும் இல்லை என்று சொல்லத்தக்க விரகுடை வனிதையர் அணை மிசை உருகிய வெகுமுக கலவியில் இச்சைப் பட்டு உயிர் தட்டுப்பட்டு உழன்று வாடும் ... தந்திரத்தைக் கொண்ட பெண்களின் படுக்கை மீதில் மனம் உருகிய பலவிதமான சிற்றின்ப லீலைகளில் ஆசைப்பட்டு, அதனால் உயிர் அலைச்சல் உற்று கலங்கி வாடுகின்ற, நடலையில் வழி மிக அழி படு தமியனை நமன் விடு திரள் அது கட்டிச் சிக்கென ஒத்திக் கைக்கொடு கொண்டு போயே ... துன்பந் தரும் வழியில் மிகவும் அழிந்து போகின்ற தனியனாம் என்னை, யமன் அனுப்பும் தூதர் கூட்டம் கட்டி அகப்படும்படி, கைகளை இறுகப் பிணைத்து இழுத்துக் கொண்டு போய், நரகதில் விடும் எனும் அளவினில் இலகிய நறை கமழ் திருவடி முத்திக்குள் படு நித்யத் தத்துவம் வந்திடாதோ ... இவனை நரகத்தில் தள்ளுங்கள் என்னும் காலம் வரும் போது, விளங்கும் நறு மணம் வீசும் நின் திருவடியாகிய முக்தி நிலையில் சேரும் அழியா இன்ப நிலை எனக்கு ஏற்படக் கூடாதோ? இடி என அதிர் குரல் நிசிசரர் குல பதி இருபது திரள் புயம் அற்றுப் பொன் தலை தத்தக் கொத்தொடு நஞ்சு வாளி எரிஎழ முடுகிய சிலையினர் ... இடி போல் ஒலிக்கும் குரலை உடையவனும், அசுரர்களுடைய அரக்கர் குலத்துக்குத் தலைவனும் ஆகிய ராவணனுடைய இருபது திரண்ட புயங்கள் அறுந்து விழவும், அழகிய (பத்து) தலைகளும் கொத்தாகிச் சிதறி விழவும், விஷம் கொண்ட அம்பு தீயைக் கக்கும்படி செலுத்திய (கோதண்டம்) என்னும் வில்லை உடைய ராமனாகிய திருமாலின் அழகு ஒழுகு இயல் சிறு வினைமகள் பச்சைப் பட்சி தனைக் கைப்பற்றிடும் இந்த்ரலோகா ... அழகு ஒழுகும் தன்மை வாய்ந்தவளும், சிறிய தொழிலாகிய புனம் காத்தலைச் செய்தவளும் ஆகிய மகள், பச்சைக் கிளி போன்றவளுமாகிய வள்ளியை மணந்த விண்ணுலக சேனாதிபதியே, வடவரை இடிபட அலை கடல் சுவறிட மக வரை பொடி பட ... வடக்கே இருந்த (கிரவுஞ்ச மலை) இடிபட்டுப் பொடியாக, அலை வீசும் கடல் வற்றிப் போக, பெரிய மேரு மலையும் பொடி பட, மை கண் பெற்றிடும் உக்ரக் கண் செவி அஞ்ச சூரன்மணி முடி சிதறிட ... கருங்கண்களை உடையதும் உக்கிரமானதுமான ஆதிசேஷன் என்னும் பாம்பு பயப்பட, சூரனுடைய ரத்ன கிரீடம் அணிந்த தலை சிதறி விழ, அலகைகள் பலவுடன் வயிரவர் நடம் இட ... பேய்கள் பல சூழ்ந்து, அவற்றுடன் (சிவகணங்களான) பைரவர்கள் (போர்க்களத்தில்) நடனம் இட, முட்டிப் பொட்டு எழ வெட்டிக் குத்திய தம்பிரானே. ... (பகைவர்களைத்) தாக்கிப் பொடியாகும்படி அவர்களை வாளால் வெட்டி, வேலால் குத்திய தம்பிரானே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.68 pg 3.69 pg 3.70 pg 3.71 WIKI_urai Song number: 1018 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை Sorry, no audio recordings for this song |
Song 1015 - vidam ena ayil (common) vidamena ayilena aduvana naduvana miLirvana suzhalvizhi viththaith kuppaka roppuc chatRilai ...... yenRupEsum virakudai vanithaiya raNaimisai yurukiya vekumuka kalaviyil icchaip pattuyir thattup pattuvu ...... zhanRuvAdum nadalaiyil vazhimika azhipadu thamiyanai namanvidu thiraLathu kattic chikkena voththik kaikkodu ...... koNdupOyE narakathil vidumenu maLavini lilakiya naRaikamazh thiruvadi muththik kutpadu nithyath thaththuvam ...... vanthidAthO idiyena athirkural nisisarar kulapathi yirupathu thiraLpuya matRup potRalai thaththak koththodu ...... nanjuvALi eriyezha mudukiya silaiyina razhakozhu kiyalsiRu vinaimakaL pacchaip patchitha naikkaip patRidu ...... minthralOkA vadavarai yidipada alaikadal suvaRida makavarai podipada maikkat petRidu mukrak katsevi ...... yanjacUran maNimudi sithaRida alakaikaL palavudan vayiravar nadamida muttip pottezha vettik kuththiya ...... thambirAnE. ......... Meaning ......... vidam ena ayil ena aduvana naduvana miLirvana suzhal vizhi: Their rolling eyes have the killer instinct like poison and the arrow and are comparable to Yaman (God of Death); viththaikkup pakar oppuc chatRu i(l)lai enRu pEsum: it can be said that there is no comparison to the seductive methods of these whores; virakudai vanithaiyar aNai misai urukiya vekumuka kalaviyil icchaip pattu uyir thattuppattu uzhanRu vAdum: I have been hankering after the varieties of mind-boggling carnal pleasure offered on the bed by those tricksters; my life, therefore, is tormented, and I am roaming about in agony; nadalaiyil vazhi mika azhi padu thamiyanai naman vidu thiraL athu kattic chikkena oththik kaikkodu koNdu pOyE: I am a loner treading the destructive path; when the bunch of messengers of Yaman grab hold of me and drag me away with hands bound, narakathil vidum enum aLavinil ilakiya naRai kamazh thiruvadi muththikkuL padu nithyath thaththuvam vanthidAthO: and when it is time for me to be thrown into hell, will I not be able to attain the eternal blissful state of reaching Your fragrant and hallowed feet? idi ena athir kural nisisarar kula pathi irupathu thiraL puyam atRup pon thalai thaththak koththodu nanju vALi eriezha mudukiya silaiyinar: He had a thundering voice and presided over the clan of demons; the twenty mighty shoulders and ten gorgeous heads of that RAvaNan were severed in a bunch by the poisonous and fiery arrow shot from the bow (kOthaNdam) of RAmA (Lord VishNu); azhaku ozhuku iyal siRu vinaimakaL pacchaip patchi thanaik kaippatRidum inthralOkA: that VishNU's daughter is VaLLi who exudes beauty and attends to the small job of guarding the millet field; she looks like the green parrot; and You are wedded to her, Oh Commander-in-Chief of the celestial world! vadavarai idipada alai kadal suvaRida maka varai podi pada: Mount Krouncha in the north was shattered to pieces; the wavy sea became dried up; the huge mountain, MEru, was smashed to smithereens; mai kaN petRidum ukrak kaN sevi anja cUranmaNi mudi sithaRida: the dark-eyed ferocious serpent, AdhisEshan, was terrified; the crowned head of the demon SUran, bejewelled with gems, was blown apart; alakaikaL palavudan vayiravar nadam ida: the BhairavAs (of SivA's clan) danced (on the battlefield) along with many devils; muttip pottu ezha vettik kuththiya thambirAnE.: when You attacked the enemies, cutting them to pieces by slashing with Your sword and piercing with Your spear, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |