திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 1016 குகையில் நவநாதர் (பொதுப்பாடல்கள்) Thiruppugazh 1016 kugaiyilnavanAdhar (common) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த தனதனன தான தந்த தந்த ...... தனதான ......... பாடல் ......... குகையில்நவ நாத ருஞ்சி றந்த முகைவனச சாத னுந்த யங்கு குணமுமசு ரேச ருந்த ரங்க ...... முரல்வேதக் குரகதபு ராரி யும்ப்ர சண்ட மரகதமு ராரி யுஞ்செ யங்கொள் குலிசகைவ லாரி யுங்கொ டுங்க ...... ணறநூலும் அகலியபு ராண மும்ப்ர பஞ்ச சகலகலை நூல்க ளும்ப ரந்த அருமறைய நேக முங்கு விந்தும் ...... அறியாத அறிவுமறி யாமை யுங்க டந்த அறிவுதிரு மேனி யென்று ணர்ந்துன் அருணசர ணார விந்த மென்று ...... அடைவேனோ பகைகொள்துரி யோத னன்பி றந்து படைபொருத பார தந்தெ ரிந்து பரியதொரு கோடு கொண்டு சண்ட ...... வரைமீதே பழுதறவி யாச னன்றி யம்ப எழுதியவி நாய கன்சி வந்த பவளமத யானை பின்பு வந்த ...... முருகோனே மிகுதமர சாக ரங்க லங்க எழுசிகர பூத ரங்கு லுங்க விபரிதநி சாச ரன்தி யங்க ...... அமராடி விபுதர்குல வேழ மங்கை துங்க பரிமளப டீர கும்ப விம்ப ம்ருகமதப யோத ரம்பு ணர்ந்த ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குகையில்நவ நாதரும் ... குகையில் தவம் புரியும் நவநாதராகிய* பெருஞ்சித்தர்களும், சிறந்த முகை வனச சாதனும் ... திருமாலின் தொப்புளாம் தாமரை மொட்டில் தோன்றிய பிரமனும், தயங்கு குணமும் ... விளங்கும் ( த்வம், ரஜோ, தாம ம் ஆகிய) முக்குணங்களும், அசுரேசரும் ... அசுரரின் தலைவர்களும், தரங்க முரல்வேதக் குரகத புராரியும் ... அலைகடல் போல் ஒலிக்கும் வேதங்களை நான்கு குதிரைகளாகப் பூட்டி திரிபுரத்தை அழித்த சிவபிரானும், ப்ரசண்ட மரகத முராரியும் ... வீரம் மிகுந்த, மரகதப்பச்சை வண்ணனானவனும், முரன் என்ற அசுரனைக் கொன்ற முராரியாம் திருமாலும், செயங்கொள் குலிச கை வலாரியும் ... வெற்றி பெற்ற வஜ்ராயுதத்தைக் கையில் ஏந்தி வலன் என்ற அசுரனைக் கொன்ற இந்திரனும், கொடுங்கண் அறநூலும் ... கடுமையான விதிகளை வகுக்கும் சாஸ்திர நூல்களும், அகலிய புராணமும் ... விரிவான புராணங்களும், ப்ரபஞ்ச சகலகலை நூல்களும் ... உலகிலுள்ள எல்லாக் கலை நூல்களும், பரந்த அருமறை யநேகமும் ... விரிந்துள்ள வேதநூல்கள் பலவும், குவிந்தும் அறியாத ... இவை யாவும் ஒன்று கூடிச் சேர்ந்து முயன்று தேடியும் அறிய முடியாத, அறிவும் அறியாமையுங் கடந்த ... அறிவு, அறியாமை ஆகிய இரண்டுக்கும் அப்பால் உள்ள அறிவு திருமேனி யென்று உணர்ந்து ... அறிவொளி எதுவோ அதுவே உன் திருமேனி என நான் உணர்ந்து, உன் அருண சரணாரவிந்தம் என்று அடைவேனோ ... உன் சிவந்த தாமரை மலரன்ன திருவடியை என்று சேர்வேனோ? பகைகொள்துரி யோதனன்பி றந்து ... பகைமையே உருவான துரியோதனன் தோன்றி படைபொருத பாரதந்தெரிந்து ... படைகளோடு போர் செய்த மகாபாரத வரலாற்றை அறிந்து, பரியதொரு கோடு கொண்டு சண்ட வரைமீதே ... பருத்த தனது ஒற்றைத் தந்தத்தால் பெருமலையாம் மேருமலை மீது, பழுதற வியாசன் அன்றியம்ப ... குற்றமற்ற வகையில் வியாச முநிவர் முன்பொருநாள் சொல்லிவர, எழுதிய வி நாயகன் ... அந்தப் பாரதத்தை எழுதிய விநாயக மூர்த்தி, சிவந்த பவள மதயானை ... சிவந்த பவள நிறத்தைக் கொண்ட மதயானை முகத்துக் கணபதியின் பின்பு வந்த முருகோனே ... பின்பு, தம்பியாக வந்த முருகனே, மிகுதமர சாகரம் கலங்க ... மிகுந்த ஒலிசெய்யும் கடல் கலங்குமாறும், எழுசிகர பூதரம் குலுங்க ... ஏழு சிகரங்களை உடைய மலைகள் யாவும் குலுங்குமாறும், விபரித நிசாசரன்தியங்க அமராடி ... மாறுபட்ட புத்தியைக் கொண்ட சூரன் திகைக்கும்படியாகவும் போர் செய்து, விபுதர்குல வேழ மங்கை ... தேவர் குலத்தவளும், யானை (ஐராவதம்) வளர்த்தவளுமான தேவயானையின் துங்க பரிமள படீர கும்ப விம்ப ம்ருகமத ... பரிசுத்தமான சந்தன மணம் வீசும், கும்பம் போன்று ஒளிவிடும், கஸ்தூரி வாசம் மிக்க பயோதரம் புணர்ந்த பெருமாளே. ... திருமார்பைத் தழுவிய பெருமாளே. |
* நவநாதராகிய பெருஞ் சித்தர் பின்வருமாறு: சத்தியநாதர், சதோகநாதர், ஆதிநாதர், அனாதிநாதர், வகுளநாதர், மதங்கநாதர், மச்சேந்திரநாதர், கடேந்திரநாதர், கோரக்கநாதர். இவர்கள் குகைகளில் இருந்து சிவனைக் குறித்துத் தவம் செய்து சித்தராயினர். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 3.70 pg 3.71 pg 3.72 pg 3.73 WIKI_urai Song number: 1019 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 1016 - kugaiyil navanAdhar (common) kugaiyilnava nAtha runjci Rantha mukaivanasa sAtha nuntha yangu kuNamumasu rEsa runtha ranga ...... muralvEthak kurakathapu rAri yumpra saNda marakathamu rAri yunje yangkoL kulisakaiva lAri yungko dungka ...... NaRanUlum akaliyapu rANa mumpra panja sakalakalai nUlka Lumpa rantha arumaRaiya nEka mungku vinthum ...... aRiyAtha aRivumaRi yAmai yungka dantha aRivuthiru mEni yenRu Narnthun aruNasara NAra vintha menRu ...... adaivEnO pakaikoLthuri yOtha nanpi Ranthu padaiporutha bAra thanthe rinthu pariyathoru kOdu koNdu saNda ...... varaimeethE pazhuthaRavi yAsa nanRi yampa ezhuthiyavi nAya kansi vantha pavaLamatha yAnai pinpu vantha ...... murukOnE mikuthamara sAka rangka langa ezhusikara pUtha rangku lunga viparithani sAsa ranthi yanga ...... amarAdi viputharkula vEzha mangai thunga parimaLapa deera kumpa vimpa mrukamathapa yOtha rampu Narntha ...... perumALE. ......... Meaning ......... gukaiyilnava nAtharum: The nine prime sidhdhAs* doing penance in the caves; siRantha mukai vanasa sAthanum: BrahmA, whose origin was from the great lotus blooming from Vishnu's belly; thayangku kuNamum: the three distinguished characteristics {namely, Sathvam (tranquility), rajO (aggressiveness) and thamas (sluggishness)}; asurEsarum: the leaders of the demons; tharanga mural vEthak kurakatha purAriyum: Lord SivA, who destroyed Thiripuram using the four VEdAs as His chariot's horses roaring like the wavy seas; prasaNda marakatha murAriyum: valiant Vishnu of emerald-green complexion who was known as MurAri, having killed the demon Muran; seyangkoL kulisa kai valAriyum: triumphant IndrA, holding a mace (kulijam) in his hand with which he conquered the demon, Valan; kodungkaN aRanUlum: all the text books of SAstrAs laying down strict rules; akaliya purANamum: detailed legendary stories of yore of various Gods; prapanja sakalakalai nUlkaLum: the entire works of art in this world; and parantha arumaRai yanEkamum: the very many extensive scriptures of exceptional value; kuvinthum aRiyAtha: all of these convened in an attempt to comprehend You but failed. aRivum aRiyAmaiyung kadantha aRivu thirumEni yenRu uNarnthu: Realising that You are the embodiment of that wisdom which transcends all knowledge and ignorance, un aruNa saraNAravintham enRu adaivEnO: when shall I attain Your rosy lotus feet? pakaikoLthuri yOthanan pi Ranthu: DuriyOdhanan, a symbol of enmity, was born to padaiporutha bArathan: wage the war of MahAbhArathA with his armies; therinthu pariyathoru kOdu koNdu saNda varaimeethE: Knowing that story (of MahAbhArathA), He scribed it on top of the great Mount MEru with His lone tusk pazhuthaRa viyAsan anRiyampa: as Sage VyAsar once narrated the epic flawlessly; ezhuthiya vi nAyagan: that transcriber was VinAyagA; sivantha pavaLa mathayAnai: His complexion was coral-red and His form was of a raging elephant; pinpu vantha murukOnE: You are His younger brother, Oh MurugA! mikuthamara sAkaram kalanga: The seas, making a loud noise, were stirred up; ezhusikara pUtharam kulunga: the seven crests of (SUran's) hills were shaken; viparitha nisAsaran thiyanga amarAdi: and the perverted demon, SUran, was bewildered when You fought in the battlefield. viputharkula vEzha mangai: She belonged to the lineage of the celestials; She was reared by the elephant (AirAvadham); thunga parimaLa padeera kumpa vimpa mrukamatha: garnishing pure sandal paste, her large and bright bosoms have the fragrance of musk; payOtha rampuNarntha perumALE.: and You embrace that DEvayAnai's chest, Oh Great One! |
* The nine senior SidhdhAs (achievers - NavanAthars) - were as follows: SathyanAthar, SathokanAthar, AadhinAthar, AnAdhinAthar, VaghuLanAthar, MadhanganAthar, MachchendranAthar, GadendranAthar and GorakkanAthar. They did penance in the caves praying to Lord SivA and attained the status of Sidhdha. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |