திருப்புகழ் 992 போத நிர்க்குண  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 992 bOdhanirkkuNa  (common)
Thiruppugazh - 992 bOdhanirkkuNa - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தன தானா தனாதன
     தான தத்தன தானா தனாதன
          தான தத்தன தானா தனாதன ...... தந்ததான

......... பாடல் .........

போத நிர்க்குண போதா நமோநம
     நாத நிஷ்கள நாதா நமோநம
          பூர ணக்கலை சாரா நமோநம ...... பஞ்சபாண

பூபன் மைத்துன பூபா நமோநம
     நீப புஷ்பக தாளா நமோநம
          போக சொர்க்கபு பாலா நமோநம ...... சங்கமேறும்

மாத மிழ்த்ரய சேயே நமோநம
     வேத னத்ரய வேளே நமோநம
          வாழ்ஜ கத்ரய வாழ்வே நமோநம ...... என்றுபாத

வாரி ஜத்தில்வி ழாதே மகோததி
     யேழ்பி றப்பினில் மூழ்கா மனோபவ
          மாயை யிற்சுழி யூடே விடாதுக ...... லங்கலாமோ

கீத நிர்த்தவெ தாளா டவீநட
     நாத புத்திர பாகீ ரதீகிரு
          பாச முத்திர ஜீமூத வாகனர் ...... தந்திபாகா

கேக யப்பிர தாபா முலாதிப
     மாலி கைக்கும ரேசா விசாகக்ரு
          பாலு வித்ரும காரா ஷடானன ...... புண்டரீகா

வேத வித்தக வேதா விநோதகி
     ராத லக்ஷ்மிகி ரீடா மகாசல
          வீர விக்ரம பாரா வதானவ ...... கண்டசூரா

வீர நிட்டுர வீராதி காரண
     தீர நிர்ப்பய தீராபி ராமவி
          நாய கப்ரிய வேலாயு தாசுரர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

போத நிர்க்குண போதா நமோநம ... ஞானம் நிறைந்தவனாய்,
குணங்களுக்கு எட்டாமல் இருக்கும் ஞானமூர்த்தியே, போற்றி, போற்றி,

நாத நிஷ்கள நாதா நமோநம ... தலைவனே, உருவம் அற்ற
மூர்த்தியே, போற்றி, போற்றி,

பூரணக்கலை சாரா நமோநம ... எல்லாக் கலைகளின் சாரமாக
உள்ள தெய்வமே, போற்றி, போற்றி,

பஞ்சபாண பூபன் மைத்துன பூபா நமோநம ... ஐந்து
மலர்க்கணைகளை உடைய அரசன் மன்மதனின் மைத்துனனாம்*
அரசனே, போற்றி, போற்றி,

நீப புஷ்பக தாளா நமோநம ... கடப்ப மலர்களைத் தரித்த
திருவடிகளை உடையவனே, போற்றி, போற்றி,

போக சொர்க்க புபாலா நமோநம ... இன்பங்களுக்கு உரிய
சொர்க்க பூமியைக் காத்தவனே, போற்றி, போற்றி,

சங்கமேறும் மா தமிழ்த்ரய சேயே நமோநம ... சங்கப்பலகையில்
ஏறி அமர்ந்த முத்தமிழ்ச் செம்மலே, போற்றி, போற்றி,

வேதனத்ரய வேளே நமோநம ... ரிக், யசுர், சாமம் என்னும் மூன்று
வேதங்களும்** தொழும் தெய்வமே, போற்றி, போற்றி,

வாழ் ஜகத்ரய வாழ்வே நமோநம ... வாழ்கின்ற பூலோகம், அந்தரம்,
சுவர்க்கம் என்ற மூவுலகங்களும் போற்றும் செல்வமே, போற்றி, போற்றி,

என்றுபாத வாரிஜத்தில் விழாதே ... என்றெல்லாம் கூறிப் போற்றி
உன் பாதத் தாமரையில் விழாமல்,

மகோததி யேழ்பி றப்பினில் மூழ்கா ... மகா சமுத்திரமாகிய ஏழ்
பிறப்பில் நான் மூழ்கி,

மனோபவ மாயையிற்சுழி யூடே ... மனத்தில் உதிக்கும்
எண்ணங்களாம் மாயையின் சுழற்சிக்குள்ளே

விடாதுகலங்கலாமோ ... வெளிவர முடியாமல் அகப்பட்டுக்
கலங்குதல் நன்றோ?

கீத நிர்த்த வெதாள அடவீநட நாத புத்திர பாகீரதீ ... பாடல்
ஆடல் கொண்ட வேதாள கணங்களுடன் சுடுகாட்டில் நடனம் செய்யும்
சிவபிரானுடையவும் பாகீரதியாம் கங்கையுடையவும் புத்திரனே,

கிருபாச முத்திர ... கருணைக் கடலே,

ஜீமூத வாகனர் தந்திபாகா ... மேகத்தை வாகனமாகக் கொண்ட
இந்திரனின் மகளான தேவயானையின் மணாளனே,

கேகயப்பிரதாபா முலாதிப ... மயில் வாகனக் கீர்த்திமானே,
மூலாதார மூர்த்தியே,

மாலிகைக்குமரேசா விசாக க்ருபாலு ... மாலைகள் அணிந்த
குமரக் கடவுளே, விசாகனே, கிருபாளனே,

வித்ருமகாரா ஷடானன புண்டரீகா ... பவள நிறத்தோனே, ஆறு
திருமுகங்களாம் தாமரைகளை உடையவனே,

வேத வித்தக வேதா விநோத ... வேதங்களில் வல்லவனே,
பிரம்மனுடன் வேடிக்கை விளையாடலைப் புரிந்தவனே,

கிராத லக்ஷ்மி கிரீடா ... வேடர் குலத்து லக்ஷ்மியாம் வள்ளியுடன்
சிருங்கார லீலைகள் புரிந்தவனே,

மகாசல வீர விக்ரம ... பெரும் மலைகளில் எல்லாம் குடியிருக்கும்
வீரனே, பராக்கிரமசாலியே,

பார அவதான அகண்டசூரா ... மீகுந்த கவனத்தோடு
செயல்படுவோனே, பூரணமான சூரத்துவம் உடையவனே,

வீர நிட்டுர வீர ஆதி காரண ... வீரனுக்கு இருக்கவேண்டிய
கொடூரம் கொண்ட வீரனே, மூல காரணப் பொருளே,

தீர நிர்ப்பய தீர அபிராம ... தீரனே, பயமற்ற தைரியசாலியே,
அழகனே,

விநாயகப்ரிய வேலாயுதா சுரர் தம்பிரானே. ... விநாயகருக்குப்
பிரியமானவனே, வேலாயுதனே, தேவர்கள் தம் தலைவனே.


* மன்மதன் திருமாலின் மகன். முருகன் திருமாலின் மருமகன். எனவே முருகன்
மன்மதனின் மைத்துனன்.


** நான்கு வேதங்களில் அதர்வண வேதத்தை விட்டதன் காரணம் அதனில்
உயிர்களுக்கு ஆக்கமேயன்றி கேடு விளைவிக்கும் மந்திரங்களும் கூறப்படுவதால்
மற்ற மூன்றை மட்டும் குறிப்பிட்டார்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.10  pg 3.11  pg 3.12  pg 3.13 
 WIKI_urai Song number: 996 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 992 - bOdha nirkguna (common)

bOdha nirkguNa bOdhA namO nama
     nAdha nishkaLa nathA namO nama
          pUraNak kalai sArA namO nama ...... pancha bANa

bUpan maiththuna bUpA namO nama
     neepa pushpaka thALA namO nama
          bOga sorgga bupAlA namO nama ...... sangameRum

mA thamizh thraya sEyE namO nama
     vEdhana thraya vELE namO nama
          vAzh jagathraya vAzhvE namO nama ...... endru pAdha

vArijath thil vizhAdhE magOdhadhi
     Ezh piRappinil mUzhgA manObava
          mAyaiyiR suzhiyUdE vidAdhu ...... ka langalAmO

geetha nirththa vethALA daveenata
     nAtha puththira bAgirathee kiru
          pA samudhdhira jeemUtha vAhanar ...... dhanthi pAgA

kEkayap pirathApA mulAdhipa
     mAligaik kumarEsA visAka kru
          pAlu vidhruma kArA shadAnana ...... puNdareekA

vEdha viththaga vEdhA vinOdha ki
     rAtha lakshmi kireetA mahAchala
          veera vikrama pArAvadh Anava ...... kaNdasUra

veera nittura veerAdhi kAraNa
     dheera nirbaya dheerAbirAma vi
          nAyaka priya vElAyudhA surar ...... thambirAnE.

......... Meaning .........

bOdha nirkguNa bOdhA namO nama: "Oh wise One who is beyond all virtues,
     I bow to You, I bow to You,

nAdha nishkaLa nathA namO nama: Oh Leader, You are One without any form,
     I bow to You, I bow to You,

pUraNak kalai sArA namO nama: You are the Essence of all arts,
     I bow to You, I bow to You,

pancha bANa bUpan maiththuna bUpA namO nama: You are the cousin* of Manmathan, the Lord of Love with five flowery arrows,
     I bow to You, I bow to You,

neepa pushpaka thALA namO nama: Your feet are decorated with kadappa flowers,
     I bow to You, I bow to You,

bOga sorgga bupAlA namO nama: You protected the blissful heavenly land of the DEvAs,
     I bow to You, I bow to You,

sangameRum mA thamizh thraya sEyE namO nama: You sat on the famous plank of Sangam and You are the wizard of the three branches of Tamil,
     I bow to You, I bow to You,

vEdhana thraya vELE namO nama: You are worshipped in the three branches** (Rigg, Yajur and SAma) of VEdAs,
     I bow to You, I bow to You,

vAzh jagathraya vAzhvE namO nama: The living trio of worlds (namely, Earth, Thrisangu world and Heaven) value You as their Treasure,
     I bow to You, I bow to You."

endru pAdha vArijath thil vizhAdhE: - so I should sing Your Glory and fall at Your Lotus Feet. Instead,

magOdhadhi Ezh piRappinil mUzhgA: I am drowned in the huge sea of seven births

manObava mAyaiyiR suzhiyUdE vidAdhu ka langalAmO: and am also caught in the thoughts of my mind, whirlpools of delusion, making me constantly agitated; is it fair?

geetha nirththa vethALa adaveenata nAtha puththira bAgirathee: With the devils singing and dancing around, Lord SivA danced in the cremation ground; Your are the Son of that SivA and Bhageerathi (River Ganga)!

kirupA samudhdhira: You are the ocean of compassion!

jeemUtha vAhanar dhanthi pAgA: You are the consort of DEvayAnai, Daughter of IndrA who rides the clouds!

kEkayap pirathApA mulAdhipa: You are famous for riding Your Peacock! You are the foremost leader!

mAligaik kumarEsA visAka: You are Lord Kumara fully garlanded! You shine on Your birth star, VishakA!

krupAlu vidhruma kArA: You are extremely kind and have the complexion of coral!

shadAnana puNdareekA: Your six faces are like lotus flowers!

vEdha viththaga vEdhA vinOdha: You are the wizard of all VEdAs! You taunted BrahmA for fun!

kirAtha lakshmi kireetA: You indulged in romantic sport with VaLLi, who is none other than Lakshmi, born among the hunters!

mahAchala veera vikrama: Oh valorous One, You choose mighty mountains as Your abodes! You are courageous!

pAra avadhAna: You act with extreme care and caution!

akaNdasUra veera nittura veera: Your bravery is complete! You have the ferocity needed by a warrior!

adhi kAraNa: You are the fundamental cause of everything!

dheera nirbaya dheerAbirAma: You are an adventurous and fearless One! You are extremely handsome!

vinAyaka priya vElAyudhA surar thambirAnE.: You are beloved of VinAyagA, You hold the Spear as Your weapon, and You are worshipped by all the DEvAs, Oh Great One!


* Manmathan is the son of Vishnu. Murugan is the nephew of Vishnu. Thus Murugan is the cousin of Manmathan.


** Of the four VEdAs, Atharvana VedA is omitted here as it contains certain destructive ManthrAs along with good ones.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 992 bOdha nirkkuNa - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]