பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-3.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பொது) திருப்புகழ் உரை 5 (கீத நிர்த்த) பாடல் ஆடல் கொண்ட (வேதாள تها ہو۔( வேதாள கணப் பெருங்கூட்டத்துடன் - அல்லது - பாடல் ஆடலை (வேதாளம்) பேய்களுடன் (அடவி) சுடுகாட்டில் (நடநாத புத்திர) நடனம் செய்கின்ற தலைவராம் சிவனது புத்திரனே (பாகிரதி புத்திர) கங்கையின் புத்திரனே (கிருபா சமுத்திர) கருணைக் கடலே Tமூதவாகனர்) மேகவாகனனாம் இந்திரன் (வளர்த்த) யானை தேவசேனையின் (பாகா) பாங்கனே-கணவனே! கேகயப் பிரதாபா) மயில் வாகனம் கொண்ட கீர்த்திமானே! (மூலாதிப) மூலகாரண அதிபனே - தலைவனே மாலைகள் அணிந்த குமரேசனே விசாகனே கிருபாளனே (வித்ரும - ஆகாரா) பவள நிற உருவத்தனே ஆறு திருமுகங்களை உடையவனே! தாமரையில் உதித்தவனே! (அல்லது தாமரையன்ன ஆறு முகங்களை உடையவனே!) வேதங்களில் வல்ல (வேதா) கடவுளே! (அல்லது வேதா விநோத - பிரமனோடு பொருள் வினவி விளையாடினவனே) (விநோத) அற்புதகரமான வேட லகrமியாம் வள்ளியடன் (கிரீடா) லீலைகள் #j (மகாசல வீரா) மிக்க கோபத்துடன் (சூரனுடன் பொருத) வீரனே! (அல்லது - மகாசலம் - புன்னிய தீர்த்தமாம் கங்கையில் (தோன்றிய) வீரனே! அல்லது மகா அசல வீர - பெரிய மலைகளில் வீற்றிருக்கும் வீர (விக்ரம) பராக்ரமசாலியே! பாராவதான - பார அவதான மிக்க கவனம் கொண்டவனே! (அகண்ட) பூரணமான-சூரத்துவம் வாய்ந்தவனே! விரனுக்கு உரிய (நிட்டுரம் - நிஷடுரம்) கொடுமை கொண்ட வீரனே (அல்லது அகண்ட சூரவீர நிட்டுரவீரா - பூரண சூரத்வம் கொண்ட வீர சூரனைக் கோபித்த வீரனே!) (ஆதிகாரண) மூல காரணப் பொருளே திரனே! பயமற்ற திரனே! (அபிராம) அழகனே! விநாயக மூர்த்தியிடம் பிரியம் கொண்டவனே! (அல்லது விநாயகர் பிரியப்படுபவனே) வேலாயுதனே தேவர்கள் தம்பிரானே! (மாயையிற்...... கலங்கலாமோ) 996 - 1. ஒதப்படும் முத்தமிழைத் தேர்ந்தறியாத வீணனை, வேதனையே படுகின்ற காம விகாரனை, குற்றம் . ப ழிகொண்டு திரியும் அசுத்தமான இழிவுள்ளவனை, எங்கும் வியாபித்திருக்கும் தன்மை வாய்ந்த