திருப்புகழ் 993 ஓது முத்தமிழ்  (பொதுப்பாடல்கள்)
Thiruppugazh 993 Odhumuththamizh  (common)
Thiruppugazh - 993 Odhumuththamizh - commonSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தத்தன தானா தனாதன
     தான தத்தன தானா தனாதன
          தான தத்தன தானா தனாதன ...... தந்ததான

......... பாடல் .........

ஓது முத்தமிழ் தேராவ்ரு தாவனை
     வேத னைப்படு காமாவி காரனை
          ஊன முற்றுழல் ஆபாச ஈனனை ...... அந்தர்யாமி

யோக மற்றுழல் ஆசாப சாசனை
     மோக முற்றிய மோடாதி மோடனை
          ஊதி யத்தவம் நாடாத கேடனை ...... அன்றிலாதி

பாத கக்கொலை யேசூழ்க பாடனை
     நீதி சற்றுமி லாகீத நாடனை
          பாவி யர்க்குளெ லாமாது ரோகனை ...... மண்ணின்மீதில்

பாடு பட்டலை மாகோப லோபனை
     வீடு பட்டழி கோமாள வீணனை
          பாச சிக்கினில் வாழ்வேனை யாளுவ ...... தெந்தநாளோ

ஆதி சற்குண சீலா நமோநம
     ஆட கத்திரி சூலா நமோநம
          ஆத ரித்தருள் பாலா நமோநம ...... உந்தியாமை

ஆன வர்க்கினி யானே நமோநம
     ஞான முத்தமிழ் தேனே நமோநம
          ஆர ணற்கரி யானே நமோநம ...... மன்றுளாடும்

தோதி தித்திமி தீதா நமோநம
     வேத சித்திர ரூபா நமோநம
          சோப மற்றவர் சாமீ நமோநம ...... தன்மராச

தூத னைத்துகை பாதா நமோநம
     நாத சற்குரு நாதா நமோநம
          ஜோதி யிற்ஜக ஜோதீ மஹாதெவர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

ஓது முத்தமிழ் தேரா வ்ருதாவனை ... ஓதத்தக்க முத்தமிழைத்
தேர்ந்து அறியாமல் வீணாகக் காலம் கழிப்பவனை,

வேதனைப் படு காமா விகாரனை ... துன்பப்படுகின்ற
விகாரமுடைய காமுகனை,

ஊனம் உற்று உழல் ஆபாச ஈனனை ... பழி கொண்டு திரியும்
அசுத்தமான இழிவு உள்ளவனை,

அந்தர்யாமி யோகம் அற்று உழல் ஆசா பசாசனை ... எங்கும்
வியாபித்திருக்கும் யோக நிலையைக் கடைப்பிடிக்காமல் திரியும்
ஆசையாகிய பேய் போன்றவனை,

மோகம் முற்றிய மோடாதி மோடனை ... காம மயக்கம் மிகுந்த
மூடர்களுக்குள் தலைமையான மூடனை,

ஊதியத் தவம் நாடாத கேடனை ... பயன் தரக் கூடிய தவத்தைத்
தேடாத கேடுடையவனை,

அன்றில் ஆதி பாதகக் கொலையே சூழ் கபாடனை ... அன்றில்
பறவை முதலான உயிர்களை பாபத்துக்கு ஈடான கொலை செய்யவே
கருதுகின்ற வஞ்சகனை,

நீதி சற்றும் இலா கீத நாடனை ... ஒழுக்க நெறி கொஞ்சமும்
இல்லாத இசைப் பாட்டுக்களில் களிப்புறுவானை,

பாவியர்க்குள் எலாம் மா துரோகனை ... பாபம் செய்பவர்கள்
எல்லோரையும் விட பெரிய துரோகம் செய்பவனை,

மண்ணின் மீதில் பாடு பட்டு அலை மா கோப லோபனை ...
இந்த உலகில் பாடுபட்டு அலைகின்ற பெரிய கோபமும்
உலோபத்தனமும் நிறைந்தவனை,

வீடு பட்டு அழி கோமாள வீணனை ... கெடுதல் பட்டு அழிகின்ற,
களித்து வீண் பொழுது போக்குபவனை,

பாச சிக்கினில் வாழ்வேனை ஆளுவது எந்த நாளோ ... உலக
மாயையில் சிக்குண்டு வாழ்பவனாகிய என்னை ஆட்கொள்ளுவது
எந்நாளோ?

ஆதி சற்குண சீலா நமோநம ... முதல்வனே, சீரிய குணங்களை
உடைய பரிசுத்த மூர்த்தியே, போற்றி, போற்றி,

ஆடகத் திரி சூலா நமோநம ... பொன்னாலாகிய, மூன்று
தலைகளை உடைய சூலாயுதனே, போற்றி, போற்றி,

ஆதரித்து அருள் பாலா நமோநம ... என்னை அன்புடன்
பாதுகாக்கும் காவல் தெய்வமே, போற்றி, போற்றி,

உந்தி ஆமை ஆனவர்க்கு இனியானே நமோநம ... கடலில்
ஆமை வடிவமாகச் சென்றவராகிய திருமாலுக்கு விருப்பமானவனே,
போற்றி, போற்றி,

ஞான முத்தமிழ் தேனே நமோநம ... ஞானப் பொருள் நிறைந்த
முத்தமிழ் வல்ல தேனே, போற்றி, போற்றி,

ஆரணற்கு அரியானே நமோநம ... வேதம் வல்ல பிரம்ம தேவனுக்கு
எட்டாத அருமையானவனே, போற்றி, போற்றி,

மன்றுள் ஆடும் தோதி தித்திமி தீதா நமோநம ... அம்பலத்தில்
நடனம் செய்யும் தோதி தித்திமி தீதா என்று தாளங்களுடன்
கூத்தாடுபவனே, போற்றி, போற்றி,

வேத சித்திர ரூபா நமோநம ... வேதங்களில் ஓதப்படும் அழகிய
வடிவம் உள்ளவனே, போற்றி, போற்றி,

சோபம் அற்றவர் சாமீ நமோநம ... துக்க நிலையில் இல்லாதவர்
துதிக்கும் கடவுளே, போற்றி, போற்றி,

தன்ம ராச தூதனை துகை பாதா நமோநம ... யம தர்மராஜன்
அனுப்பி வைத்த காலனை உதைத்த பாதங்களை உடையவனே,
போற்றி, போற்றி,

நாத சற் குரு நாதா நமோநம ... நாதனே, சற்குரு நாதனே, போற்றி,
போற்றி,

ஜோதியில் ஜக ஜோதி மஹா தெவர் தம்பிரானே. ... ஒளியில்
பேரொளியே, மகா தேவரான சிவபெருமானுக்கும் தனிப் பெரும்
தலைவனே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 3.12  pg 3.13  pg 3.14  pg 3.15 
 WIKI_urai Song number: 996-1 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 993 - Odhu muththamizh (common)

Odhu muththamizh thErA vrudhAvanai
     vEdhanaip padu kAmA vikAranai
          Unam utruzhal ApAsa eenanai ...... antharyAmi

yOgam atruzhal AsA pasAsanai
     mOha mutriya mOdAdhi mOdanai
          Udhiyath thavam nAdAdha kEdanai ...... andrilAdhi

pAthakak kolaiyE sUzh kapAdanai
     neethi satrumilA geetha nAdanai
          pAviyarkkuL elA mA dhurOganai ...... maNNinmeedhil

pAdu pattalai mA kOpa lObanai
     veedu pattazhi kOmALa veeNanai
          pAsa sikkinil vAzhvEnai ALuvadhu ...... endhanALO

Adhi saRguNa seelA namO nama
     Adagath thirisUlA namO nama
          Adharith aruL bAlA namO nama ...... undhiyAmai

Anavark kiniyAnE namO nama
     nyAna muththamizh thEnE namO nama
          AraNark ariyAnE namO nama ...... mandruLAdum

thOdhi dhiththimi theethA namO nama
     vEdha chiththira rUpA namO nama
          sObam atravar sAmee namO nama ...... dhanmarAja

dhUthanaith thugai pAdhA namO nama
     nAtha saRguru nAthA namO nama
          jOthiyiR jagajOthi mahAdhevar ...... thambirAnE.

......... Meaning .........

Odhu muththamizh thErA vrudhAvanai: I waste my time without learning the three aspects of the highly laudable Tamil language (namely, literature, poetry and drama);

vEdhanaip padu kAmA vikAranai: I am a miserable, perverted and promiscuous person;

Unam utruzhal ApAsa eenanai: I roam about full of blemish and a dirty mind;

antharyAmi yOgam atruzhal AsA pasAsanai: I wander like the devil possessed by lust, oblivious of the spiritual Yogic prevalence around me;

mOha mutriya mOdAdhi mOdanai: among all the licentious fools I am the stupidest;

Udhiyath thavam nAdAdha kEdanai: I am an evil-monger who never seeks gainful meditation;

andrilAdhi pAthakak kolaiyE sUzh kapAdanai: I am a treacherous person seeking to kill even the rare birds like the swan;

neethi satrumilA geetha nAdanai: I revel in songs of low taste without any moral value whatsoever;

pAviyarkkuL elA mA dhurOganai: I am the most reprehensible among all sinners;

maNNinmeedhil pAdu pattalai mA kOpa lObanai: I toil in this world filled with rage and stinginess;

veedu pattazhi kOmALa veeNanai: I decay from my own misdeeds and behave like a squanderer, frittering away precious time;

pAsa sikkinil vAzhvEnai ALuvadhu endhanALO: and I am a victim caught in the web of worldly delusion. When do You propose to take control of me?

Adhi saRguNa seelA namO nama: You are primordial and the most unblemished one full of all virtues,
     I bow to You, I bow to You;

Adagath thirisUlA namO nama: You hold in Your hand the three-pronged golden trident;
     I bow to You, I bow to You;

Adharith aruL bAlA namO nama: You are the most benevolent God protecting me;
     I bow to You, I bow to You;

undhiyAmai Anavark kiniyAnE namO nama: You are the dear friend of Vishnu who took the incarnation of a turtle and went under the sea;
     I bow to You, I bow to You;

nyAna muththamizh thEnE namO nama: You are the substance of True Knowledge available in the three branches of the sweet Tamil language;
     I bow to You, I bow to You;

AraNark ariyAnE namO nama: You are beyond the reach of BrahmA who is an expert in all the VEdAs;
     I bow to You, I bow to You;

mandruLAdum thOdhi dhiththimi theethA namO nama: In the golden stage (at Chidhambaram), You dance to the meter of "thOdhi dhiththimi theethA";
     I bow to You, I bow to You;

vEdha chiththira rUpA namO nama: You are the handsome one described in all the VEdic scriptures;
     I bow to You, I bow to You;

sObam atravar sAmee namO nama: You are the Lord worshipped by all those who are free from misery;
     I bow to You, I bow to You;

dhanmarAja dhUthanaith thugai pAdhA namO nama: You have the feet that kicked off the messenger of Yaman (God of Death); I bow to You,
     I bow to You;

nAtha saRguru nAthA namO nama: Oh Lord, You are the Great Master;
     I bow to You, I bow to You;

jOthiyiR jagajOthi mahAdhevar thambirAnE.: You are the brightest effulgence among all sources of light; You are the unique Lord of the mighty Lord SivA, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 993 Odhu muththamizh - common

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]