திருப்புகழ் 981 ஊனாரும் உட்பிணியும்  (திருவாடானை)
Thiruppugazh 981 UnArumutpiNiyum  (thiruvAdAnai)
Thiruppugazh - 981 UnArumutpiNiyum - thiruvAdAnaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானான தத்ததன தானான தத்ததன
     தானான தத்ததன ...... தனதான

......... பாடல் .........

ஊனாரு முட்பிணியு மானாக வித்தவுட
     லூதாரி பட்டொழிய ...... வுயிர்போனால்

ஊரார் குவித்துவர ஆவா வெனக்குறுகி
     ஓயா முழக்கமெழ ...... அழுதோய

நானா விதச்சிவிகை மேலே கிடத்தியது
     நாறா தெடுத்தடவி ...... யெரியூடே

நாணாமல் வைத்துவிட நீறாமெ னிப்பிறவி
     நாடா தெனக்குனருள் ...... புரிவாயே

மானாக துத்திமுடி மீதே நிருத்தமிடு
     மாயோனு மட்டொழுகு ...... மலர்மீதே

வாழ்வா யிருக்குமொரு வேதாவு மெட்டிசையும்
     வானோரு மட்டகுல ...... கிரியாவும்

ஆனா வரக்கருடன் வானார் பிழைக்கவரு
     மாலால முற்றவமு ...... தயில்வோன்முன்

ஆசார பத்தியுடன் ஞானாக மத்தையருள்
     ஆடானை நித்தமுறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஊனாரு முட்பிணியு மானா கவித்தவுடல் ... மாமிசமும், உள்ளே
நிறைந்திருக்கும் நோய்களும் வைத்து மூடப்பட்ட இந்த உடல்

ஊதாரி பட்டொழிய வுயிர்போனால் ... கேடுற்று அழியும்படி உயிர்
போய்விட்டால்,

ஊரார் குவித்துவர ... ஊரார்கள் கூட்டமாக வந்து

ஆவா வெனக்குறுகி ... ஐயோ ஐயோ என்று அவர்கள் அலறி அருகில்
நெருங்கி

ஓயா முழக்கமெழ அழுதோய ... ஓய்வில்லாத கூச்சல் உண்டாகும்படி
அழுது, பின் ஓய்ந்து,

நானா விதச்சிவிகை மேலே கிடத்தி ... பலவிதமான பல்லக்கின்
மேலே பிணத்தைக் கிடத்தி,

அது நாறாது எடுத்து அடவி யெரியூடே ... அப்பிணம் துர்நாற்றம்
வீசுமுன்பு அதை எடுத்துக்கொண்டுபோய் சுடுகாட்டில் நெருப்பின்
மத்தியிலே

நாணாமல் வைத்துவிட நீறாமென ... கூசாமல் வைத்து விட்டுவிட
அவ்வுடல் சாம்பலாகும் என்ற நியதி உள்ள

இப்பிறவி நாடா தெனக்கு ... இந்தப் பிறவியை நான் விரும்பாதபடி
எனக்கு

உனருள் புரிவாயே ... உன் திருவருளைத் தந்தருள்வாயாக.

மா நாக துத்திமுடி மீதே நிருத்தமிடு மாயோனும் ... பெரிய
நாகமாகிய காளிங்கனின் புள்ளிகள் உள்ள படமுடியின்மேல் நடனம்
செய்த மாயவன் திருமாலும்,

மட்டொழுகு மலர்மீதே வாழ்வாயிருக்குமொரு வேதாவும் ...
தேன் ஒழுகும் தாமரை மலர்மீது வாழ்வு கொண்டிருக்கும் ஒப்பற்ற
பிரமனும்,

எட்டிசையும் வானோரும் அட்டகுல கிரியாவும் ... அஷ்டதிக்
பாலகர்களும், தேவர்களும், சிறந்த அஷ்டகிரிகளில் உள்ளவர்களும்,

ஆனா வரக்கருடன் வானார் பிழைக்க ... நீங்காத
அரக்கர்களுடன், வானிலுள்ள கணங்கள் யாவும் பிழைக்கும்படியாக,

வரும் ஆலால முற்ற அமுதயில்வோன் ... பாற்கடலில் எழுந்த
ஆலகாலவிஷம் அத்தனையும் அமுதமாக உண்டருளிய சிவபெருமான்

முன் ஆசார பத்தியுடன் ஞான ஆகமத்தையருள் ...
முன்னொருநாள் ஆசாரத்துடனும், பக்தியுடனும் கேட்க, அவருக்கு
சாத்திரப்படி வேதாகமங்களின் ஞானப் பொருளை உபதேசித்து
அருளியவனும்,

ஆடானை நித்தம் உறை பெருமாளே. ... திருவாடானை* என்ற
தலத்தில் நாள்தோறும் வீற்றிருப்பவனுமான பெருமாளே.


* திருவாடானை மானாமதுரையில் இருந்து சிவகங்கை வழியில் 44 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1407  pg 2.1408 
 WIKI_urai Song number: 985 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss

Song 981 - UnAru mutpiNi (thiruvAdAnai)

UnArum utpiNiyum AnAka viththa udal
     UdhAri pattozhiya ...... uyirpOnAl

UrAr kuviththu vara AvA enakkuRugi
     OyA muzhakkumezha ...... azhudhOya

nAnA vidhach sivigai mElE kidaththi adhu
     nARAdh eduth atavi ...... eriyUdE

nANAmal vaiththuvida neeRAm enippiRavi
     nAdAdh enak kunaruL ...... purivAyE

mAnAga thuththi mudi meedhE niruththam idu
     mAyOnu mattozhugu ...... malarmeedhE

vAzhvAy irukkum oru vEdhAvum ettisaiyum
     vAnOrum attakula ...... giriyAvum

AnA arakkarudan vAnAr pizhaikka varum
     AlAlam utravamudh ...... ayilvOnmun

AchAra baththi yudan nyAnAga maththai aruL
     AdAnai niththa muRai ...... perumALE.

......... Meaning .........

UnArum utpiNiyum AnA kaviththa udal: This body is covered by flesh which camouflages diseases inside.

UdhAri pattozhiya uyirpOnAl: When the body degenerates and the life departs,

UrAr kuviththu vara AvA enakkuRugi: all kith and kin come home and cry their hearts out;

OyA muzhakkumezha azhudhOya: and their wailing seems unabated, and eventually it subsides.

nAnA vidhach sivigai mElE kidaththi: They place the corpse on decorated palanquins.

adhu nARAdh eduth atavi eriyUdE: Before the body rots and stinks, they take it to the cremation ground and set fire to it.

nANAmal vaiththuvida neeRAm enippiRavi: They do it without any qualms, and the body is turned into ash. This is the ritual in this birth, and

nAdAdh enak kunaruL purivAyE: lest I desire this destiny, You must shower Your grace on me!

mAnAga thuththi mudi meedhE niruththam idu mAyOnu: Vishnu, the great enchanter who danced on the spotted hood of the large cobra, KALingan;

mattozhugu malarmeedhE vAzhvAy irukkum oru vEdhAvum: BrahmA with His abode atop the honey-dripping Lotus flower;

ettisaiyum vAnOrum: the DEvAs who guard the eight directions;

attakula giriyAvum: the eight celebrated mountains;

AnA arakkarudan vAnAr pizhaikka: the shaken asuras (demons) and DEvAs were all rescued

varum AlAlam utravamudh ayilvOn: when the incoming evil poison was consumed by the Great Lord SivAs if it were Divine nectar!

mun AchAra baththi yudan nyAnAga maththai aruL: When that SivA once prostrated before You in the traditional and orthodox way, You preached to Him the quintessence of scriptural knowledge readily!

AdAnai niththa muRai perumALE.: Your abode forever has been Thiru vAdAnai*, Oh Great One!


* ThiruvAdAnai is situated 44 miles east of MAnAmadhurai on the route to Sivaganga.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 981 UnArum utpiNiyum - thiruvAdAnai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]