திருப்புகழ் 980 வேலை தோற்க விழி  (திருப்புத்தூர்)
Thiruppugazh 980 vElaithORkavizhi  (thiruppuththUr)
Thiruppugazh - 980 vElaithORkavizhi - thiruppuththUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தாத்த தனத்தத் தானன
     தான தாத்த தனத்தத் தானன
          தான தாத்த தனத்தத் தானன ...... தனதான

......... பாடல் .........

வேலை தோற்க விழித்துக் காதினில்
     ஓலை காட்டி நகைத்துப் போதொரு
          வீடு காட்டி யுடுத்தப் போர்வையை ...... நெகிழ்வாகி

மேனி காட்டி வளைத்துப் போர்முலை
     யானை காட்டி மறைத்துத் தோதக
          வீறு காட்டி யெதிர்த்துப் போரெதிர் ...... வருவார்மேல்

கால மேற்க வுழப்பிக் கூறிய
     காசு கேட்ட துகைப்பற் றாஇடை
          காதி யோட்டி வருத்தப் பாடுடன் ...... வருவார்போல்

காதல் போற்று மலர்ப்பொற் பாயலின்
     மீத ணாப்பு மசட்டுச் சூளைகள்
          காம நோய்ப்ப டுசித்தத் தீவினை ...... யொழியேனோ

ஆல கோட்டு மிடற்றுச் சோதிக
     பாலி பார்ப்ப திபக்ஷத் தால்நட
          மாடி தாத்தி ரிபட்சித் தாவென ...... வுமிழ்வாளி

ஆடல் கோத்த சிலைக்கைச் சேவக
     னோடை பூத்த தளக்கட் சானவி
          யாறு தேக்கி ய கற்றைச் சேகர ...... சடதாரி

சீல மாப்ப திமத்தப் பாரிட
     சேனை போற்றி டுமப்பர்க் கோதிய
          சேத னார்த்த ப்ரசித்திக் கேவரு ...... முருகோனே

சேல றாக்க யல்தத்தச் சூழ்வய
     லூர வேற்க ரவிப்ரர்க் காதர
          தீர தீர்த்த திருப்புத் தூருறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

வேலை தோற்க விழித்துக் காதினில் ஓலை காட்டி நகைத்துப்
போத ஒரு வீடு காட்டி உடுத்தப் போர்வையை நெகிழ்வாகி
...
வேலாயுதமும் தோற்றுப் போகும்படியான கண்களால் பார்த்து, காதில்
உள்ள ஓலையைக் காட்டிச் சிரித்து, போக வேண்டிய ஒரு வீட்டையும்
காட்டி, அணிந்த மேலாடையை நெகிழும்படி விட்டு,

மேனி காட்டி வளைத்துப் போர் முலை யானை காட்டி
மறைத்துத் தோதக வீறு காட்டி எதிர்த்துப் போர் எதிர்
வருவார் மேல்
... உடலைக் காட்டி ஆடவர்களின் மனத்தைக் கவர்ந்து,
போருக்கு எழுந்தது போன்ற மார்பகமாகிய யானையைக் காட்டியும்
(பின்) மறைத்தும், வஞ்சகத்தின் முழு சக்தியையும் காட்டி எதிர்த்துச்
சண்டையிட்டு எதிரே வருபவர்களிடத்தே,

காலம் ஏற்க உழப்பிக் கூறிய காசு கேட்டு அது கை பற்றா
இடை காதி ஓட்டி வருத்தப் பாடுடன் வருவார் போல்
...
சமயத்துக்குத் தக்கபடி பேசும் வார்த்தைகளை மழுப்பி, தாம் சொன்ன
காசைக் கேட்டு, அதைக் கைப்பற்றிய பின்னர், மத்தியில் மனம்
வேறுபட்டுப் பிரிந்து (அவர்களை விரட்டி), (பின்னும் அவர் பொருள்
தந்தால்) வருந்துதலுடன் வரவேற்கவந்தவர்கள் போல நடித்து,

காதல் போற்று மலர்ப் பொன் பாயலின் மீது அணாப்பும்
அசட்டுச் சூளைகள் காம நோய்ப் படு சித்தத் தீ வினை
ஒழியேனோ
... தமது அன்பைக் காட்டும் மலர் விரித்த அழகிய
படுக்கையில் ஏமாற்றுகின்ற அசட்டு வேசிகள் மீது காம இச்சை என்னும்
நோய் வாய்ப்படும் மனத்தால் ஏற்படும் தீ வினையினின்றும் நீங்கிப்
பிழையேனோ?

ஆல கோட்டு மிடற்றுச் சோதி கபாலி பார்ப்பதி பக்ஷத்தால்
நடமாடி
... ஆலகால விஷத்தின் அடையாளத்தைக் காட்டும் கழுத்தை
உடைய ஜோதிப் பெருமான், பிரம கபாலத்தைக் கையில் ஏந்தியவன்,
பார்வதி அன்பு வைத்து மகிழ நடனம் ஆடுபவன்,

தாத்திரி பட்சித்தா வென உமிழ் வாளி ஆடல் கோத்த சிலைக்
கைச் சேவகன் ஓடை பூத்த தளக் கள் சானவி ஆறு தேக்கிய
கற்றைச் சேகர சடதாரி
... பூமியை உண்டு மீண்டும் கொடு என்று
கேட்க உமிழ்ந்து (கண்ணனாக) விளையாடிய திருமாலை அம்பாக
(திரிபுரம் அழித்த போது) போரில் அமைத்துக் கொண்ட வில்லைக் கையில்
கொண்ட வலிமையாளன், நீர் நிலைகளில் பூத்த பூ இதழ்களின் தேன்
கலந்த கங்கை ஆறு நிறைந்து தோன்றும் திரண்ட முடியாகிய சடையைத்
தரித்துள்ளவன்,

சீல(ம்) மாப் பதி மத்தப் பாரிட சேனை போற்றிடும்
அப்பர்க்கு ஓதிய சேதன அர்த்த(ம்) ப்ரசித்திக்கே வரு
முருகோனே
... பரிசுத்தமான சிறந்த கடவுள், களிப்பு நிறைந்த பூதப்
படைகள் போற்றிட நிற்கும் அப்பர் ஆகிய சிவபெருமானுக்கு
(பிரணவமாகிய) ஞானப் பொருளை உபதேசித்த புகழையே மிகக்
கொண்டுள்ள முருகனே,

சேல் அறாக் கயல் தத்தச் சூழ் வயலூர வேல் கர விப்ரர்க்கு
ஆதர தீர தீர்த்த திருபுத்தூர் உறை பெருமாளே.
... சேல்
மீன்களும், நீங்காத கயல் மீன்களும் குதிக்கும் சுனைகள் சூழ்ந்துள்ள
வயலூரில் வீற்றிருப்பவனே, வேலாயுதத்தைக் கையில் ஏந்தியவனே,
அந்தணர்க்கு பற்றுக் கோடாக உள்ளவனே, தீரனே, பரிசுத்தனே,
திருப்புத்தூர்* என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* திருப்புத்தூர் குன்றக்குடிக்கும் காரைக்குடிக்கும் அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1403  pg 2.1404  pg 2.1405  pg 2.1406 
 WIKI_urai Song number: 984 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 980 - vElai thORka vizhi (thiruppuththUr)

vElai thORka vizhiththuk kAthinil
     Olai kAtti nakaiththup pOthoru
          veedu kAtti yuduththap pOrvaiyai ...... nekizhvAki

mEni kAtti vaLaiththup pOrmulai
     yAnai kAtti maRaiththuth thOthaka
          veeRu kAtti yethirththup pOrethir ...... varuvArmEl

kAla mERka vuzhappik kURiya
     kAsu kEtta thukaippat RAidai
          kAthi yOtti varuththap pAdudan ...... varuvArpOl

kAthal pOtRu malarppoR pAyalin
     meetha NAppu masattuc cULaikaL
          kAma nOyppa dusiththath theevinai ...... yozhiyEnO

Ala kOttu midatRuc chOthika
     pAli pArppa thipakshath thAlnada
          mAdi thAththi ripatchith thAvena ...... vumizhvALi

Adal kOththa silaikkaic chEvaka
     nOdai pUththa thaLakkat chAnavi
          yARu thEkki yakatRaic chEkara ...... chadathAri

seela mAppa thimaththap pArida
     sEnai pOtRi dumappark kOthiya
          sEtha nArththa prasiththik kEvaru ...... murukOnE

sEla RAkka yalthaththac cUzhvaya
     lUra vERka raviprark kAthara
          theera theerththa thirupputh thUruRai ...... perumALE.

......... Meaning .........

vElai thORka vizhiththuk kAthinil Olai kAtti nakaiththup pOtha oru veedu kAtti uduththap pOrvaiyai nekizhvAki: Staring with their eyes that beat the sharpness of the spear, smiling and showing off the stud in the ear, pointing out the direction to their house, deliberately dropping their upper garment,

mEni kAtti vaLaiththup pOr mulai yAnai kAtti maRaiththuth thOthaka veeRu kAtti ethirththup pOr ethir varuvAr mEl: they expose their body to entice their suitors' mind, revealing the elephant-like breasts as if ready to wage a war and they conceal them instantly; they are treacherous to the fullest extent in fiercely fighting the suitors

kAlam ERka uzhappik kURiya kAsu kEttu athu kai patRA idai kAthi Otti varuththap pAdudan varuvAr pOl: by speaking opportunistic words in a cajoling manner; they demand the money previously stipulated by them, and once they grab that money, they display indifference in mid-course and chase their suitors away; (if they are offered additional money,) they feign remorse and extend a warm welcome;

kAthal pOtRu malarp pon pAyalin meethu aNAppum asattuc cULaikaL kAma nOyp padu siththath theevinai ozhiyEnO: their bed strewn with flowers demonstrates love, but on that very bed these whores resort to deception; why do I passionately pine for these stupid whores, and when will I ever be freed from the shackle of the bad deed caused by that mental disease?

Ala kOttu midatRuc chOthi kapAli pArppathi pakshaththAl nadamAdi: He is an Effulgence of light with a scar of AlakAla poison on His gullet; He holds the skull of Brahma on His hand; He dances to the enthrallment of PArvathi;

thAththiri patchiththA vena umizh vALi Adal kOththa silaik kaic chEvakan Odai pUththa thaLak kaL chAnavi ARu thEkkiya katRaic chEkara chadathAri: He holds in His strong hand a bow which he took out to wage a war (on Thiripuram) when He used as the arrow none other than Lord VishNu (coming as KrishNa) who swallowed the earth and spat it out sportingly when asked to give it back; on His thick and matted hair, He holds River Gangai on whose waterfront there are plenty of flowers oozing honey;

seela(m) mAp pathi maththap pArida sEnai pOtRidum apparkku Othiya sEthana arththa(m) prasiththikkE varu murukOnE: He is the great Lord of pristine quality; armies of SivagaNAs surround Him worshipping with relish; to that Father of Yours, Lord SivA, You preached the meaning of True Knowledge (PraNava ManthrA); and that prestigious fame is Yours, Oh Lord MurugA!

sEl aRAk kayal thaththac cUzh vayalUra vEl kara viprarkku Athara theera theerththa thirupuththUr uRai perumALE.: Around this town, VayalUr, ponds abound in which sEl fish and kayal fish jump about, and You are seated here, Oh Lord! You hold the spear as a weapon in Your hand! You are the refuge of all brahmins, Oh Valorous and Pure One; You are seated in ThiruppuththUr*, Oh Great One!


* ThiruppuththUr is near the towns of KundRakkudi and KAraikkudi

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 980 vElai thORka vizhi - thiruppuththUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]