திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 965 நீதத்துவமாகி (மதுரை) Thiruppugazh 965 neethaththuvamAgi (madhurai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தானத் தனதான தானத் ...... தனதான ......... பாடல் ......... நீதத் துவமாகி .. நேமத் ...... துணையாகிப் பூதத் தயவான .. போதைத் ...... தருவாயே நாதத் தொனியோனே .. ஞானக் ...... கடலோனே கோதற் றமுதானே .. கூடற் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... நீதத் துவமாகி ... நீதித்தன்மை கொண்டதாய், நேமத் துணையாகி ... சீரிய ஒழுக்கத்தில் ஒழுகுவதற்குத் துணை செய்வதாய், பூதத் தயவான ... உயிர்வர்க்கங்களின் மேல் கருணைசெய்வதாய் விளங்கும் போதைத் தருவாயே ... நல்லறிவைத் தந்தருள்வாயாக. நாதத் தொனியோனே ... ஒலியும் ஓசையுமாய் விளங்குபவனே, ஞானக் கடலோனே ... ஞான சமுத்திரமே, கோதற்ற அமுதானே ... குற்றமில்லாத அமிர்தத்தைப் போன்றவனே, கூடற் பெருமாளே. ... நான்மாடக்கூடல் என்னும் மதுரைப்பதியில் உள்ள பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1365 pg 2.1366 WIKI_urai Song number: 969 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
Song 965 - neethaththuvamAgi (madhurai) nee thath thuvamAgi nEmath ...... thuNaiyAgi bUthath dhayavAna bOdhaith ...... tharuvAyE nAdhath dhoniyOnE nyAnak ...... kadalOnE kOdhatr amudhAnE kUdaR ...... perumALE. ......... Meaning ......... neethath thuvamAgi: It should be based on moralistic values; nEmath thuNaiyAgi: It should be conducive to a strictly disciplined life; bUthath dhayavAna: It should be compassionate to all living entities; bOdhaith tharuvAyE: It is that true knowledge which I seek from You. nAdhath dhoniyOnE: You manifest in all sounds and notes! nyAnak kadalOnE: You are the Ocean of Wisdom! kOdhatr amudhAnE: You are the unblemished Nectar! kUdaR perumALE.: You reside in NAnmAdak KUdal (Madhurai), Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |