திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 964 கலைமேவு ஞான (பவானி) Thiruppugazh 964 kalaimEvunyAna (bhavAni) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதான தானத் தனதான தனதான தானத் ...... தனதான ......... பாடல் ......... கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ஆசைக் ...... கடலேறிப் பலமாய வாதிற் பிறழாதே பதிஞான வாழ்வைத் ...... தருவாயே மலைமேவு மாயக் குறமாதின் மனமேவு வாலக் ...... குமரேசா சிலைவேட சேவற் கொடியோனே திருவாணி கூடற் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கலைமேவு ஞானப் பிரகாசக் கடலாடி ... சகல கலைகளையும் தன்னுள் அடக்கி வைத்துள்ள ஞான ஒளியாகிய கடலிலே திளைத்துக் குளித்து, ஆசைக் கடலேறி ... மண், பெண், பொன் என்ற மூவாசைகளாம் கடல்களை நீந்திக் கடந்து, பலமாய வாதிற் பிறழாதே ... பலத்ததான, உரத்த சப்தத்துடன் கூடிய சமய வாதங்களில் நான் மாறுபட்டுக் கிடக்காமல், பதிஞான வாழ்வைத் தருவாயே ... இறைவனைப் பற்றிய சிவ ஞான வாழ்வைத் தந்தருள்வாயாக. மலைமேவு மாயக் குறமாதின் ... வள்ளிமலையிலே வாழ்ந்த, ஆச்சரியத் தோற்றம் கொண்ட, குறப்பெண்ணாம் வள்ளியின் மனமேவு வாலக் குமரேசா ... மனத்திலே வீற்றிருக்கும் இளைஞனாம் குமரேசனே, சிலைவேட ... வள்ளிக்காக வில்லைக் கையில் ஏந்திய வேடன் உருவில் வந்தவனே, சேவற் கொடியோனே ... சேவற் கொடியை கரத்தில் கொண்டவனே, திருவாணி கூடற் பெருமாளே. ... லக்ஷ்மியும் சரஸ்வதியும் (செல்வமும், கல்வியும்) ஒருங்கே கூடும் கூடற்பதியாகிய பவானியில் வாழும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1363 pg 2.1364 pg 2.1365 pg 2.1366 WIKI_urai Song number: 968 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
M.S. பாலஷ்ரவண்லக்ஷ்மி புதுச்சேரி M.S. Balashravanlakshmi Puducherry பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
'கொடுமுடி' திரு தியாகராஜ தேசிகர் Kodumudi S. Thiyagaraja DhEsigar பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 964 - kalaimEvu nyAna (thiruvAnikUdal - bavAni) kalaimEvu nyAnap pirakAsak kadalAdi Asaik ...... kadalErip balamAya vAdhiR piRazhAdhE pathinyAna vAzhvaith ...... tharuvAyE malaimEvu mAyak kuRa mAdhin mana mEvu vAlak ...... kumarEsA silai vEda sEvaR kodiyOnE thiruvANi kUdaR ...... perumALE. ......... Meaning ......... kalaimEvu nyAnap pirakAsa kadalAdi: It is a great and bright Ocean of Knowledge containing all the arts within itself; and I want to take a dip in that ocean. Asaik kadalEri: I also want to swim across the ocean of three desires, namely, earth, woman and wealth. balamAya vAdhiR piRazhAdhE: I do not want to be caught in the din of loud arguments over religion. pathinyAna vAzhvaith tharuvAyE: I request You to grant me a life dedicated to the Knowledge of SivA. malaimEvu mAyak kuRa mAdhin mana mEvu vAlak kumarEsA: Oh young KumarEsa, You have occupied the heart of VaLLi, the wonderful damsel of the KuravAs, who lives in the Mount VaLLimalai. silai vEda: You took the disguise of a hunter with a bow to woo VaLLi! sEvaR kodiyOnE: You hold the staff of the Rooster in Your hand! thiruvANi kUdaR perumALE.: Your abode is KUdal (BavAni) where both Lakshmi and Saraswathi (representing Wealth and Education) have come together, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |