திருப்புகழ் 966 மனநினை சுத்த  (மதுரை)
Thiruppugazh 966 mananinaisuththa  (madhurai)
Thiruppugazh - 966 mananinaisuththa - madhuraiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனதன தத்தந் தான தானன
     தனதன தத்தந் தான தானன
          தனதன தத்தந் தான தானன ...... தனதான

......... பாடல் .........

மனநினை சுத்தஞ் சூது காரிகள்
     அமளிவி ளைக்குங் கூளி மூளிகள்
          மதபல நித்தம் பாரி நாரிக ...... ளழகாக

வளைகுழை முத்தும் பூணும் வீணிகள்
     விழலிகள் மெச்சுண் டாடி பாடிகள்
          வரமிகு வெட்கம் போல வோடிகள் ...... தெருவூடே

குனகிகள் பக்ஷம் போல பேசிகள்
     தனகிக ளிச்சம் பேசி கூசிகள்
          குசலிகள் வர்க்கஞ் சூறை காரிகள் ...... பொருளாசைக்

கொளுவிக ளிஷ்டம் பாறி வீழ்பட
     அருளமு தத்தின் சேரு மோர்வழி
          குறிதனி லுய்த்துன் பாத மேறிட ...... அருள்தாராய்

தனதன தத்தந் தான தானன
     டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
          தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி

தவில்முர சத்தந் தாரை பூரிகை
     வளைதுடி பொற்கொம் பார சூரரை
          சமர்தனில் முற்றும் பாறி நூறிட ...... விடும்வேலா

தினைவன நித்தங் காவ லாளியள்
     நகைமுறை முத்தின் பாவை மான்மகள்
          திகழ்பெற நித்தங் கூடி யாடிய ...... முருகோனே

திரிபுர நக்கன் பாதி மாதுறை
     யழகிய சொக்கன் காதி லோர்பொருள்
          செலவரு ளித்தென் கூடல்மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மன(ம்) நினை சுத்தம் சூதுகாரிகள் ... மனத்தில் நினைக்கின்ற
முற்றிய சூதான எண்ணங்களையே கொண்டவர்கள்,

அமளி விளைக்கும் கூளி மூளிகள் ... அமர்க்களங்களைச் செய்யும்
பேய் போன்ற விகாரம் படைத்தவர்கள்,

மதபலம் நித்தம் பாரி நாரிகள் அழகாக வளை குழை முத்தும்
பூணும் வீணிகள்
... ஆணவ பலத்தை நாள் தோறும் வலியக்
காட்டுகின்ற மாதர்கள், அழகாக (கையில்) வளையல், (காதில்) குழைகள்,
(மார்பில்) முத்து மாலை இவைகளை அணிந்துள்ள வீண் பொழுது
போக்கிகள்,

விழலிகள் மெச்சுண்டு ஆடி பாடிகள் ... பயனற்றவர்கள், பிறரால்
மெச்சப்படுதலில் ஆசை கொண்டு ஆடிப் பாடுபவர்கள்,

வர மிகு வெட்கம் போல ஓடிகள் தெருவூடே குனகிகள்
பக்ஷம் போல பேசிகள்
... வருவதற்கு மிக்க வெட்கம் கொண்டவர்கள்
போல ஓடுபவர்கள், தெருவிலே கொஞ்சிப் பேசுபவர்கள், அன்பு
கொண்டவர்கள் போலப் பேசுபவர்கள்,

தனகிகள் இச்சம் பேசி கூசிகள் குசலிகள் வ(ரு)க்கம்
சூறைகாரிகள்
... சரசம் செய்பவர்கள், தங்கள் விருப்பத்தைப் பேசி
நாணம் கொள்ளுபவர்கள், தந்திரம் உள்ளவர்கள், பிசாசு அனையவர்கள்,
கொள்ளைக்காரிகள்,

பொருள் ஆசைக் கொளுவிகள் இஷ்டம் பாறி வீழ்பட ...
பொருளாசை கொண்டவர்கள், (இத்தகைய வேசியர் மீது) எனக்கு உள்ள
மோகம் சிதறுண்டு விழுந்து ஒழிய,

அருள் அமுதத்தின் சேரும் ஓர் வழி குறி தனில் உய்த்து உன்
பாதம் ஏறிட அருள் தாராய்
... உனது திருவருளாகிய அமுதத்தைச்
சேர்வதற்கு ஒரு வழியைக் காட்டும் அடையாளத்தில் என்னைச் சேர்ப்பித்து
உன்னுடைய திருவடியைக் கூடுதற்கு அருள் புரிக.

தனதன தத்தந் தான தானன
     டுடுடுடு டுட்டுண் டூடு டூடுடு
          தகுதிகு தத்தந் தீத தோதக ...... எனபேரி
...
(இத்தகைய ஒலிகளுடன்) பறைகள்,

தவில் முரசு சத்தம் தாரை பூரிகை வளை துடி பொன் கொம்பு
ஆர
... மேளம், போர்முரசுகள் ஒலி செய்யவும், நீண்ட ஊதுங் குழல்,
வளைந்த குழல், சங்கு, உடுக்கை, பொலிவுள்ள ஊது கொம்பு முதலியவை
நிறைந்து ஒலி செய்யவும்,

சூரரை சமர் தனில் முற்றும் பாறி நூறிட விடும் வேலா ...
அசுரர்களை போரில் யாவரும் சிதறுண்டு அழிந்து பொடிபட வேலைச்
செலுத்தியவனே.

தினை வன(ம்) நித்தம் காவலாளியள் நகை முறை முத்தின்
பாவை மான் மகள்
... தினைப் புனத்தை நாள்தோறும் காவல் செய்து
கொண்டிருந்தவள், பற்களின் வரிசை முத்துப் போல உள்ள பதுமை
போன்ற அழகி, மான் வயிற்றில் பிறந்த அழகியாகிய வள்ளி,

திகழ் பெற நித்தம் கூடி ஆடிய முருகோனே ... மகிழ்ச்சியில்
விளக்கம் பெற தினமும் கூடி விளையாடிய முருகனே,

திரி புர நக்கன் பாதி மாது உறை அழகிய சொக்கன் காதில்
ஓர் பொருள் செல அருளி
... முப்புரங்களைச் சிரித்தே எரித்தவனும்,
இடது பாதியில் பார்வதி உறையும் அழகிய சொக்கநாதனாகிய
சிவபெருமான் காதில் ஒப்பற்ற பிரணவப் பொருள் புகும்படி ஓதி அருளி,

தென் கூடல் மேவிய பெருமாளே. ... தென் மதுரையில்
வீற்றிருக்கும் பெருமாளே.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1365  pg 2.1366  pg 2.1367  pg 2.1368 
 WIKI_urai Song number: 970 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
மன்னிக்கவும், இப்பாடலுக்கு ஒலிப்பதிவுகள் இல்லை

Sorry, no audio recordings for this song


Song 966 - mananinai suththa (madhurai)

mananinai suththanj cUthu kArikaL
     amaLivi Laikkum kULi mULikaL
          mathapala niththam pAri nArika ...... LazhakAka

vaLaikuzhai muththum pUNum veeNikaL
     vizhalikaL mecchuN dAdi pAdikaL
          varamiku vetkam pOla vOdikaL ...... theruvUdE

kunakikaL paksham pOla pEsikaL
     thanakika Liccham pEsi kUsikaL
          kusalikaL varkkanj cURai kArikaL ...... poruLAsaik

koLuvika Lishtam pARi veezhpada
     aruLamu thaththin sEru mOrvazhi
          kuRithani luyththun pAtha mERida ...... aruLthArAy

thanathana thaththan thAna thAnana
     dudududu dudduN dUdu dUdudu
          thakuthiku thaththan theetha thOthaka ...... enapEri

thavilmura saththan thArai pUrikai
     vaLaithudi poRkom pAra cUrarai
          samarthanil mutRum pARi nURida ...... vidumvElA

thinaivana niththang kAva lALiyaL
     nakaimuRai muththin pAvai mAnmakaL
          thikazhpeRa niththang kUdi yAdiya ...... murukOnE

thiripura nakkan pAthi mAthuRai
     yazhakiya sokkan kAthi lOrporuL
          selavaru Liththen kUdalmEviya ...... perumALE.

......... Meaning .........

mana(m) ninai suththam cUthukArikaL: They think only the worst treacherous thoughts in their mind;

amaLi viLaikkum kULi mULikaL: they have the grotesque form like the overbearing devils;

mathapalam niththam pAri nArikaL azhakAka vaLai kuzhai muththum pUNum veeNikaL: these whores deliberately show off their bravado everyday and while away precious time exhibiting nice bangles on their arms, swinging studs on their ears and pearl chains on their bosom;

vizhalikaL mecchuNdu Adi pAdikaL: they are utterly useless; earnestly seeking others' admiration, they sing and dance;

vara miku vetkam pOla OdikaL theruvUdE kunakikaL paksham pOla pEsikaL: they pretend to run away as though they are too shy to appear before men; on the streets, however, they speak (with men) flirtatiously; they talk as though they are filled with love;

thanakikaL iccham pEsi kUsikaL kusalikaL va(ru)kkam sURaikArikaL: they are capable of enticing people; they express their desire openly and then feign shyness; they are highly tricky; they are fiendish; they are swindlers;

poruL Asaik koLuvikaL ishtam pARi veezhpada: and they are avaricious; in order that my delusory passion for such whores is shattered and blown apart,

aruL amuthaththin sErum Or vazhi kuRi thanil uyththu un pAtham ERida aruL thArAy: kindly guide me to that path which leads me to the nectar, namely, Your grace, so that I could attain Your hallowed feet!

thanathana thaththan thAna thAnana
     dudududu dudduN dUdu dUdudu
          thakuthiku thaththan theetha thOthaka ...... enapEri:
(To this meter), the drums were beaten loudly and

thavil murasu saththam thArai pUrikai vaLai thudi pon kompu Ara: the percussion instruments, the battle-drums, long horns, curved trumpets, conch-shells, hand-drums, and the elegant bugles were all sounded vociferously;

cUrarai samar thanil mutRum pARi nURida vidum vElA: when You wielded Your spear crushing all the demons and scattering their bodies all over, Oh Lord!

thinai vana(m) niththam kAvalALiyaL nakai muRai muththin pAvai mAn makaL: She stood guard to the millet-field everyday; this statuette-like beautiful girl has rows of teeth looking like pearls; she is VaLLi, the fine-looking damsel born to a deer;

thikazh peRa niththam kUdi Adiya murukOnE: and making that VaLLi exult in exhilaration, You played with her daily, Oh MurugA!

thiri pura nakkan pAthi mAthu uRai azhakiya sokkan kAthil Or poruL sela aruLi: He burnt down the Thiripuram by His mere smile; He has DEvi PArvathi concorporate on the left side of His body; He is the handsome Lord ChokkanAthan (SivA); into His ears You graciously preached the meaning of the matchless PraNava ManthrA!

then kUdal mEviya perumALE.: You then took Your seat in the southern city of Madhurai, Oh Great One!

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 966 mananinai suththa - madhurai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]