திருப்புகழ் 944 பந்தப்பொற் பார  (அவிநாசி)
Thiruppugazh 944 pandhappoRbAra  (avinAsi)
Thiruppugazh - 944 pandhappoRbAra - avinAsiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தத்தத் தானன தானன
     தந்தத்தத் தானன தானன
          தந்தத்தத் தானன தானன ...... தனதான

......... பாடல் .........

பந்தப்பொற் பாரப யோதர
     முந்திச்சிற் றாடகை மேகலை
          பண்புற்றுத் தாளொடு மேவிய ...... துகிலோடே

பண்டெச்சிற் சேரியில் வீதியில்
     கண்டிச்சிச் சாரொடு மேவியெ
          பங்குக்கைக் காசுகொள் வேசியர் ...... பனிநீர்தோய்

கொந்துச்சிப் பூவணி கோதையர்
     சந்தச்செந் தாமரை வாயினர்
          கும்பிட்டுப் பாணியர் வீணிய ...... ரநுராகங்

கொண்டுற்றுப் பாயலின் மூழ்கினு
     மண்டிச்செச் சேயென வானவர்
          கொஞ்சுற்றுத் தாழ்பத தாமரை ...... மறவேனே

அந்தத்தொக் காதியு மாதியும்
     வந்திக்கத் தானவர் வாழ்வுறும்
          அண்டத்துப் பாலுற மாமணி ...... யொளிவீசி

அங்கத்தைப் பாவைசெய் தாமென
     சங்கத்துற் றார்தமி ழோதவு
          வந்துக்கிட் டார்கழு வேறிட ...... வொருகோடிச்

சந்தச்செக் காளநி சாசரர்
     வெந்துக்கத் தூளிப டாமெழ
          சண்டைக்கெய்த் தாரம ராபதி ...... குடியேறத்

தங்கச்செக் கோலசை சேவக
     கொங்கிற்றொக் காரவி நாசியில்
          தண்டைச்சிக் காரயில் வேல்விடு ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பந்தம் பொன் பார பயோதரம் உந்திச் சிற்று ஆடு அகை
மேகலை பண்பு உற்றுத் தாளொடு மேவிய துகிலோடே
...
திரண்ட, அழகிய, கனத்த மார்பகம், வயிற்றில் கட்டப்பட்டுள்ள சிறிதாக
அசைந்து விளங்கும் மேகலை என்ற இடை அணி (இவை) நன்கு
பொருந்தி பாதம் வரைக்கும் தொங்குகின்ற ஆடையுடன்,

பண்டு எச்சில் சேரியில் வீதியில் கண்டு இச்சிச்சாரொடு
மேவியெ
... பழமையாயிருக்கும் பரத்தையர் வசிக்கும் சேரியில் உள்ள
தெருவில் (வருபவர்களைப்) பார்த்து, தம்மை இச்சித்து விரும்புவர்களுடன்
கூடியே,

பங்குக்கைக் காசு கொள் வேசியர் பனி நீர் தோய்
கொந்துச்சிப்பூ அணி கோதையர்
... தம்முடைய பங்குக்கு உரிய
பொருளைப் பெற்றுக் கொள்ளும் விலைமாதர், பன்னீர் தோய்ந்துள்ள
உச்சியில் கொத்துப் பூக்களை அணிந்த பெண்கள்,

சந்தச் செந்தாமரை வாயினர் கும்பிட்டுப் பாணியர் வீணியர் ...
அழகிய செந்தாமரை போன்ற வாயிதழை உடையவர்கள், வணக்கத்தைக்
காட்டும் கைகளை உடையவர்கள், வீண் காலம் போக்குபவர்கள்,

அநுராகம் கொண்டு உற்றுப் பாயலில் மூழ்கினும் மண்டிச்
செச்சே என வானவர் கொஞ்சு உற்றுத் தாழ் பத தாமரை
மறவேனே
... காம இச்சை (நான் அவர்கள் மீது) கொண்டு,
அவர்களிடமே பொருந்தி படுக்கையில் முழுகிய போதிலும், உன்னை
நெருங்கி தேவர்கள் ஜே ஜே என்று வாழ்த்தி கொஞ்சுதல் செய்து
வணங்கும் திருவடித் தாமரைகளை நான் மறக்க மாட்டேன்.

அந்தத் தொக்காதியும் ஆதியும் வந்திக்கத் தான் அவர் வாழ்வு
உறும் அண்டத்துப் பால் உற மா மணி ஒளி வீசி
... அந்த
உடலைப் படைக்கும் தலைவனான பிரமனும், திருமாலும் துதிக்கவே
தான், அவரவர் வாழ்கின்ற அண்டங்களாகிய இடங்களில் வாழவும்,
அழகிய இரத்தின மாலையின் ஒளி வீசவும்,

அங்கத்தைப் பாவை செய்தாம் என சங்கத்து உற்றார் தமிழ்
ஓத உவந்துக் கிட்டார் கழு ஏறிட
... எலும்பினின்று பெண்ணைப்
படைக்கின்றோம் என்று சங்க காலத்துப் புலவர்களின் (தேவாரத்) தமிழ்ப்
பாடலை நீ ஓதவும் *, உனது அருமை பெருமை தெரிந்து மகிழ்ந்து
உன்னைச் சேராதவர்களாகிய அமணர்கள் கழுமரத்தில் ஏறவும்,

ஒரு கோடிச் சந்தச் செக் காள நிசாசரர் வெந்து உக்கத் தூளி
படாம் எழ
... ஒரு கோடிக் கணக்கான, (ரத்தம் ஒழுகுவதால்) சிவந்த
நிறத்தைக் கொண்டவர்களும், விஷம் நிறைந்த குணம் உடையவர்களும்
ஆகிய அசுரர்களை (தீயைக் கக்கும் பாணங்களால்) வெந்து சிதற
அடிக்கவும், (போர்க்களத்தில்) தூசி போர்வை போல் கிளம்பி எழவும்,

சண்டைக்கு எய்த்தார் அமராபதி குடியேற தங்கச் செங்கோல்
அசை சேவக
... போரில் இளைத்தவர்களாகிய தேவர்கள் அவர்கள்
ஊராகிய அமராவதியில் குடி புகவும், தங்க மயமான செங்கோல்
ஆட்சியைப் புரிந்த வலிமையாளனே,

கொங்கில் தொக்கு ஆர் அவிநாசியில் தண்டைச் சிங்கார
அயில் வேல் விடு பெருமாளே.
... கொங்கு நாட்டில் சேர்ந்துள்ள
அவிநாசி** என்னும் ஊரில் வீற்றிருந்து, தண்டை அணிந்து, அழகிய,
கூரிய வேலாயுதத்தைச் செலுத்திய பெருமாளே.


* திருஞானசம்பந்தர் பானையிலிருந்த எலும்புக் கூட்டிலிருந்து பூம்பாவையை
வரவழைத்த நிகழ்ச்சி குறிப்பிடப்படுகிறது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1311  pg 2.1312  pg 2.1313  pg 2.1314 
 WIKI_urai Song number: 948 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 944 - panthappoR pAra (avinAsi)

panthappoR pArapa yOthara
     munthicchit RAdakai mEkalai
          paNputRuth thALodu mEviya ...... thukilOdE

paNdecchiR chEriyil veethiyil
     kaNdicchic chArodu mEviye
          pangukkaik kAsukoL vEsiyar ...... panineerthOy

konthucchip pUvaNi kOthaiyar
     santhacchen thAmarai vAyinar
          kumpittup pANiyar veeNiya ...... ranurAkang

koNdutRup pAyalin mUzhkinu
     maNdicchec chEyena vAnavar
          konjutRuth thAzhpatha thAmarai ...... maRavEnE

anthaththok kAthiyu mAthiyum
     vanthikkath thAnavar vAzhvuRum
          aNdaththup pAluRa mAmaNi ...... yoLiveesi

angaththaip pAvaisey thAmena
     sangaththut RArthami zhOthavu
          vanthukkit tArkazhu vERida ...... vorukOdi

santhacchek kALani sAsarar
     venthukkath thULipa dAmezha
          saNdaikkeyth thArama rApathi ...... kudiyERath

thangacchek kOlasai sEvaka
     kongitRok kAravi nAsiyil
          thaNdaicchik kArayil vElvidu ...... perumALE.

......... Meaning .........

pantham pon pAra payOtharam unthic chitRu Adu akai mEkalai paNpu utRuth thALodu mEviya thukilOdE: With their solid, beautiful and huge bosom, the nicely fitting golden belt (mekalai) making slight movements around their belly, and the loose and matching robe extending right down to their feet,

paNdu ecchil sEriyil veethiyil kaNdu icchicchArodu mEviye: these women stand in the streets of the old established hamlet of whores looking for their suitors; uniting with those coming home eagerly in search of them,

pangukkaik kAsu koL vEsiyar pani neer thOy konthucchippU aNi kOthaiyar: these whores extract the money due to them; they wear bunches of flowers on their hair sprinkled with rose water;

santhac chenthAmarai vAyinar kumpittup pANiyar veeNiyar: they have beautiful mouths looking like the red lotus; their hands are always folded together in a gesture of worship; they while away their time uselessly;

anurAkam koNdu utRup pAyalil mUzhkinum maNdic checchE ena vAnavar konju utRuth thAzh patha thAmarai maRavEnE: even though I attach myself to them passionately and drown in their bed along with them, I shall never forget Your lotus feet that are dearly hailed "JEy JEy" by the worshipping celestials who come close to You!

anthath thokkAthiyum Athiyum vanthikkath thAn avar vAzhvu uRum aNdaththup pAl uRa mA maNi oLi veesi: When Lord BrahmA, who is the God of creation of the human body, and Lord VishNu prayed to You, they were resettled by You in their respective worlds; You wear the beautiful necklace made of precious gems that dazzle;

angaththaip pAvai seythAm ena sangaththu utRAr thamizh Otha uvanthuk kittAr kazhu ERida: in order to bring out a beautiful damsel from the remains of a skeleton, You* sang a holy hymn (DEvAram) usually sung by poets of the Tamil Sangam; those samaNAs who never gladly acknowledged Your greatness and who kept away from You were sent to the gallows;

oru kOdic chanthac chek kALa nisAsarar venthu ukkath thULi padAm ezha: millions of demons, filled with venomous thoughts, were knocked down (by the fiery arrows), their reddish bodies (because of oozing blood) being strewn about everywhere; there was a blanket of dust rising in the battlefield;

saNdaikku eyththAr amarApathi kudiyERa thangac chengOl asai sEvaka: the celestials who were weakened by the war were resettled in their capital city, AmarAvathi, and Your golden rule, governed by justice, prevailed in the celestial domain, Oh Strong One!

kongil thokku Ar avinAsiyil thaNdaic chingAra ayil vEl vidu perumALE.: Taking Your seat in AvinAsi**, a town in Kongu region, You wear anklets (thaNdai) and wield the elegant and sharp spear, Oh Great One!


* ThirugnAna Sambandhar performed a feat by materialising a beautiful girl, named PUmpAvai, from her skeleton contained in a pot.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 944 pandhappoR bAra - avinAsi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]