பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அவிநாசி) திருப்புகழ் உரை 755 (சந்தச்) செ - (ரத்தம் ஒழுகுவதால்) சிவந்த (சந்தம்) நிறத்தைக் கொண்டவர்களும், (காளம்) விஷகுணங் கொண்டவர்களுமான (நிசாசரர்) அசுரர்கள், (தியைக் கக்கும்) பாணங்களால் வெந்து சிதறவும். (போர்க்களத்தில்) தூசி (படாம் எழ) போர்வைபோல் - திரைச்சீலை போல மேலே துளசி கிளம்பி எழவும், போரில் (எய்த்தார்) இளைத்தவர்களான தேவர்கள் அவர்களுடைய ஊராகிய அமராவதியில். பொன்னுலகில் - குடியேறவும் தங்கமயமான செங்கோல் (ஆட்சியை) அசை - புரிந்த (சேவக) பராக்ரமசாலியே! கொங்கு நாட்டில் (தொக்கு) சேர்ந்துள்ள அவிநாசி யென்னுந் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே தண்டையணிந்த பெருமாளே! (சிங்கார) அழகிய (அயில்) கூரிய வேலாயுதத்தைச் செலுத்தும் பெருமாளே! (பத தாமரை மறவேனே) 949. மனம் (திரைந்து) சுருங்கி வேதனைப்படும்படி எழுகின்ற (அல்லது நெஞ்சில் இரைந்து யுடன் எழுகின்ற) (ஈளை) கோழை அதிகரிக்கவும், கருநிறமுள்ள தலைமயிர் நரை கொண்டு வெளுக்கவும், தாமரை மலர் போன்றகண் (அண்டு இருளாகி) இருள் அண்டுதலாகி - கண் பஞ்சட்ைந்து - பார்வை குறையவும், நடை தடுமாற்றம் அடைவதாகியும், துன்பத்தைத் தர, தாய், மனையாள், குழந்தைகள் வெறுத்திடு அம் கிளையோர் - வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார், அவருடன் மற்றெல்லாரும் '! ம்படியான சொற்களைச் சொல்வதால் பேச்சினைப் . - நிரம்ப நாள்தோறும் பரிகசித்துச் சிரிக்க என்னைக் (கடந்திடு) அடக்கி வெற்றி கொள்ளும் பாசக்கயிறு கொண்டு கோபத்துடனே வந்து எதிர்த்துச் சூலத்தைக் கையில் எடுத்து அதை என்மேல் வீசி, அழ்ல் . நெருப்பை வாய் கக்க, நான் பயங் கொள்ளும்படியே, (என்னை) இழுக்கவந்திடும் (எம) துரதர்களானவர் (என்னை)ப் பிடிப்பதற்கு முன்பாக (நீ) உன்னுடைய தாள் தாமரையாகிய இருதிருவடிகளையும் அடியேனுக்குத் தரும் பொருட்டு மயில் மேல் வந்தருள வேண்டும்;