திருப்புகழ் 945 மனத்திரைந்தெழு  (அவிநாசி)
Thiruppugazh 945 manaththiraindhezhu  (avinAsi)
Thiruppugazh - 945 manaththiraindhezhu - avinAsiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தந்தன தானன தானன
     தனத்த தந்தன தானன தானன
          தனத்த தந்தன தானன தானன ...... தனதான

......... பாடல் .........

மனத்தி ரைந்தெழு மீளையு மேலிட
     கறுத்த குஞ்சியு மேநரை யாயிட
          மலர்க்க ணண்டிரு ளாகியு மேநடை ...... தடுமாறி

வருத்த முந்தர தாய்மனை யாள்மக
     வெறுத்தி டங்கிளை யோருடன் யாவரும்
          வசைக்கு றுஞ்சொலி னால்மிக வேதின ...... நகையாட

எனைக்க டந்திடு பாசமு மேகொடு
     சினத்து வந்தெதிர் சூலமு மேகையி
          லெடுத்தெ றிந்தழல் வாய்விட வேபய ...... முறவேதான்

இழுக்க வந்திடு தூதர்க ளானவர்
     பிடிக்கு முன்புன தாள்மல ராகிய
          இணைப்ப தந்தர வேமயில் மீதினில் ...... வரவேணும்

கனத்த செந்தமி ழால்நினை யேதின
     நினைக்க வுந்தரு வாயுன தாரருள்
          கருத்தி ருந்துறை வாயென தாருயிர் ...... துணையாகக்

கடற்ச லந்தனி லேயொளி சூரனை
     யுடற்ப குந்திரு கூறென வேயது
          கதித்தெ ழுந்தொரு சேவலு மாமயில் ...... விடும்வேலா

அனத்த னுங்கம லாலய மீதுறை
     திருக்க லந்திடு மாலடி நேடிய
          அரற்க ரும்பொருள் தானுரை கூறிய ...... குமரேசா

அறத்தை யுந்தரு வோர்கன பூசுரர்
     நினைத்தி னந்தொழு வாரம ராய்புரி
          யருட்செ றிந்தவி நாசியுள் மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மன(ம்) திரைந்து எழும் ஈளையும் மேலிட ... மனம் சுருங்கி
வேதனைப்படும்படி எழுகின்ற கோழையும் அதிகரிக்கவும்,

கறுத்த குஞ்சியுமே நரையாய் இட ... கரு நிறமுள்ள தலை மயிர்
நரை கொண்டு வெளுக்கவும்,

மலர்க் கண் அண்டு இருளாகியுமே நடை தடுமாறி ... தாமரை
போன்ற கண்கள் பஞ்சடைந்து பார்வை குறையவும், நடை தடுமாற்றம்
அடையவும்,

வருத்தமும் தர தாய் மனையாள் மக(வு) வெறுத்திட அம்
கிளையோருடன் யாவரும்
... துன்பத்தைத் தர, தாயார், மனைவி,
மக்கள் ஆகியோர், வெறுப்புக் கொள்ளும் நல்ல சுற்றத்தார் அவருடன்
மற்றெல்லாரும்

வசைக்கு உறும் சொ(ல்)லினால் மிகவே தினம் நகையாட ...
பழிக்கும் படியான சொற்களைச் சொல்வதால், நிரம்ப நாள் தோறும்
பரிகசித்துச் சிரிக்க,

எனைக் கடந்திடு பாசமுமே கொ(ண்)டு ... என்னை அடக்கி
வெற்றிக் கொள்ளும் பாசக் கயிறு கொண்டு

சினத்து வந்து எதிர் சூலமுமே கையில் எடுத்து எறிந்து ...
கோபத்துடன் வந்து எதிர்த்து, சூலத்தைக் கையில் எடுத்து அதை என்
மேல் வீசி,

அழல் வாய்விடவே பயம் உறவே தான் ... நெருப்பை வாய் கக்க,
பயம் கொள்ளும்படி

இழுக்க வந்திடு தூதர்கள் ஆனவர் ... (என்னை) இழுக்க வந்திடும்
யம தூதர்கள்

பிடிக்கு முன்பு உனது தாள் மலராகிய ... என்னைப் பிடிப்பதற்கு
முன்பாக, உன்னுடைய தாமரையாகிய

இணைப் பதம் தரவே மயில் மீதினில் வரவேணும் ... இரு
திருவடிகளையும் அடியேனுக்குத் தரும் பொருட்டு மயிலின் மீது
வந்தருள வேண்டும்.

கனத்த செம் தமிழால் நினையே தின(ம்) நினைக்கவும்
தருவாய் உனது ஆர் அருள்
... பொருள் செறிந்த செந்தமிழால்
உன்னையே தினந்தோறும் நினைக்கவும் உன்னுடைய நிறைந்த
திருவருளைத் தந்தருளுக.

கருத்து இருந்து உறைவாய் எனது ஆருயிர் துணையாக ...
என்னுடைய அருமையான உயிர்க்குத் துணையாக (என்) கருத்திலேயே
பொருந்தி வீற்றிருந்து அருள் தருவாய்.

கடல் சலம் தனிலே ஒளி சூரனை ... கடல் நீரில் (மாமரமாக)
ஒளித்திருந்த சூரனுடைய

உடல் பகுந்து இரு கூறெனவே அது கதித்து எழுந்து ...
உடலைப் பிளவு செய்ய அது இரண்டு கூறாகத் தோன்றி எழுந்து,

ஒரு சேவலும் மா மயில் விடும் வேலா ... ஒப்பற்ற சேவலும், மயிலும்
ஆகும்படி செலுத்திய வேலை உடையவனே,

அனத்தனும் கமலாலயம் மீது உறை ... அன்னத்தை வாகனமாக
உள்ள பிரமனும் தாமரைப் பூவில் வீற்றிருக்கும்

திருக் கலந்திடும் மால் அடி நேடிய ... இலக்குமி சேர்ந்துள்ள
திருமாலும் தேடிய

அரற்கு அரும் பொருள் தான் உரை கூறிய குமரேசா ...
சிவபெருமானுக்கு அரிய (பிரணவப்) பொருளை விளக்கி உபதேசித்த
குமரேசனே,

அறத்தையும் தருவோர் கன பூசுரர் ... அற நெறியை
ஓதுவோர்களும், பெருமை பொருந்திய அந்தணர்களும்,

நினைத் தினம் தொழுவார் அமராய் புரி ... உன்னை நாள் தோறும்
தொழுபவர்களாய் அமர்ந்திருத்தலை விரும்பியுள்ள

அருள் செறிந்து அவிநாசியுள் மேவிய பெருமாளே. ... அருள்
நிறையப் பாலித்து, அவிநாசி* எனும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே.


* அவிநாசி திருப்பூர் ரயில் நிலையத்திலிருந்து வடக்கே 8 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1313  pg 2.1314  pg 2.1315  pg 2.1316 
 WIKI_urai Song number: 949 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 945 - manaththiraindhezhu (avinAsi)

manaththi rainthezhu meeLaiyu mElida
     kaRuththa kunjiyu mEnarai yAyida
          malarkka NaNdiru LAkiyu mEnadai ...... thadumARi

varuththa munthara thAymanai yALmaka
     veRuththi dangkiLai yOrudan yAvarum
          vasaikku Runjcoli nAlmika vEthina ...... nakaiyAda

enaikka danthidu pAsamu mEkodu
     sinaththu vanthethir cUlamu mEkaiyi
          leduththe Rinthazhal vAyvida vEpaya ...... muRavEthAn

izhukka vanthidu thUthArka LAnavar
     pidikku munpuna thALmala rAkiya
          iNaippa thanthara vEmayil meethinil ...... varavENum

kanaththa senthami zhAlninai yEthina
     ninaikka vuntharu vAyuna thAraruL
          karuththi runthuRai vAyena thAruyir ...... thuNaiyAka

kadaRca lanthani lEyoLi cUranai
     yudaRpa kunthiru kURena vEyathu
          kathiththe zhunthoru sEvalu mAmayil ...... vidumvElA

anaththa nungkama lAlaya meethuRai
     thirukka lanthidu mAladi nEdiya
          araRka rumporuL thAnurai kURiya ...... kumarEsA

aRaththai yuntharu vOrkana pUsurar
     ninaiththi nanthozhu vArama rAypuri
          yarutce Rinthavi nAsiyuL mEviya ...... perumALE.

......... Meaning .........

mana(m) thirainthu ezhum eeLaiyum mElida: Making my heart sink, mucus and phlegm choke my throat;

kaRuththa kunjiyumE naraiyAy ida: my erstwhile black hair has turned gray;

malark kaN aNdu iruLAkiyumE nadai thadumARi: my lotus eyes are lopsided with dim and blurred vision; my erect walking gait has become tottery;

varuththamum thara thAy manaiyAL maka(vu) veRuththida am kiLaiyOrudan yAvarum: to add to my grief, my mother, wife, children and relatives who love to hate me

vasaikku uRum co(l)linAl mikavE thinam nakaiyAda: have all resorted to derisive language making me the laughing stock;

enaik kadanthidu pAsamumE ko(N)du: wielding the rope (of attachment) to overpower me,

sinaththu vanthu ethir cUlamumE kaiyil eduththu eRinthu: confronting me with rage, throwing at me the trident held in hand,

azhal vAyvidavE payam uRavE thAn: and terrifying me with flames leaping from their mouth,

izhukka vanthidu thUtharkaL Anavar: the messengers of Yaman (God of Death) have arrived to take my life away;

pidikku munpu unathu thAL malarAkiya iNaip patham tharavE mayil meethinil varavENum: before they could snatch my life, You must come, mounted on the peacock, to grant me Your two hallowed feet!

kanaththa sem thamizhAl ninaiyE thina(m) ninaikkavum tharuvAy unathu Ar aruL: Choosing rich and lofty words of the beautiful Tamil language, I must think in praise of You daily with Your kind blessings!

karuththu irunthu uRaivAy enathu Aruyir thuNaiyAka: You must dwell in my thoughts as my soulmate!

kadal salam thanilE oLi cUranai: The demon SUran hid himself (in the disguise of a mango tree) under the sea;

udal pakunthu iru kURenavE athu kathiththu ezhunthu: his body was split and came up to the surface in two parts;

oru cEvalum mA mayil vidum vElA: those parts became the unique rooster and peacock; such power was wielded by Your Spear, Oh Lord!

anaththanum kamalAlayam meethu uRai thiruk kalanthidum mAl adi nEdiya: BrahmA, who has the swan as vehicle, and Lord Vishnu, who is the consort of Lakshmi seated on the lotus, searched in vain for His feet everywhere;

araRku arum poruL thAn urai kURiya kumarEsA: to that Lord SivA You interpreted the meaning of the rare PraNava ManthrA, Oh Lord Kumara!

aRaththaiyum tharuvOr kana pUsurar: People who preach moral principles and learned VEdic scholars

ninaith thinam thozhuvAr amarAy puri: like to worship You everyday sitting around You in this place;

aruL seRinthu avinAsiyuL mEviya perumALE.: You bestow Your grace on them in plenty and are seated with relish in AvinAsi*, Oh Great One!


* AvinAsi is 8 miles north of ThiruppUr Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 945 manaththiraindhezhu - avinAsi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]