திருப்புகழ் 941 சங்கைக் கத்தோடு  (பட்டாலியூர்)
Thiruppugazh 941 sangkaikkaththOdu  (pattAliyUr)
Thiruppugazh - 941 sangkaikkaththOdu - pattAliyUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தத்தத் தான தனதன தந்தத்தத் தான தனதன
     தந்தத்தத் தான தனதன ...... தனதான

......... பாடல் .........

சங்கைக்கத் தோடு சிலுகிடு சங்கிச்சட் கோல சமயிகள்
     சங்கற்பித் தோதும் வெகுவித ...... கலைஞானச்

சண்டைக்குட் கேள்வி யலமல மண்டற்குப் பூசை யிடுமவர்
     சம்பத்துக் கேள்வி யலமல ...... மிமவானின்

மங்கைக்குப் பாக னிருடிக ளெங்கட்குச் சாமி யெனவடி
     வந்திக்கப் பேசி யருளிய ...... சிவநூலின்

மந்த்ரப்ரஸ்த் தார தரிசன யந்த்ரத்துக் கேள்வி யலமலம்
     வம்பிற்சுற் றாது பரகதி ...... யருள்வாயே

வெங்கைச்சுக் ரீபர் படையையி லங்கைக்குப் போக விடவல
     வென்றிச்சக் ரேசன் மிகமகிழ் ...... மருகோனே

வெண்பட்டுப் பூணல் வனகமு கெண்பட்டுப் பாளை விரிபொழில்
     விஞ்சிட்டுச் சூழ வெயில்மறை ...... வயலூரா

கொங்கைக்கொப் பாகும் வடகிரி செங்கைக்கொப் பாகு நறுமலர்
     கொண்டைக்கொப் பாகு முகிலென ...... வனமாதைக்

கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச்சொற் பாடு மிளையவ
     கொங்கிற்பட் டாலி நகருறை ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

சங்கைக் கத்தோடு சிலுகிடு சங்கிச் சட் கோல சமயிகள் ...
சந்தேகக் கூச்சலோடு வாதம் செய்யக் கூடியுள்ள ஆறு வகையான
சமயத்தினர்களும்

சங்கற்பித்து ஓதும் வெகு வித கலை ஞானச் சண்டைக்குள்
கேள்வி அலம் அலம்
... தாம் உறுதி செய்து கொண்டு பேசுகின்ற பல
விதமான சாஸ்திர ஞானச் சண்டைகளுக்கு வேண்டிய அறிவு போதும்
போதும்.

அண்டற்குப் பூசை இடுமவர் சம்பத்துக் கேள்வி அலம் அலம் ...
கடவுளுக்குப் பூஜை செய்பவர்களுடைய செல்வமாகிய அறிவும் போதும்
போதும்.

இமவானின் மங்கைக்குப் பாகன் இருடிகள் எங்கட்குச் சாமி
என அடி வந்திக்கப் பேசி அருளிய
... இமய மலை அரசனின்
பெண்ணாகிய பார்வதிக்குப் பாகர் என்றும், முனிவர்கள் எல்லாம்
எங்களுக்குச் சுவாமி என்றும் திருவடியைத் துதிக்க ஓதி விளக்கியுள்ள

சிவ நூலின் மந்த்ர ப்ரஸ்த்தார தரிசன அந்த்ரத்துக் கேள்வி
அலம் அலம்
... சிவ நூல்களில் கூறப்பட்ட மந்திரங்களின் கணக்குப்
பிரமாண காட்சியை விளக்கும் மந்திர சக்கரங்களைப் பற்றிய ஆராய்ச்சி
அறிவும் போதும் போதும்.

வம்பில் சுற்றாது பரகதி அருள்வாயே ... இவ்வாறு வீணான சுற்று
வழிகளில் நான் திரிந்து அலையாமல் மேலான வீட்டுப் பேற்றை
அருள்வாயாக.

வெங்கைச் சுக்ரீபர் படையை இலங்கைக்குப் போக விட
வ(ல்)ல வென்றிச் சக்ரேசன் மிக மகிழ் மருகோனே
... மிக்க
ஆற்றலைக் கொண்ட சுக்ரீவனுடைய வானர சேனையை (கடல் கடந்து)
இலங்கைக்கு போகும்படிச் செய்ய வல்லவனும், வெற்றியையே தருகின்ற
சக்கரத்தை ஏந்தியவனுமாகிய திருமால் மிகவும் மனம் மகிழும் மருகனே,

வெண் பட்டுப் பூண் நல் வனம் கமுகு எண்பட்டுப் பாளை
விரி பொழில் விஞ்சிட்டுச் சூழ வெயில் மறை வயலூரா
...
வெண் பட்டு அணிந்துள்ளது போல் நல்ல அழகிய பாக்கு மரங்கள்
மதிக்கத் தக்க வகையில் பாளைகளை விரிக்கின்ற சோலைகள் மிக்குச்
சூழ்வதால் வெயில் மறைபடுகின்ற வயலூரில் வீற்றிருப்பவனே,

கொங்கைக்கு ஒப்பாகும் வட கிரி செம் கைக்கு ஒப்பாகும்
நறு மலர் கொண்டைக்கு ஒப்பாகும் முகில் என
... உனது
மார்புக்கு வடக்கே உள்ள மேரு மலையே ஒப்பானது, உனது செவ்விய
கைக்கு நறு மணம் வீசும் தாமரையே ஒப்பாகும், உனது கூந்தலுக்கு கரு
மேகம் ஒப்பாகும் என்று

வன மாதைக் கும்பிட்டுக் காதல் குனகிய இன்பச் சொல்
பாடும் இளையவ
... காட்டில் இருந்த வள்ளியை கும்பிட்டுத்
துதித்து வணங்கிய, கொஞ்சிப் பேசி இனிய சொற்களைக் கொண்டு
பாடிப் பரவிய, இளையவனே,

கொங்கில் பட்டாலி நகர் உறை பெருமாளே. ... கொங்கு
நாட்டில் உள்ள பட்டாலி நகரில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* இது 'பட்டாலி சிவ மலை' என்று வழங்கப்படுகிறது. ஈரோடு - திருப்பூர்
சாலையில் உள்ள காங்கேயத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1305  pg 2.1306  pg 2.1307  pg 2.1308 
 WIKI_urai Song number: 945 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 941 - sangkaik kaththOdu (pattAliyUr)

sangaikkath thOdu silukidu sangicchat kOla samayikaL
     sangaRpith thOthum vekuvitha ...... kalainjAnas

saNdaikkut kELvi yalamala maNdaRkup pUsai yidumavar
     sampaththuk kELvi yalamala ...... mimavAnin

mangaikkup pAka nirudika Lengatkuc chAmi yenavadi
     vanthikkap pEsi yaruLiya ...... sivanUlin

manthrapraSth thAra tharisana yanthraththuk kELvi yalamalam
     vampiRchut RAthu parakathi ...... yaruLvAyE

vengaicchuk reepar padaiyaiyi langaikkup pOka vidavala
     venRicchak rEsan mikamakizh ...... marukOnE

veNpattup pUNal vanakamu keNpattup pALai viripozhil
     vinjittuchsUzh chUzha veyilmaRai ...... vayalUrA

kongaikkop pAkum vadakiri sengaikkop pAku naRumalar
     koNdaikkop pAku mukilena ...... vanamAthaik

kumpittuk kAthal kunakiya inpacchoR pAdu miLaiyava
     kongiRpat tAli nakaruRai ...... perumALE.

......... Meaning .........

sangaik kaththOdu silukidu sangic chad kOla samayikaL: The zealots of the six religions assemble and argue making a lot of noise, but are not sure of themselves;

sangaRpiththu Othum veku vitha kalai njAnac chaNdaikkuL kELvi alam alam: I am fed up with their egotism that is displayed deliberately in academic disputes of many sorts;

aNdaRkup pUsai idumavar sampaththuk kELvi alam alam: I am also fed up with the knowledge shown off as great asset by the ritual worshippers of God;

imavAnin mangaikkup pAkan irudikaL engatkuc chAmi ena adi vanthikkap pEsi aruLiya: He is described as the consort of PArvathi, the daughter of the Mountain-King HimavAn, and is claimed to be their own Lord by sages; to praise the hallowed feet of that Lord SivA,

siva nUlin manthra praSththAra tharisana anthraththuk kELvi alam alam: there are many ManthrAs detailed in the Saivite works whose extensive accounts are to be found in ManthrA chakrAs, and I am tired of these kinds of research;

vampil sutRAthu parakathi aruLvAyE: saving me from going through all such roundabout ways, kindly grant me blissful liberation!

vengaic chukreepar padaiyai ilangaikkup pOka vida va(l)la venRic chakrEsan mika makizh marukOnE: He made the armies of monkeys belonging to the mighty king Sugreevan cross the ocean and land in LankA; He holds in His hand the victorious disc; and that Lord VishNu is elated to have a nephew like You, Oh Lord!

veN pattup pUN nal vanam kamuku eNpattup pALai viri pozhil vinjittuch chUzha veyil maRai vayalUrA: Around this town, there are many groves where beautiful betelnut trees of good quality gorgeously spread their branches so wide that the sun is hidden behind the shades; and You belong to this place, VayalUr!

kongaikku oppAkum vada kiri sem kaikku oppAkum naRu malar koNdaikku oppAkum mukil ena: Declaring that her bosom is like the Mount MEru in the north, her hand is like the fragrant lotus and her hair is like the dark cloud,

vana mAthaik kumpittuk kAthal kunakiya inpac chol pAdum iLaiyava: You prostrated at the feet of VaLLi, the damsel of the forest, and sang her praise with sweet words, Oh Young Lord!

kongil pattAli nakar uRai perumALE.: You have Your seat in PattAlinagar* of the Kongu Region, Oh Great One!


* This place is now known as PattAli Sivamalai, situated on the road between EerOde (Erode) and ThiruppUr, near KangkEyam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 941 sangkaik kaththOdu - pattAliyUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]