பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டாலியூர்) திருப்புகழ் உரை 747 பத்துாரர் (பத்து ஊரர்) அடியார்க்கு உரிய ಶ್ದಿ இலக்கணங்களும் பொருந்திய (ஊரர்) சுந்தரர் தம்மைப் பரவிப் போற்ற, வேகமாகத் (தூது) சென்ற உண்மைத் துரதர், தம்முடன் (விரவ) உள்ளம் கலக்கத் திருவருளைப் பாலிப்பவரும், (பற்று) உற்ற துணையாக இருப்பவருமான பரமர் (சிவபிரானுக்குப்) (பவுருஷம்) ஆண்மைக்குணம் நிறைந்த குருமூர்த்தியே! (தூதர் கலந்து கேட்க அவருக்குப்....பர்ம் -மேலான குருநாதனே எனலுமாம்.) பசிய ஒலைகளைக் கொண்டு விளங்கும் பனைமரங்கள் வளர்ந்துள்ள (மை) இருண்ட சோலைகளில் மயில்கள் நடனம் செய்கின்ற பட்டாலியூரில் வீற்றிருக்கும் பெருமாளே! தேவர்கள் பெருமாளே! (iற்றிருக்கும் தேவர் பெருமாளே)! (குற்றேவல் அடிமை செயும் வகை அருளாதோ) 945. (சங்கை) சந்தேகத் (கத்தோடு) கூச்சலோடு (சிலுகிடு) வாதம் செய்யும் - சண்டை செய்யும், (சங்கி) (கூட்டமாயுள்ள) கூடியுள்ள ஆறுவித சமயத்தினர்களும் தாம் தாம் உறுதி செய்துகொண்டு பேசுகின்ற பலவிதமான சாத்திர ஞானச் சண்டைக்கு வேண்டிய கேள்வி அறிவு போதும் போதும்; (அண்டற்கு) கடவுளுக்கென்று பூஜை செய்பவர்களுடைய செல்வம்ாம் கேள்விஅறிவும் போதும் போதும், இமயராஜனது பெண்ணாம் பார்வதிக்குப் பாகர் என்றும், ரிஷிகள் எல்லாம் எங்களுக்குச் சுவாமி என்றும், தமது திருவடியைத் துதிக்க, ஒதி விள்க்கியுள்ள சிவநூல்களிற் கூறப்பட்ட மந்த்ர - மந்திரங்களின் (பிரஸ்த்தார) கணக்குப் பிரமாணக் காட்சியை விளக்கும் மந்த்ர சக்கரங்களைப் o; ராய்ச்சி அறிவும் போதும் போதும் (இங்ங்னமெல்லாம்) னான சுற்றான வழிகளில் நான் சுற்றி அலையாமல் (பரகதியை) மோகூடித்தை நீ தந்து அருளுவாயாக (தொடர்ச்சி) சரியையில் தாழ்க்கலை கிரியையிற் பணிக்கலை யோகத் துய்க்கலை பாகமு நோக்கலை ஈண்டெனக் கருளுதி இறைவ! பூண்டு கொண்டிருப்பனின் பொன்னடித் துணையே" பண்டார மும்மணிக் கோவை - 29.