திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 930 குருவும் அடியவர் (நெருவூர்) Thiruppugazh 930 guruvumadiyavar (neruvUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன தனன தனதன தனதன தனதன ...... தனதான ......... பாடல் ......... குருவு மடியவ ரடியவ ரடிமையு மருண மணியணி கணபண விதகர குடில செடிலினு நிகரென வழிபடு ...... குணசீலர் குழுவி லொழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகு தலுமிலி நலமிலி பொறையிலி குசல கலையிலி தலையிலி நிலையிலி ...... விலைமாதர் மருவு முலையெனு மலையினி லிடறியும் அளக மெனவள ரடவியில் மறுகியு மகர மெறியிரு கடலினில் முழுகியு ...... முழலாமே வயலி நகரியி லருள்பெற மயில்மிசை யுதவு பரிமள மதுகர வெகுவித வனச மலரடி கனவிலு நனவிலு ...... மறவேனே உருவு பெருகயல் கரியதொர் முகிலெனு மருது நெறிபட முறைபட வரைதனில் உரலி னொடுதவழ் விரகுள இளமையு ...... மிகமாரி உமிழ நிரைகளி னிடர்கெட வடர்கிரி கவிகை யிடவல மதுகையு நிலைகெட வுலவில் நிலவறை யுருவிய வருமையு ...... மொருநூறு நிருப ரணமுக வரசர்கள் வலிதப விசயன் ரதமுதல் நடவிய வெளிமையு நிகில செகதல முரைசெயு மரிதிரு ...... மருகோனே நிலவு சொரிவளை வயல்களு நெடுகிய குடக தமனியு நளினமு மருவிய நெருவை நகருறை திருவுரு வழகிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... குருவும் அடியவர் அடியவர் அடிமையும் ... குருவின் நிலையிலும், சீடனாக இருக்கும் போதும், அந்தச் சீடருக்கு அடிமையாக இருக்கும் நிலையிலும், அருண மணி அணி கண பண விதகர குடில செடிலினு(ம்) ... சிவந்த ரத்தினங்களைக் கொண்டுள்ள, கூட்டமான படங்களை உடைய பாம்பின் தன்மையைக் கொண்ட, வளைவுள்ள குண்டலினி யோக நிலையிலும், நிகர் என வழிபடு குணசீலர் குழுவில் ஒழுகுதல் தொழுகுதல் விழுகுதல் அழுகுதலும் இலி ... ஒப்ப மனம் அடங்கி நின்று, உன்னையே வழிபடுகின்ற நற்குணங்களை உடைய சீலர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்து அவர்கள் வழி நடத்தல், போற்றுதல், விழுந்து வணங்குதல், (பக்திப் பரவசத்தால்) அழுதல் இவை ஏதும் நான் இல்லாதவன், நலம் இலி பொறை இலி குசல கலை இலி தலை இலி நிலை இலி ... நல்ல குணம் எதுவும் இல்லாதவன், பொறுமை இல்லாதவன், நன்மை பயக்கும் நூல்களைக் கல்லாதவன், சிந்திக்கத் தெரியாதவன், நிலைத்த புத்தி இல்லாதவன், விலைமாதர் மருவு முலை எனும் மலையினில் இடறியும் அளகம் என வளர் அடவியில் மறுகியும் ... வேசியர்களின் மலை போன்ற மார்பகங்களில் இடறி விழுந்தும், கூந்தல் என்னும் பெயரோடு வளர்கின்ற காட்டில் மனம் மயக்கமுற்றுத் திரிந்தும், மகரம் எறி இரு கடலினில் முழுகியும் உழலாமே ... மகர மீன்களைப் போல் (காது வரை நீண்டு அங்குள்ள குண்டலங்களைத்) தாக்கும் இரண்டு கண்கள் என்னும் கடலினில் முழுகியும் அலைச்சல் உறாமல், வயலி நகரியில் அருள் பெற மயில் மிசை உதவு ... வயலூர்ப் பதியில் அடியேன் உனது திருவடியைப் பெற நீ மயில் மீது வந்து அளித்த பரிமள மது கர வெகு வித வனச மலர் அடி கனவிலும் நனவிலும் மறவேனே ... நறுமணம் உள்ள, பலவிதமான வண்டுகள் மொய்க்கும், தாமரை மலர் போன்ற திருவடியை கனவிலும் நனவிலும் நான் மறக்க மாட்டேன். உருவு பெருகு அயல் கரியது ஒர் முகில் எனு மருது நெறி பட முறைபட ... உருவம் பெரியதாய் பக்கத்தில் இருந்த கரிய மேகம் போன்ற மருதமரம் தாம் செல்லும் வழியில் முறிக்கப்பட்டு விழ, அதனால் நீதி* வெளிப்பட, வரைதனில் உரலினொடு தவழ் விரகு உள இளமையும் ... (இடுப்பில் கட்டிய) மலை போன்ற உரலினுடன் தவழ்ந்து சென்ற வல்லமை கொண்ட இளமை அழகையும், மிக மாரி உமிழ நிரைகளின் இடர் கெட அடர் கிரி கவிகை இட வல மதுகையும் ... வலுத்த மழை பொழிய, பசுக்களின் துயர் நீங்க, நெருங்கிய (கோவர்த்தன) மலையை குடையாகப் பிடிக்க வல்ல கருணையான வலிமையையும், நிலை கெட உலவு இல் நிலவறை உருவிய அருமையும் ... நிலை தடுமாற, உலவுவதற்கு இடமில்லாத பாதாள அறையில், (தேவகி - வசுதேவருக்காக) விஸ்வ ரூபத்துடன் தோன்றி எழுந்த அருமையையும், ஒரு நூறு நிருப ரண முக அரசர்கள் வலி தப விசயன் ரத முதல் நடவிய எளிமையும் ... ஒப்பற்ற நூறு (துரியோதனன் முதலிய) அரசர்களும், போர்க்களத்தில் மற்ற அரசர்களும் வலிமை கெட்டொழிய, அர்ச்சுனனுடைய தேரை முன்பு செலுத்திய (அடியார்க்கு உதவும்) எளிமையையும் பற்றி நிகில செகதலம் உரை செயும் அரி திரு மருகோனே ... எல்லா பூமிகளும் புகழ்ந்து உரைக்கும் (கண்ணனாம்) திருமாலின் இனிய மருகனே, நிலவு சொரி வளை வயல்களும் நெடுகிய ... ஒளி வீசும் சங்குகளும் வயல்களும் வழி நெடுகப் பரந்துள்ளனவும், குடக தமனியு(ம்) நளினமும் மருவிய ... மேற்குத் திசையில் உள்ள வன்னி மரங்களும் தாமரையும் பொருந்தினவும் ஆகிய நெருவை நகர் உறை திரு உரு அழகிய பெருமாளே. ... நெருவை** என்னும் நகரில் வீற்றிருக்கும், அழகிய திருவுருவம் கொண்ட பெருமாளே. |
* நள கூபரர் என்ற கந்தர்வர்கள் சபிக்கப்பட்டு மருதமரமாக கோகுலத்தில் வளர்ந்தனர். கண்ணன் உரலுடன் தவழ்ந்து மோதி மருத மரத்தையும் சாபத்தையும் முறியடித்தான். |
** 'நெருவை' என்னும் 'நெரூர்' (நெருவூர்) கருவூருக்கு (அதாவது கரூர்) அருகில் உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1277 pg 2.1278 pg 2.1279 pg 2.1280 WIKI_urai Song number: 934 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 930 - guruvum adiyavar (neruvUr) guruvu madiyava radiyava radimaiyu maruNa maNiyaNi kaNapaNa vithakara kudila sedilinu nikarena vazhipadu ...... kuNaseelar kuzhuvi lozhukuthal thozhukuthal vizhukuthal azhuku thalumili nalamili poRaiyili kusala kalaiyili thalaiyili nilaiyili ...... vilaimAthar maruvu mulaiyenu malaiyini lidaRiyum aLaka menavaLa radaviyil maRukiyu makara meRiyiru kadalinil muzhukiyu ...... muzhalAmE vayali nakariyi laruLpeRa mayilmisai yuthavu parimaLa mathukara vekuvitha vanasa malaradi kanavilu nanavilu ...... maRavEnE uruvu perukayal kariyathor mukilenu maruthu neRipada muRaipada varaithanil urali noduthavazh virakuLa iLamaiyu ...... mikamAri umizha niraikaLi nidarkeda vadarkiri kavikai yidavala mathukaiyu nilaikeda vulavil nilavaRai yuruviya varumaiyu ...... morunURu nirupa raNamuka varasarkaL valithapa visayan rathamuthal nadaviya veLimaiyu nikila sekathala muraiseyu marithiru ...... marukOnE nilavu sorivaLai vayalkaLu nedukiya kudaka thamaniyu naLinamu maruviya neruvai nakaruRai thiruvuru vazhakiya ...... perumALE. ......... Meaning ......... guruvum adiyavar adiyavar adimaiyum: Those who are in the status of masters, disciples or subordinates to those disciples, aruNa maNi aNi kaNa paNa vithakara kudila sedilinu(m): and who are able to raise the spiral shaped Kundalini, like the multi-hooded serpent having red gems in its hoods, nikar ena vazhipadu kuNaseelar kuzhuvil ozhukuthal thozhukuthal vizhukuthal azhukuthalum ili: have all a calm and collected mind; I have not joined the company of such virtuous people who worship only You; I do not follow their path, praise them, prostrating at their feet, nor do I cry in devotional ecstasy; nalam ili poRai ili kusala kalai ili thalai ili nilai ili: I do not have a single virtue; I have no patience nor have I studied the texts that are conducive to enrich merit of values; I have an unstable mind. vilai mAthar maruvu mulai enum malaiyinil idaRiyum aLakam ena vaLar adaviyil maRukiyum: I fall all over the mountain-like bosom of the whores and roam about in delusion in the jungle that is known as their hair; makaram eRi iru kadalinil muzhukiyum uzhalAmE: I wander all over and get drowned in the sea of their two eyes which are like the makara fish, (stretching right up to their ears) attacking the ear rings. vayali nakariyil aruL peRa mayil misai uthavu: You blessed me with Your hallowed feet in VayalUr where You came mounted on the peacock; parimaLa mathu kara veku vitha vanasa malar adi kanavilum nanavilum maRavEnE: I can never forget even in my dreams Your lotus-like fragrant feet around which a variety of beetles were humming! uruvu peruku ayal kariyathu or mukil enu maruthu neRi pada muRaipada: The marutha tree by the side had grown so tall that it looked like a dark cloud; it was smashed down, thereby establishing justice*, varaithanil uralinodu thavazh viraku uLa iLamaiyum: when He came down crawling with a mountain-like stone-mortar (tied to His waist) - that mighty youthful valour; mika mAri umizha niraikaLin idar keda adar kiri kavikai ida vala mathukaiyum: when the rain poured down incessantly, He held the Mount (Govardhan) as an umbrella to protect the cows from misery - that compassionate power; nilai keda ulavu il nilavaRai uruviya arumaiyum: in the crammed prison cell with little space to move around, He revealed His fullest universal form (to His parents VasudEvar and DEvaki) - that rare grandeur; oru nURu nirupa raNa muka arasarkaL vali thapa visayan ratha muthal nadaviya eLimaiyum: the matchless hundred kings (including DuriyOdanan) and other kings in the battlefield were overpowered when He once drove the chariot for Arjunan - and that spontaneous assistance He offers to His devotees with humility; nikila sekathalam urai seyum ari thiru marukOnE: are praised by all the worlds; You are the dear nephew of that (KrishNA) VishNu, Oh Lord! nilavu sori vaLai vayalkaLum nedukiya: Conches radiating light and paddy fields are widely spread throughout this place; kudaka thamaniyu(m) naLinamum maruviya: the vanni trees which grow in the western parts and lotus are also seen here; neruvai nakar uRai thiru uru azhakiya perumALE.: this town is Neruvai**, where You have taken Your seat majestically, Oh Great One! |
* When the GandharvAs NaLa and KUbarA were cursed to be born as marutha trees in this world, they grew up in GOkulam. When KrishnNa, with a stone-barrel tied to His waist, crawled nearby, the trees were knocked down, delivering justice to the cursed ones. |
** Neruvai - known as NerUr or NeruvUr - is near KaruvUr (KarUr). |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |