திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 929 முகிலள கஞ்சரி (கருவூர்) Thiruppugazh 929 mugilaLakanjari (karuvUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன தனதன தந்தன தாத்தன ...... தனதான ......... பாடல் ......... முகிலள கஞ்சரி யாக்குழை யிகல்வன கண்சிவ வாச்சிவ முறுவல்மு கங்குறு வேர்ப்பெழ ...... வநுபோக முலைபுள கஞ்செய வார்த்தையு நிலையழி யும்படி கூப்பிட முகுளித பங்கய மாக்கர ...... நுதல்சேரத் துயரொழு குஞ்செல பாத்திர மெலியமி குந்துத ராக்கினி துவளமு யங்கிவி டாய்த்தரி ...... வையர்தோளின் துவயலி நின்றன வ்யாத்தமும் வயலியல் வஞ்சியில் மேற்பயில் சொருபமு நெஞ்சிலி ராப்பகல் ...... மறவேனே சகலம யம்பர மேச்சுரன் மகபதி யுய்ந்திட வாய்த்தருள் சரவண சம்பவ தீர்க்கஷண் ...... முகமாகிச் சருவுக்ர வுஞ்சசி லோச்சய முருவவெ றிந்தகை வேற்கொடு சமரமு கந்தனில் நாட்டிய ...... மயிலேறி அகிலமு மஞ்சிய வாக்ரம விகடப யங்கர ராக்கத அசுரர கங்கெட வார்த்திடு ...... கொடிகூவ அமரர டங்கலு மாட்கொள அமரர்த லங்குடி யேற்றிட அமரரை யுஞ்சிறை மீட்டருள் ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... முகில் அளகம் சரியாக் குழை இகல்வன கண் சிவவாச் சிவ(ம்) முறுவல் முகம் குறு வேர்ப்பு எழ ... மேகம் போன்ற கரிய கூந்தல் சரிய, (காதிலுள்ள) குண்டலங்களோடு பகைத்து வருவன போன்ற கண்கள் சிவக்க, மகிழ்ச்சியைக் காட்டும் புன் சிரிப்புடன் கூடிய முகத்தில் சிறு வியர்வை தோன்ற, அநுபோக முலை புளகம் செய வார்த்தையு(ம்) நிலை அழியும்படி கூப்பிட முகுளித பங்கயமாக் கர(ம்) நுதல் சேர ... இன்ப நுகர்ச்சிக்கு இடமான மார்பகங்கள் புளகம் கொள்ள, பேச்சும் பதறுவது போல் எழ, குவிந்த தாமரையாக கைகள் நெற்றியில் சேர, துயர் ஒழுகும் செல பாத்திர(ம்) மெலிய மிகுத்து உதர அக்கினி துவள முயங்கி விடாய்த்து ... துன்பமே பெருகுவதும், நீரோடு கூடியதுமான கொள்கலமாகிய இந்த உடல் மெலிந்து, வயிற்றில் எரி அதிகமாக, துவண்டு போகும் அளவுக்கு தழுவிப் புணர்ந்து களைப்பு அடைந்து, அரிவையர் தோளின் துவயலி நின் தன வ்யாத்தமும் வயல் இயல் வஞ்சியில் மேல் பயில் சொருபமு(ம்) நெஞ்சில் இராப் பகல் மறவேனே ... பெண்கள் தோள்களில் துவையல் போல் அரைக்கப் பட்ட நான் உன்னுடைய எங்கும் நிறைந்திருக்கும் தன்மையையும், வயல்கள் பொருந்திய வஞ்சி என்னும் கருவூரில்* பொருந்தி விளங்கும் உனது வடிவழகையும் என் மனத்தில் இரவும் பகலும் மறக்க மாட்டேன். சகல மயம் பரமேச்சுரன் மகபதி உய்ந்திட வாய்த்து அருள் சரவண சம்பவ தீர்க்க ஷண்முகமாகி ... எங்கும் நிறைந்த பொருளாகிய பரமேசுரன், நட்சத்திரங்களுக்குத் தலைவனான இந்திரன் உய்யும் பொருட்டு தோற்றுவித்த சரவணபவனே, அறிவும், தெளிவும், வசீகரமும் காட்டும் ஆறு திருமுகங்களைக் கொண்டவனாகி, சருவு க்ரவுஞ்ச சிலோச்சயம் உருவ எறிந்த கை வேல் கொடு சமர முகம் தனில் நாட்டிய மயில் ஏறி ... போராடிய கிரவுஞ்ச மலை ஊடுருவிச் செல்லும்படி செலுத்திய வேலாயுதத்தால் போர்க் களத்தில் நடனம் செய்யும் மயில் மேல் ஏறி, அகிலமும் அஞ்சிய ஆக்ரம விகட பயங்கர ராக்கத அசுரர் அகம் கெட ஆர்த்திடு கொடி கூவ ... எல்லாரும் பயப்படும்படியான கர்வத்தையும், தொந்தரையையும், அச்சத்தையும் தந்த வலிய ராக்ஷத அசுரர்களின் அகங்காரம் அழியும்படி கொடியில் விளங்கிய கோழி கூவ, அமரர் அடங்கலும் ஆட் கொள அமரர் தலம் குடி ஏற்றிட அமரரையும் சிறை மீட்டு அருள் பெருமாளே. ... தேவர்கள் எல்லாரும் ஆட்கொள்ளப் படவும், தேவர்கள் தங்கள் ஊருக்குக் குடி போகவும் அவர்களைச் (சூரனின்) சிறையினின்று மீட்டு அருளிய பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1275 pg 2.1276 pg 2.1277 pg 2.1278 WIKI_urai Song number: 933 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 929 - mugilaLa kanjari (karuvUr) mukilaLa kanjcari yAkkuzhai yikalvana kaNsiva vAcchiva muRuvalmu kanguRu vErppezha ...... vanupOka mulaipuLa kanjcheya vArththaiyu nilaiyazhi yumpadi kUppida mukuLitha pangaya mAkkara ...... nuthalsErath thuyarozhu kunjela pAththira meliyami kunthutha rAkkini thuvaLamu yangivi dAyththari ...... vaiyarthOLin thuvayali ninRana vyAththamum vayaliyal vanjiyil mERpayil sorupamu nenjili rAppakal ...... maRavEnE sakalama yampara mEcchuran makapathi yuynthida vAyththaruL saravaNa sampava theerkkashaN ...... mukamAkic charuvukra vumchasi lOcchaya muruvave Rinthakai vERkodu samaramu kanthanil nAttiya ...... mayilERi akilamu manjiya vAkrama vikadapa yangara rAkkatha asurara kamkeda vArththidu ...... kodikUva amarara dangalu mAtkoLa amarartha langudi yEtRida amararai yumchiRai meettaruL ...... perumALE. ......... Meaning ......... mukil aLakam sariyAk kuzhai ikalvana kaN sivavAc chiva(m) muRuval mukam kuRu vErppu ezha: Their cloud-like black hair slid and fell down; their eyes appearing in combat with the swinging ear-studs reddened; little beads of perspiration appeared on their elated and smiling face; anupOka mulai puLakam seya vArththaiyu(m) nilai azhiyumpadi kUppida mukuLitha pangayamAk kara(m) nuthal sEra: their breasts, being the source of blissful enjoyment, became exhilarated; their speech stuttered; their folded hands joined together like lotus on their forehead; thuyar ozhukum jela pAththira(m) meliya mikuththu uthara akkini thuvaLa muyangi vidAyththu: this body of mine, like a water vessel, which is a receptacle of all miseries became emaciated; fire burnt inside my stomach, and I became exhausted, as I went limp with fatigue due to excessive hugging and coitus; arivaiyar thOLin thuvayali nin thana vyAththamum vayal iyal vanjiyil mEl payil sorupamu(m) nenjil irAp pakal maRavEnE: I was mashed like chutney on the shoulders of these women; nonetheless, I shall never forget, day in and day out, Your Omniscience of permeating everywhere and the grandeur with which You took Your seat in Vanji (KaruvUr)* surrounded by paddy fields, Oh Lord! sakala mayam paramEcchuran makapathi uynthida vAyththu aruL saravaNa sampava theerkka shaNmugamAgi: He is the Supreme Lord pervading all places; that Lord SivA created You in order that IndrA, the leader of the stars, could prosper, Oh SaravaNabavA! You are bestowed with six hallowed faces radiating intellect, lucidity and charm! charuvu kravunja silOcchayam uruva eRintha kai vEl kodu samara mukam thanil nAttiya mayil ERi: When confronted in the battlefield, You wielded the spear to pierce Mount Krouncha and mounted the dancing peacock on the field! akilamum anjiya Akrama vikada payangara rAkkatha asurar akam keda Arththidu kodi kUva: The Rooster on Your staff crowed aloud destroying the egoism of the strong demons whose haughtiness terrified, harassed and intimidated one and all! amarar adangalum At koLa amarar thalam kudi EtRida amararaiyum siRai meettu aruL perumALE.: You protected the celestials in their entirety resettling them in their native land after freeing the DEvAs from the shackles (of the demon SUran), Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |