திருப்புகழ் 911 தாமரையின் மட்டு  (வயலூர்)
Thiruppugazh 911 thAmaraiyinmattu  (vayalUr)
Thiruppugazh - 911 thAmaraiyinmattu - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தானன தனத்த தானன தனத்த
     தானன தனத்த ...... தனதான

......... பாடல் .........

தாமரையின் மட்டு வாசமல ரொத்த
     தாளிணை நினைப்பி ...... லடியேனைத்

தாதவிழ் கடுக்கை நாகமகிழ் கற்ப
     தாருவென மெத்தி ...... யவிராலி

மாமலையி னிற்ப நீகருதி யுற்று
     வாவென அழைத்தென் ...... மனதாசை

மாசினை யறுத்து ஞானமு தளித்த
     வாரமினி நித்த ...... மறவேனே

காமனை யெரித்த தீநயன நெற்றி
     காதிய சுவர்க்க ...... நதிவேணி

கானிலுறை புற்றி லாடுபணி யிட்ட
     காதுடைய அப்பர் ...... குருநாதா

சோமனொ டருக்கன் மீனுலவு மிக்க
     சோலைபுடை சுற்று ...... வயலூரா

சூடிய தடக்கை வேல்கொடு விடுத்து
     சூர்தலை துணித்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

தாமரையின் மட்டு வாசமல ரொத்த ... தாமரைப்பூவிலேயே
நிரம்பிய மணம்வாய்ந்த மலருக்குச் சமானமான

தாளிணை நினைப்பில் அடியேனை ... உன் இரு திருவடிகளின்
நினைப்பே இல்லாத அடியேனை,

தாதவிழ் கடுக்கை ... மகரந்தப்பொடி விரியும் கொன்றை,

நாகமகிழ் கற்ப தாருவென ... சுரபுன்னை, மகிழமரம் இவையெல்லாம்
கற்பக விருட்சங்கள் போல வளர்ந்து

மெத்திய விராலி மாமலையில் ... நிறைந்த விராலிப் பெருமலையில்

நிற்ப நீகருதி யுற்று வாவென ... யாம் நிற்போம்* நீ அதை மனத்தில்
நினைத்து அந்தத் தலத்திற்கு வருவாயாக என்று

அழைத்து என்மனதாசை மாசினை அறுத்து ... அழைப்பு விடுத்து,
என் மனத்திலுள்ள ஆசை என்னும் குற்றத்தை ஒழித்து,

ஞானமுது அளித்த வாரம் ... ஞானாமிர்தப் பிரசாதம் அளித்த
அன்பை

இனி நித்த மறவேனே ... இனி என்றைக்கும் யான் மறக்கமாட்டேன்.

காமனை யெரித்த தீநயன நெற்றி ... மன்மதனை எரித்த
நெருப்புக்கண் உள்ள நெற்றியையும்,

காதிய சுவர்க்க நதி வேணி ... வேகமாக வந்த ஆகாய கங்கையைத்
தாங்கிய ஜடாமுடியையும்,

கானிலுறை புற்றில் ஆடுபணி யிட்ட காது ... காட்டிலுள்ள புற்றில்
படமெடுத்து ஆடும் பாம்பை அணிந்த காதையும்

உடைய அப்பர் குருநாதா ... கொண்ட தந்தை சிவனாரின்
குருநாதனே,

சோமனொடு அருக்கன் மீனுலவு ... சந்திரனும், சூரியனும்,
நக்ஷத்திரங்களும் உலவும்

மிக்க சோலை புடைசுற்று வயலூரா ... உயரச் சோலைகள் சுற்றியும்
உள்ள வயலூரனே**,

சூடிய தடக்கை வேல்கொடு ... அகன்ற திருக்கை வேலினைக்
கொண்டு,

விடுத்து சூர்தலை துணித்த பெருமாளே. ... அதைச் செலுத்தி
சூரனது சிரத்தைக் கொய்தெறிந்த பெருமாளே.


* இச் சம்பவம் அருணகிரிநாதர் வாழ்க்கையிலே நடந்த வரலாறு - முதல் நான்கு
அடிகள் விராலிமலைக்கு சுவாமிகளை முருகன் வரச் சொன்னதை குறிக்கின்றன.


** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1225  pg 2.1226  pg 2.1227  pg 2.1228 
 WIKI_urai Song number: 915 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Kumaravayaloor Thiru T. Balachandhar
'குமார வயலூர்' திரு T. பாலசந்தர்

Thiru T. Balachandhar
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 911 - thAmaraiyin mattu (vayalUr)

thAmaraiyin mattu vAsamalar oththa
     thALiNai ninaippil ...... adiyEnai

dhAthavizh kadukkai nAga magizh kaRpa
     dhAru vena meththi ...... yavirAli

mAmalai yiniRpa neekarudhi yutru
     vAvana azhaiththen ...... manadhAsai

mAsinai aRuththu nyAnamudh aLiththa
     vAra mini niththa ...... maRavEnE

kAmanai eriththa thee nayana netri
     kAdhiya suvarga ...... nadhivENi

kAnilurai putril Adu paNi yitta
     kAdhudaiya appar ...... gurunAthA

sOmano darukkan meenulavu mikka
     sOlai pudai sutru ...... vayalUrA

sUdiya thadakkai vElkodu viduththu
     sUrthalai thuNiththa ...... perumALE.

......... Meaning .........

thAmaraiyin mattu vAsamalar oththa thALiNai: Your two holy feet are like the most fragrant lotus flower;

ninaippil adiyEnai: when I forgot those feet, You said

dhAthavizh kadukkai nAga magizh kaRpa dhAru vena meththi ya: "The scent spreads from petals of kondRai (Indian laburnum), surapunnai and magizha trees, which abound like kaRpaga trees in Heaven, at

virAli mAmalai yiniRpa neekarudhi yutru vAvana azhaiththu: the great VirAli Malai; I shall wait for you there. You contemplate it in your mind and come to me"*.

en manadhAsai mAsinai aRuththu: By inviting me like this, You destroyed the evil desire in my mind and

nyAnamudh aLiththa vAra mini niththa maRavEnE: gave me the Nectar of Knowledge; such love from You can never be forgotten by me.

kAmanai eriththa thee nayana netri: With the fire-eye in forehead that burnt KAman (Love God),

kAdhiya suvarga nadhivENi: with tresses holding the rapidly flowing Akasa Ganga (river),

kAnilurai putril Adu paNi yitta kAdhu: and with an ear wearing a snake that resides in earthen dunes of the forest and dances with a raised hood,

udaiya appar gurunAthA: is Your father (SivA) whose master You are!

sOmano darukkan meenulavu mikka sOlai: The trees are so tall that the sun, the moon and the stars all roam over the groves

pudai sutru vayalUrA: encircling VayalUr**, which is Your abode.

sUdiya thadakkai vElkodu viduththu: You took out that spear from Your broad hand

sUrthalai thuNiththa perumALE.: and threw it to behead SUran, Oh Great One!


* The first four lines denote the real incident that happened to AruNagirinAthar when he was beckoned to come to Him by Murugan Himself.


** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 911 thAmaraiyin mattu - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]