பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1228

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வயலுர்) திருப்புகழ் உரை 669 (தடக்கை சூடிய வேல்கொடு) அகன்ற திருக்கரத்தில் ஏந்திய வேல் கொண்டு - அதைச் செலுத்தி - சூரனது தலையை வெட்டித் துணித்த பெருமாளே! (ஞானமு தளித்த வாரமினி நித்த மறவேனே) 916. லகூர்மியினுடைய உருவத்துக்கு நிகரான அழகைக் கொண்ட மகா மாய இருளான காம இச்சையை ஊட்டும் (மான அன்ன) பொது மாதர்களின் ஆடை மூடியுள்ள மலை (கொங்கை)யிற் சம்பந்தப்பட்டும், இனிய பூமாலை அணிந்துள்ள அடவி - காடு (கூந்தலிற் சம்பந்தப்பட்டும். (ஆவி போய் செருகும்) - உயிரே போய்ச் சிக்கிக் கொள்ளும் (மால்) காம மயக்கம் உள்ள (அனாசார வினையேனை) ஒழுக்கம் இல்லாத தொழிலனாகிய என்னைக் கருவில் (பிறப்பில்) விழாத வண்ணம் (சீரோதி) உன்னுடைய (சீர்) திருப்புகழை நான் ஒதி (அல்லது சீர் - சிறப்பான பொருளை நீ உபதேசித்து) உனக்கு அடிம்ை பூனும் வகை வரும்படி எனது கனவில் (வந்து) ஆண்டருளிய சுவாமியே! மயில்மேல் வீற்றிருக்கும் (நின்) உனது (வாழ்வும்) திருவோலக்க தரிசனத்யுைம் கருணைக்கடல் போல மிக்க ஒளிவீசும் உனது ஒற்றைத் திருமுகத்தையும், வீரம் என்றும் (மாறுதலில்லாத்) நீங்காத உனது திருவடியையும், கடம்பையும், வேல் ஏந்திய திருப்புயத்தையும் (அல்லது வேல் அழகையும்) நான் மறவேன்; எல்லாத் தேவர்களுக்கும் தேவனாய் விளங்குபவனும், ஆதிப்பிரானும், நமசிவாய' என்னும் திருநாமத்தை உடைய முதல்வனும், மலைப் பெண்ணாம் பார்வதி பாகனாகிய முதல்வனுமான சிவபிரானது குமாரனே! நூறு மகங்களை யாகங்களை முடித்த - ஆற்றலு டையவனும், வலிய போரில் ஊடாடுபவனுமான வஜ்ராயுதகரன் (இந்திரனுடைய) பெரிய ஐராவதம் என்னும் யானையின்மீது (சகசமான சகஜமான வழக்கமான == உரித்தான, (சாரீ) உலாவுதல் செய்யும் ஒடுதலைச் (சவாரி) செய்யும் இளைஞனே!