திருப்புகழ் 905 கடல்போற் கணைவிழி  (வயலூர்)
Thiruppugazh 905 kadalpORkaNaivizhi  (vayalUr)
Thiruppugazh - 905 kadalpORkaNaivizhi - vayalUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனனாத் தனதன தனனாத் தனதன
     தனனாத் தனதன ...... தனதான

......... பாடல் .........

கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல்
     கனிபோற் றுகிரிதழ் ...... எழிலாகும்

கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை
     கடிபோற் பணியரை ...... யெனவாகும்

உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ
     ளுடையாற் கெறுவித ...... நடையாலும்

ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும்
     ஒழியாத் துயரது ...... தவிரேனோ

குடலீர்த் தசுரர்க ளுடல்காக் கைகள்நரி
     கொளிவாய்ப் பலஅல ...... கைகள்பேய்கள்

கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள்
     குடியேற் றியகுக ...... வுயர்தாழை

மடல்கீற் றினிலெழு விரைபூப் பொழில்செறி
     வயலூர்ப் பதிதனி ...... லுறைவோனே

மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை
     மகள்மேற் ப்ரியமுள ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கடல் போல் கணை விழி சிலை போல் பிறை நுதல் ... கடல்
போல ஆழமாகவும், அம்பு போல கூர்மையாகவும் உள்ள கண்கள்,
வில்லைப் போலவும் பிறைச் சந்திரன் போலவும் வளைந்த நெற்றி,

கனி போல் துகிர் இதழ் எழிலாகும் கரி போல் கிரி முலை ...
கொவ்வைப் பழம் போலவும், பவளம் போலவும் உள்ள வாயிதழ், அழகு
பொருந்திய யானையைப் போலவும், மலையைப் போலவும் உள்ள
மார்பகங்கள்,

கொடி போல் துடி இடை கடி போல் பணி அரை எனவாகும் ...
கொடி போலவும் உடுக்கை போலவும் உள்ள இடுப்பு, காவலிடம்
போலவும் பாம்பின் படம் போலவும் உள்ள பெண்குறி என்று உவமானம்
சொல்லத்தக்க

உடல் காட்டு இனிமையில் எழில் பாத்திரம் இவள் உடையால்
கெறுவித நடையாலும் ஒரு நாள் பிரிவதும் அரிதாய் சுழல்
படும் ஒழியாத் துயர் அது தவிரேனோ
... தேகத்தைக் காட்டும்
இன்ப நிலைக்கு எடுத்துக் காட்டான கொள்கலம் இவள் (என மயங்கி),
அவளது ஆடையாலும் செருக்குள்ள நடை அழகினாலும் (இவளை
விட்டு) ஒரு நாள் கூட பிரிந்திருப்பது முடியாத காரியம் என்று
சுழற்சியுறும் நீங்காத துன்பத்தைத் தொலைக்க மாட்டேனோ?

குடல் ஈர்த்து அசுரர்கள் உடல் காக்கைகள் நரி கொளிவாய்ப்
பல அலகைகள் பேய்கள் கொலை போர்க் களம் மிசை தினம்
ஏற்று
... அசுரர்களின் உடலினின்றும் குடலை இழுத்து காக்கை, நரி,
கொள்ளி வாய்ப் பிசாசுகள், பேய்கள் யாவும், நிறைந்த கொல்லுதலை
உடைய போர்க் களத்தில் நாள்தோறும் (குடலை) அடைந்து உண்ண,

அமரர்கள் குடி ஏற்றிய குக உயர் தாழை மடல் கீற்றினில் எழு
விரைபூப்பொழில் செறி வயலூர்ப் பதி தனில் உறைவோனே
...
தேவர்களை விண்ணுலகில் குடி ஏற்றிய குகனே, உயர்ந்த தாழையின்
மடல் கீற்றினில் உண்டாகின்ற வாசனை மிக்க (தாழம்) பூக்கள் உள்ள
சோலைகள் நிறைந்த வயலூரில்* வாழ்பவனே,

மலை மேல் குடி உறை கொடு வேட்டுவருடை மகள் மேல்
ப்ரியம் உ(ள்)ள பெருமாளே.
... வள்ளிமலையில் வாழும் கொடிய
வேடர்களுடைய மகள் வள்ளியின் மேல் விருப்பம் மிகக் கொண்டுள்ள
பெருமாளே.


* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான்
சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான்.


வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1211  pg 2.1212 
 WIKI_urai Song number: 909 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 905 - kadalpOR kaNai vizhi (vayalUr)

kadalpOR kaNaivizhi silaipOR piRainuthal
     kanipOt Rukirithazh ...... ezhilAkum

karipOR kirimulai kodipOt Rudiyidai
     kadipOR paNiyarai ...... yenavAkum

udalkAt tinimaiyi lezhilpAth thiramiva
     LudaiyAR keRuvitha ...... nadaiyAlum

orunAt pirivathu marithAyc chuzhalpadum
     ozhiyAth thuyarathu ...... thavirEnO

kudaleerth thasurarka LudalkAk kaikaLnari
     koLivAyp palaala ...... kaikaLpEykaL

kolaipOrk kaLamisai thinamEt RamararkaL
     kudiyEt Riyakuka ...... vuyarthAzhai

madalkeet Rinilezhu viraipUp pozhilseRi
     vayalUrp pathithani ...... luRaivOnE

malaimER kudiyuRai koduvEt tuvarudai
     makaLmER priyamuLa ...... perumALE.

......... Meaning .........

kadal pOl kaNai vizhi silai pOl piRai nuthal: Their eyes are deep as the sea and sharp as the arrow; their bow-like forehead looks like the crescent moon;

kani pOl thukir ithazh ezhilAkum kari pOl kiri mulai: their lips are reddish like the kovvai fruit and coral; their beautiful breasts are like the elephant and the mountain;

kodi pOl thudi idai kadi pOl paNi arai enavAkum: their slender waist is like the creeper and shaped like the hand-drum; their genital is comparable to a secure place and shaped like the serpent's hood;

udal kAttu inimaiyil ezhil pAththiram ivaL udaiyAl keRuvitha nadaiyAlum oru nAL pirivathum arithAy suzhal padum ozhiyAth thuyar athu thavirEnO: the organs of her body are so shapely that she is the receptacle of bliss; in that delusion, and looking at her beautiful attire and arrogant gait, I have concluded that it would be impossible for me to be separated from her even for a day; will I not be able to get over this reeling sensation and be relieved of the unending misery?

kudal eerththu asurarkaL udal kAkkaikaL nari koLivAyp pala alakaikaL pEykaL kolai pOrk kaLam misai thinam EtRu: Pecking and pulling the intestines of the dead demons on the battlefield where a lot of killing took place, crows, foxes, fiends spewing fire from mouth, and devils gathered together and devoured (those intestines);

amararkaL kudi EtRiya kuka uyar thAzhai madal keetRinil ezhu viraipUppozhil seRi vayalUrp pathi thanil uRaivOnE: Oh GuhA, You resettled the DEvAs in their celestial land! You have Your abode in VayalUr* which is full of groves with fragrant flowers, and the aroma given out from the petals of high quality screw-pine (thAzhai) plants.

malai mEl kudi uRai kodu vEttuvarudai makaL mEl priyam u(L)La perumALE.: She lives in VaLLimalai as the daughter of the fierce hunters; You are extremely fond of that VaLLi, Oh Great One!


* VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily.


VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 905 kadalpOR kaNai vizhi - vayalUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]