பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1211

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

652 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை மன்னா குறத்தியின் மன்னா வயற்பதி மன்னா முவர்க்கொரு தம்பிரானேt(5) 909. மாதர்மீதுள்ள மயக்கு அற தனனாத் தனதன தணனாத் தனதன தனணர்த் தனதன தனதான கடல்போற் கணைவிழி சிலைபோற் பிறைநுதல் கனிபோற் றுகிரிதழ் எழிலாகும். கரிபோற் கிரிமுலை கொடிபோற் றுடியிடை கடிபோற் பணியரை யெனவாகும்; உடல்காட் டினிமையி லெழில்பாத் திரமிவ ளுடையாற் கெறுவித் நடையாலும். ஒருநாட் பிரிவது மரிதாய்ச் சுழல்படும் ஒழியாத் துயரது தவிரேனோ, குடலிர்த் தசுரர்க ளுடல்காக் கைகள் நரி கொளிவாய்ப் பலஅல கைகள்பேய்கள். கொலைபோர்க் களமிசை தினமேற் றமரர்கள் குடியேற் றியகுக வுயர்தாழை, மடல்கிற் றினிலெழு விரையூப் பொழில்செறி வயலூர்ப் பதிதனி லுறைவோனே. மலைமேற் குடியுறை கொடுவேட் டுவருடை மகள்மேற் ப்ரியமுள பெருமாளே.(6)

  • மூவர்க்கும் மன்னன் முருகவேள். சிலைமகள் நாயன் கலைமகள் நாயன் திருமகள் நாயன் தொழும் வேலா" - திருப்புகழ் 261.

f இப் பாடலுக்குத் தன்னா தனத்தன தந்ததான என்பதே சந்தம்: தன்னா தனத்தனம் என வரும் அடிகளில் 'ம்' ஓசை அழுந்தல் இல்லை. இதை ஆரிடத்தின் பாற் படுத்துக -பாடல் 169-பக்கம் 390 கீழ்க்குறிப்பு.

  1. மடல்விண்ட முடத்தாழை", "மொட்டலர்த்த தடந்தாழை முரு குயிர்க்கும்" "நறவிரிவு நற்றாழை"

-சம்பந்தர் 2-18-4; 2-41-4; 1-136-6.