திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 906 கமலத்தே குலாவும் (வயலூர்) Thiruppugazh 906 kamalaththEkulAvum (vayalUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன தனனத் தான தான தனதன ...... தனதான ......... பாடல் ......... கமலத் தேகு லாவு மரிவையை நிகர்பொற் கோல மாதர் மருள்தரு கலகக் காம நூலை முழுதுண ...... ரிளைஞோர்கள் கலவிக் காசை கூர வளர்பரி மளகற் பூர தூம கனதன கலகத் தாலும் வானி னசையுமி ...... னிடையாலும் விமலச் சோதி ரூப இமகர வதனத் தாலு நாத முதலிய விரவுற் றாறு கால்கள் சுழலிருள் ...... குழலாலும் வெயிலெப் போதும் வீசு மணிவளை அணிபொற் றோள்க ளாலும் வடுவகிர் விழியிற் பார்வை யாலு மினியிடர் ...... படுவேனோ சமரிற் பூதம் யாளி பரிபிணி கனகத் தேர்கள் யானை யவுணர்கள் தகரக் கூர்கொள் வேலை விடுதிற ...... லுருவோனே சமுகப் பேய்கள் வாழி யெனஎதிர் புகழக் கானி லாடு பரிபுர சரணத் தேக வீர அமைமன ...... மகிழ்வீரா அமரர்க் கீச னான சசிபதி மகள்மெய்த் தோயு நாத குறமகள் அணையச் சூழ நீத கரமிசை ...... யுறுவேலா அருளிற் சீர்பொ யாத கணபதி திருவக் கீசன் வாழும் வயலியின் அழகுக் கோயில் மீதில் மருவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... கமலத்தே குலாவும் அரிவையை நிகர் பொன் கோல மாதர் மருள் தரு ... தாமரையில் விளங்கும் லக்ஷ்மிக்கு ஒப்பான அழகிய அலங்காரம் உள்ள விலைமாதர்கள் மீது மோக மயக்கத்தைத் தருகின்றதும், கலகக் காம நூலை முழுது உணர் இளைஞோர்கள் கலவிக்கு ஆசை கூர ... கலக்கம் தரும் காம சாஸ்திரத்தை முற்றும் உணர்ந்த இளைஞர்களின் புணர்ச்சி இன்பத்துக்கு ஆசை மிக்கெழும்படியாகவும், வளர் பரிமள கற்பூர தூமம் கனதன கலகத்தாலும் வானின் அசையும் மின் இடையாலும் ... நிரம்பிய நறு மணம் உள்ள பச்சைக் கற்பூரம், அகில் புகை போன்றவைகளைக் கொண்ட மார்பகங்கள் எழுப்பும் மனச் சலனத்தாலும், ஆகாயத்தில் அசையும் மின்னல் போன்ற இடுப்பாலும், விமலச் சோதி ரூப இமகர வதனத்தாலும் ... களங்கம் இல்லாத ஒளிமயமான பனிக் கிரணம் கொண்ட சந்திர பிம்பத்தை ஒத்த முகத்தாலும், நாத முதலிய விரவுற்று ஆறு கால்கள் சுழல் இருள் குழலாலும் ... பாட்டு முதலியவை கலந்து எழச் செய்யும் வண்டுகள் சூழ்ந்துச் சுழலும் இருண்ட கரிய கூந்தலாலும், வெயில் எப்போதும் வீசு மணி வளை அணி பொன் தோள்களாலும் ... எப்போதும் ஒளி வீசுகின்ற ரத்தின மாலைகளை அணியும் அழகிய தோள்களாலும், வடு வகிர் விழியில் பார்வையாலும் இனி இடர் படுவேனோ ... மாவடுவின் கீற்றைப் போன்ற கண்களின் பார்வையாலும், இனிமேல் நான் துன்பம் அடைவேனோ? சமரில் பூதம் யாளி பரி பிணி கனகத் தேர்கள் யானை அவுணர்கள் ... போரில் பூதம், யாளி, குதிரை இவைகளைப் பிணித்துக் கட்டிய பொன் மயமான தேர்கள், யானைகள், அசுரர்கள் ஆகியவை தகரக் கூர் கொள் வேலை விடு திறல் உருவோனே ... பொடிபட்டு அழிய, கூர்மையான வேலாயுதத்தைச் செலுத்திய வலிமையான உருவத்தனே, சமுகப் பேய்கள் வாழி என எதிர் புகழக் கானில் ஆடு பரிபுர சரணத்து ஏக வீர அ(ம்) மை மன மகிழ் வீரா ... கூட்டமான பேய்கள் வாழி என்று எதிரே நின்று புகழ, சுடு காட்டில் (சிவனுடன்) நடனம் செய்யும் சிலம்பணிந்த திருவடிகளை உடைய, தன்னிகரில்லாத வீரம் வாய்ந்த தாயாகிய பார்வதி மனம் மகிழும் வீரனே, அமரர்க்கு ஈசனான சசி பதி மகள் மெய்த் தோயு நாத ... தேவர்களுக்குத் தலைவனான, இந்திராணியின் கணவனாகிய இந்திரனின் மகளான தேவயானையின் உடலைத் தழுவும் நாதனே, குற மகள் அணையச் சூழ நீத கர(ம்) மிசை உறு வேலா ... குறப் பெண்ணாகிய வள்ளி உன்னை அணைவதற்கு வேண்டிய சூழ்ச்சிகளைச் செய்த நீதிமானே, திருக்கையில் கொண்ட வேலாயுதனே. அருளில் சீர் பொ(ய்)யாத கணபதி திரு அக்கீசன் வாழும் வயலியின் ... திருவருள் பாலிப்பதற்குப் புகழ் பெற்ற, பொய்யுறாத கணபதியும்*, அழகிய அக்னீசுரர் என்னும் பெயருடைய சிவபெருமானும் வீற்றிருக்கும் வயலூரின்** அழகுக் கோயில் மீதில் மருவிய பெருமாளே. ... அழகிய கோயிலில் அமர்ந்திருக்கும் பெருமாளே. |
* இவரே "செய்ப்பதியும் வைத்துயர் திருப்புகழ் விருப்பமொடு செப்பு" என்று அருணகிரிநாதருக்கு அருளினார். அந்தப் பாடல்தான் 'பக்கரை விசித்ரமணி' ஆகும். |
** வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான். |
வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1213 pg 2.1214 pg 2.1215 pg 2.1216 WIKI_urai Song number: 910 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 906 - kamalaththE kulAvum (vayalUr) kamalath thEku lAvu marivaiyai nikarpoR kOla mAthar maruLtharu kalakak kAma nUlai muzhuthuNa ...... riLainjOrkaL kalavik kAsai kUra vaLarpari maLakaR pUra thUma kanathana kalakath thAlum vAni nasaiyumi ...... nidaiyAlum vimalac chOthi rUpa imakara vathanath thAlu nAtha muthaliya viravut RARu kAlkaL suzhaliruL ...... kuzhalAlum veyilep pOthum veesu maNivaLai aNipot ROLka LAlum vaduvakir vizhiyiR pArvai yAlu miniyidar ...... paduvEnO samariR pUtham yALi paripiNi kanakath thErkaL yAnai yavuNarkaL thakarak kUrkoL vElai viduthiRa ...... luruvOnE samukap pEykaL vAzhi yenaethir pukazhak kAni lAdu paripura saraNath thEka veera amaimana ...... makizhveerA amarark keesa nAna sasipathi makaLmeyth thOyu nAtha kuRamakaL aNaiyac sUzha neetha karamisai ...... yuRuvElA aruLiR cheerpo yAtha gaNapathi thiruvak keesan vAzhum vayaliyin azhakuk kOyil meethil maruviya ...... perumALE. ......... Meaning ......... kamalaththE kulAvum arivaiyai nikar pon kOla mAthar maruL tharu: These whores wear make-up so pretty that they look like Goddess Lakshmi on the lotus; because of the delusory passion that develops for them, kalakak kAma nUlai muzhuthu uNar iLainjOrkaL kalavikku Asai kUra: because they arouse enormous desire for carnal pleasure in the hearts of young men well-versed in traumatic and erotic literature, vaLar parimaLa kaRpUra thUmam kanathana kalakaththAlum vAnin asaiyum min idaiyAlum: because of the disturbing effect of their bosom, overly fragrant with camphor and incense, because of their slender waist that flashes like the swift lightning in the sky vimalac chOthi rUpa imakara vathanaththAlum: because of their face that looks like the moon with an unblemished light and cool rays, nAtha muthaliya viravutRu ARu kAlkaL suzhal iruL kuzhalAlum: because of their curly and black hair around which beetles swarm, humming music, veyil eppOthum veesu maNi vaLai aNi pon thOLkaLAlum: because of their lovely shoulders that radiate light at all times from the chains made of precious gems, vadu vakir vizhiyil pArvaiyAlum ini idar paduvEnO: and because of the stare of their eyes that look like the wrinkle on the baby-mango, will I continue to suffer misery? samaril pUtham yALi pari piNi kanakath thErkaL yAnai avuNarkaL: In the battle, golden chariots tied to devils, lion -elephants and horses, along with elephants and demons thakarak kUr koL vElai vidu thiRal uruvOnE: were all shattered to pieces when You wielded the sharp spear, Oh Mighty One, with a valorous form! samukap pEykaL vAzhi ena ethir pukazhak kAnil Adu paripura saraNaththu Eka veera a(m)mai mana makizh veerA: Groups of devils stood before Her hailing the dance on the cremation ground She performed along with Lord SivA; She has hallowed feet, adorned with anklets; She is the matchless and brave Mother; and You are Her son elating that DEvi PArvathi, Oh valorous One! amararkku eesanAna sasi pathi makaL meyth thOyu nAtha: As her consort, You embrace DEvayAnai, the daughter of IndrA who is the husband Of Sasi DEvi and is also the ruler of the celestials! kuRa makaL aNaiyac sUzha neetha kara(m) misai uRu vElA: To make VaLLi, the damsel of the KuRavAs, hug You, numerous tricks were played on her by You, Oh Upright One! You hold the spear in Your hallowed hand, Oh Lord! aruLil seer po(y)yAtha gaNapathi thiru akkeesan vAzhum vayaliyin: In this place VayalUr** are seated the never-lying Lord GaNapathi*, famous for bestowing His grace upon the devotees, and the beautiful Lord Akkeesar (SivA); azhakuk kOyil meethil maruviya perumALE.: You also have Your abode in the beautiful temple here, Oh Great One! |
* The same GaNapathi directed AruNagirinAthar to happily compose a Thiruppugazh song on VayalUr-Seippathi; that is the song "pakkarai vichithramaNi". |
** VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily. |
VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |