திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 902 இகல்கடின முகபடவி (வயலூர்) Thiruppugazh 902 igalkadinamugapadavi (vayalUr) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன தனதனன தனதனன தத்தத்த தத்ததன தத்தத்த தத்ததன ...... தந்ததான ......... பாடல் ......... இகல்கடின முகபடவி சித்ரத்து திக்கைமத மத்தக்க ளிற்றையெதிர் புளகதன மிளகஇனி தெட்டிக்க ழுத்தொடுகை கட்டிப்பி ணித்திறுகி யிதழ்பொதியி னமுதுமுறை மெத்தப்பு சித்துருகி முத்தத்தை யிட்டுநக ...... தந்தமான இடுகுறியும் வரையையுற நெற்றித்த லத்திடையில் எற்றிக்க லக்கமுற இடைதுவள வுடைகழல இட்டத்த ரைப்பையது தொட்டுத்தி ரித்துமிக இரணமிடு முரணர்விழி யொக்கக்க றுத்தவிழி செக்கச்சி வக்கவளை ...... செங்கைசோர அகருவிடு ம்ருகமதம ணத்துக்க னத்தபல கொத்துக்கு ழற்குலைய மயில்புறவு குயில்ஞிமிறு குக்கிற்கு ரற்பகர நெக்குக்க ருத்தழிய அமளிபெரி தமளிபட வக்கிட்டு மெய்க்கரண வர்க்கத்தி னிற்புணரு ...... மின்பவேலை அலையின்விழி மணியின்வலை யிட்டுப்பொ ருட்கவர கட்டுப்பொ றிச்சியர்கள் மதனகலை விதனமறு வித்துத்தி ருப்புகழை யுற்றுத்து திக்கும்வகை அபரிமித சிவஅறிவு சிக்குற்று ணர்ச்சியினில் ரக்ஷித்த ளித்தருள்வ ...... தெந்தநாளோ திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகணசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகண திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுட தெனதிமிர்த தவில்மிருக டக்கைத்தி ரட்சலிகை பக்கக்க ணப்பறைத ...... வண்டைபேரி வகைவகையின் மிகவதிர வுக்ரத்த ரக்கர்படை பக்கத்தி னிற்சரிய எழுதுதுகில் முழுதுலவி பட்டப்ப கற்பருதி விட்டத்த மித்ததென வருகுறளி பெருகுகுரு திக்குட்கு ளித்துழுது தொக்குக்கு னிப்புவிட ...... வென்றவேலா வயலிநகர் பயில்குமர பத்தர்க்க நுக்ரகவி சித்ரப்ர சித்தமுறு அரிமருக அறுமுகவ முக்கட்க ணத்தர்துதி தத்வத்தி றச்சிகர வடகுவடில் நடனமிடு மப்பர்க்கு முத்திநெறி தப்பற்று ரைக்கவல ...... தம்பிரானே. ......... சொல் விளக்கம் ......... இகல் கடின முகபட விசித்ரத் துதிக்கை மத மத்தக் களிற்றை எதிர் புளக தனம் இளக ... வலிமையும், கடுமையும், முகத்துக்கு இடும் அலங்காரத் துணியின் பேரழகும், துதிக்கையும், இவைகளை எல்லாம் கொண்டு மத நீர், மதம் பொழியும் யானையை எதிர்க்கும் திறத்ததாய் மயிர் சிலிர்த்த மார்பகங்கள் நெகிழ, இனிது எட்டிக் கழுத்தொடு கை கட்டிப் பிணித்து இறுகி இதழ் பொதியின் அமுது முறை மெத்தப் புசித்து உருகி ... ஆசையுடன் தாவி கழுத்தைக் கைகளால் கட்டி அணைத்து அழுத்தி, வாயிதழாகிய நிறைவினின்றும் கிடைக்கும் அமுதனைய வாயூறலை காம சாஸ்திரத்தின்படி நிரம்ப அருந்தி, மனம் உருகி, முத்தத்தை இட்டு நக தந்தமான இடு குறியும் வரையை உற நெற்றித் தலத்து இடையில் எற்றிக் கலக்கம் உற இடை துவள உடை கழல ... முத்தமிட்டு, நகத்தைக் கொண்டும் பற்களைக் கொண்டும் இடப்பட்ட அடையாளங்கள் ரேகைகள் போலத் தெரிய, நெற்றியாகிய இடத்தில் முகத்தோடு முகம் வைத்துத் தாக்க, (வந்தவர் உள்ளம்) கலக்கம் கொள்ளும்படி இடை நெகிழவும், ஆடை கழன்று போகவும், இட்டத்து அரைப் பை அது தொட்டுத் திரித்து மிக இரணம் இடு(ம்) முரணர் விழி ஒக்கக் கறுத்த விழி செக்கச் சிவக்க வளை செம் கை சோர ... ஆசையுடன் அரையில் உள்ள பாம்பு போன்ற பெண்குறியை தொட்டு மிகவும் அலைத்து, போர் புரியும் பகைவர்களின் கண்களைப் போல இயற்கையாகக் கறுத்து இருக்கும் கண்கள் மிகவும் சிவந்த நிறத்தை அடையவும், வளைகள் அழகிய கைகளில் நெகிழவும், அகரு விடு(ம்) ம்ருகமத மணத்துக் கனத்த பல கொத்துக் குழல் குலைய மயில் புறவு குயில் ஞிமிறு குக்கில் குரல் பகர நெக்குக் கருத்து அழிய ... அகிலும் அதனுடன் சேரும் கஸ்தூரியும் நறு மணம் வீச, அடர்த்தியுள்ள பூங்கொத்துகள் கொண்ட கூந்தல் கலைந்து விழ, மயில், புறா, குயில், வண்டு, செம்போத்து ஆகிய பறவைகளின் குரலைக் காட்டி, உள்ளம் நெகிழ்ந்து உணர்ச்சி அழிய, அமளி பெரிது அமளி பட வக்கிட்டு மெய்க் கரண வர்க்கத்தினில் புணரும் இன்ப வேலை அலையின் விழி மணியின் வலை இட்டுப் பொருள் கவர கட்டுப் பொறிச்சியர்கள் மதன கலை விதனம் அறுவித்து ... படுக்கையில் நிரம்ப ஆரவாரம் எழ, வதக்கப்படுவது போல சூடேற உடல் சம்பந்தப்பட்டு செய்யப்படும் கலவி வகைகளில் புணர்ச்சி இன்பத்தை அனுபவிக்கும் அந்தச் சமயத்தில், கடல் போல பெரிய கண்ணின் மணியாகிய வலையை வீசி எனது கைப் பொருளைக் கொள்ளை கொள்ள பாசம் விளைக்கும் தந்திரக்காரர்களான விலைமாதர்களின் மன்மத சாஸ்திர அறிவால் வரும் மனத்துயரத்தை அழித்துத் தொலைத்து, திருப்புகழை உற்றுத் துதிக்கும் வகை அபரிமித சிவ அறிவு சிக்குற்று உணர்ச்சியினில் ரக்ஷித்து அளித்து அருள்வது எந்த நாளோ ... உனது திருப்புகழில் நாட்டம் வைத்து உன்னை வணங்கும்படி எல்லை இல்லாத சிவ ஞானம் என் அறிவில் பெறப்படும்படியாக நீ என்னைக் காப்பாற்றி காத்தளித்து என் மயக்கத்தை நீக்கி அருளுவது எந்த நாளோ? திகுடதிகு தகுடதகு திக்குத்தி குத்திகுட தத்தித்த ரித்தகுட செகணசெக சகணசக செக்கச் செகச்செகண சத்தச்ச கச்சகண திகுதிகுர்தி தகுதகுர்த திக்குத்தி குத்திகுர்தி தக்குத்த குத்தகுர்த ...... திங்குதீதோ திரிரிதிரி தரிரிதரி தித்தித்தி ரித்திரிரி தத்தித்த ரித்தரிரி டிகுடடகு டகுடடிகு டிட்டிட்டி குட்டிகுடி டட்டட்ட குட்டகுட என ... மேற்கூறிய தாள ஒலிகளை திமிர்த தவில் மிருக (இ)டக்கைத் திரள் சலிகை பக்கக் கணப் பறை தவண்டை பேரி வகை வகையின் மிக அதிர ... எழுப்பும் மேள வகைகள், (அரச) வேட்டைக்கு உரித்தான இடக்கை, கூட்டமான பெரும் பறை வகைகள், பக்கத்தில் வரும் தோற் கருவி வகைகள், பேருடுக்கை, முரசு முதலிய பறைகள் மிகுந்த ஒலி எழுப்ப, உக்ரத்து அரக்கர் படை பக்கத்தினில் சரிய எழுது துகில் முழுது உலவி பட்டப் பகல் பருதி விட்டு அத்தமித்தது என வரு குறளி பெருகு குருதிக்குள் குளித்து உழுது தொக்குக் குனிப்பு விட வென்ற வேலா ... கோபமுடன் அசுரர்களின் சேனைகள் பக்கங்களிலே சரிந்து விழ, சித்திரம் வரைந்த விருதுக் கொடி, போர்க் களம் முழுதும் உலவி, பட்டப் பகலில் சூரியனை சக்ராயுதத்தை விடுத்து அஸ்தமிக்க வைத்தது போல இருளாக்க, வந்துள்ள பிசாசுகள் பெருகி வரும் ரத்தத்தில் குளித்துத் திளைத்து விளையாடி, உடல் வளைவை விட்டு நிமிர்ந்து எழும்படி வெற்றி பெற்ற வேலனே, வயலி நகர் பயில் குமர பத்தர்க்கு அநுக்ரக விசித்ர ப்ரசித்தம் உறு அரி மருக அறு முகவ முக்கண் கணத்தர் துதி தத்வத் திற ... வயலூரில்* எப்போதும் மகிழ்ந்து வீற்றிருக்கும் குமரனே, அடியார்களுக்கு அருள் செய்பவனே, விநோதமான புகழைக் கொண்ட திருமாலின் மருகனே, ஆறு முகங்களைக் கொண்டவனே, சிவ சாரூபக் கூட்டத்தினர் வணங்கும் அறிவுத் திறம் கொண்டவனே, சிகர வட குவடில் நடனம் இடும் அப்பர்க்கு முத்தி நெறி தப்பு அற்று உரைக்க வல தம்பிரானே. ... சிகரங்களைக் கொண்ட, வடக்கே உள்ள, கயிலை மலையில் நடனம் செய்யும் தந்தையாகிய சிவபெருமானை அடைவதற்கு வேண்டிய முக்தி வழியைச் சம்பந்தராகத் தோன்றி தப்பு இல்லாத வகையில் சொல்ல வல்ல தம்பிரானே. |
* வயலூர் சோழ நாட்டின் ராஜகெம்பீரப் பகுதியின் தலைநகர். இங்குதான் சுவாமிகளுக்கு தினம் ஒரு திருப்புகழ் பாடும் வரத்தை முருகன் தந்தான். |
வயலூர் திருச்சிராப்பள்ளிக்கு 6 மைல் தொலைவில் தென்மேற்கே உள்ளது. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.1199 pg 2.1200 pg 2.1201 pg 2.1202 pg 2.1203 pg 2.1204 pg 2.1205 WIKI_urai Song number: 906 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 902 - igalkadina mugapadavi (vayalUr) ikalkadina mukapadavi chithraththu thikkaimatha maththakka LitRaiyethir puLakathana miLakaini thettikka zhuththodukai kattippi NiththiRuki yithazhpothiyi namuthumuRai meththappu siththuruki muththaththai yittunaka ...... thanthamAna idukuRiyum varaiyaiyuRa netRiththa laththidaiyil etRikka lakkamuRa idaithuvaLa vudaikazhala ittaththa raippaiyathu thottuththi riththumika iraNamidu muraNarvizhi yokkakka Ruththavizhi chekkacchi vakkavaLai ...... sengaisOra akaruvidu mrukamathama Naththukka naththapala koththukku zhaRkulaiya mayilpuRavu kuyilnjimiRu kukkiRku raRpakara nekkukka ruththazhiya amaLiperi thamaLipada vakkittu meykkaraNa varkkaththi niRpuNaru ...... minpavElai alaiyinvizhi maNiyinvalai yittuppo rutkavara kattuppo RicchiyarkaL mathanakalai vithanamaRu viththuththi ruppukazhai yutRuththu thikkumvakai aparimitha sivaaRivu sikkutRu Narcchiyinil rakshiththa LiththaruLva ...... thenthanALO thikudathiku thakudathaku thikkuththi kuththikuda thaththiththa riththakuda chekaNacheka chakaNachaka chekkac chekacchekaNa saththaccha kacchakaNa thikuthikurthi thakuthakurtha thikkuththi kuththikurthi thakkuththa kuththakurtha ...... thingutheethO thiririthiri tharirithari thiththiththi riththiriri thaththiththa riththariri dikudadaku dakudadiku dittitti kuttikudi dattatta kuttakuda thenathimirtha thavilmiruka dakkaiththi ratchalikai pakkakka NappaRaitha ...... vaNdaipEri vakaivakaiyin mikavathira vukraththa rakkarpadai pakkaththi niRchariya ezhuthuthukil muzhuthulavi pattappa kaRparuthi vittaththa miththathena varukuRaLi perukukuru thikkutku Liththuzhuthu thokkukku nippuvida ...... venRavElA vayalinakar payilkumara paththarkka nukrakavi chithrapra siththamuRu arimaruka aRumukava mukkatka Naththarthuthi thathvaththi Racchikara vadakuvadil nadanamidu mapparkku muththineRi thappatRu raikkavala ...... thambirAnE. ......... Meaning ......... ikal kadina mukapada vichithrath thuthikkai matha maththak kaLitRai ethir puLaka thanam iLaka: Imagine an elephant that is strong, ferocious and wearing a decorative cloth covering its face, endowed with a beautiful trunk, with bile and frenzy oozing out; the exhilarated breasts of the whores, that are capable of confronting and beating that elephant, begin to thaw; inithu ettik kazhuththodu kai kattip piNiththu iRuki ithazh pothiyin amuthu muRai meththap pusiththu uruki: jumping with desire, they put their arms around the neck (of their suitor) clasping it; they imbibe the nectar-like saliva profusely from the fulsome mouth as defined in the erotic text book, melting their heart; muththaththai ittu naka thanthamAna idu kuRiyum varaiyai uRa netRith thalaththu idaiyil etRik kalakkam uRa idai thuvaLa udai kazhala: kissing all over, making marks with their nails and teeth which look like lines on the palm, they press their forehead with the suitor's forehead fusing both faces together; churning the heart (of the suitor), their waist caves in and their attire is deliberately loosened; ittaththu araip pai athu thottuth thiriththu mika iraNam idu(m) muraNar vizhi okkak kaRuththa vizhi chekkac chivakka vaLai sem kai sOra: passionately, the (suitor's) hand fondles and vigorously shakes their genital that looks like the hood of the serpent in the pelvic region; their natural dark eyes that normally look like the eyes of confronting enemies waging a war, turn very reddish while the bangles on their beautiful arms come off, loosened; akaru vidu(m) mrukamatha maNaththuk kanaththa pala koththuk kuzhal kulaiya mayil puRavu kuyil njimiRu kukkil kural pakara nekkuk karuththu azhiya: their hair, adorned with dense bunches of flowers, augmented with the fragrance of incense and musk, becomes dishevelled and slides down; the cooing of birds like peacock, pigeon, cuckoo, beetle and crow-pheasant is heard from their throat; their heart melts while their sense slips; amaLi perithu amaLi pada vakkittu meyk karaNa varkkaththinil puNarum inpa vElai alaiyin vizhi maNiyin valai ittup poruL kavara kattup poRicchiyarkaL mathana kalai vithanam aRuviththu: a lot of commotion takes place on the bed; the body is heated up as though roasted due to the sexual intercourse; at the time of enjoying the coital bliss, they roll the pupils in their eyes wide like the sea and spread their net in order to grab all my belongings by showering affection; these tricky whores are well-versed in the erotic text of Manmathan (God of Love) causing me mental agony; to get rid of the anguish, thiruppukazhai utRuth thuthikkum vakai aparimitha siva aRivu sikkutRu uNarcchiyinil rakshiththu aLiththu aruLvathu entha nALO: kindly let me contemplate on Your glory and worship Your hallowed feet so that infinite knowledge of SivA could dawn on my intellect; for that You have to grant me protection by saving me and removing my delusion; when will I be blessed like this, Oh Lord? thikudathiku thakudathaku thikkuththi kuththikuda thaththiththa riththakuda chekaNacheka chakaNachaka chekkac chekacchekaNa saththaccha kacchakaNa thikuthikurthi thakuthakurtha thikkuththi kuththikurthi thakkuththa kuththakurtha ...... thingutheethO thiririthiri tharirithari thiththiththi riththiriri thaththiththa riththariri dikudadaku dakudadiku dittitti kuttikudi dattatta kuttakuda ena: Making the foregoing sounds, thimirtha thavil miruka (i)dakkaith thiraL salikai pakkak kaNap paRai thavaNdai pEri vakai vakaiyin mika athira: many percussion instruments, the drums that are beaten by the left hand (idakkai) that are used for (royal) hunting, a multitude of large drums, accompanying instruments made from leather, the giant hand-drum and all kinds of drums were thumped raising a loud noise; ukraththu arakkar padai pakkaththinil sariya ezhuthu thukil muzhuthu ulavi pattap pakal paruthi vittu aththamiththathu ena varu kuRaLi peruku kuruthikkuL kuLiththu uzhuthu thokkuk kunippu vida venRa vElA: the angry armies of the demons fell in the sides, slipping away; the flag-staff, carrying artistic paintings, moved back and forth throughout the battlefield and created so much darkness in the noon as though the sun had already set being obscured by the disc; the oncoming devils bathed in the gushing flood of blood and made merry; as if to straighten the bent back of the devils, You wielded the spear and became triumphant, Oh Lord! vayali nakar payil kumara paththarkku anukraka vichithra prasiththam uRu ari maruka aRu mukava mukkaN kaNaththar thuthi thathvath thiRa: You are always seated with relish in VayalUr*, Oh KumarA! You bless Your devotees graciously! You are the nephew of the wonderful and famous Lord VishNu! You have six hallowed faces! The multitude of Saivaite SarUpa devotees (those practising inward worship only of a formless God by control of senses) worship You of immense knowledge, Oh Lord! sikara vada kuvadil nadanam idum apparkku muththi neRi thappu atRu uraikka vala thambirAnE.: He dances in the Mount KailAsh in the North, that has several peaks; He is Your Father, Lord SivA; to attain His holy feet, You came as Sambandhar and preached many methods of seeking liberation in a flawless way, Oh Great One! |
* VayalUr was the capital of Rajagembeera Nadu, a section of the ChOzha Nadu, where AruNagirinAthar got the boon of singing a Thiruppugazh daily. |
VayalUr is about 6 miles southwest of ThiruchirApaLLi. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |