திருப்புகழ் 879 அலங்கார முடிக்கிரண  (திருக்குரங்காடுதுறை)
Thiruppugazh 879 alangkAramudikkiraNa  (thirukkurangkadudhuRai)
Thiruppugazh - 879 alangkAramudikkiraNa - thirukkurangkadudhuRaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனந்தான தனத்தனனத் தனந்தான தனத்தனனத்
     தனந்தான தனத்தனனத் ...... தனதான

......... பாடல் .........

அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்
     கசைந்தாடு குழைக்கவசத் ...... திரடோளும்

அலந்தாம மணித்திரளை புரண்டாட நிரைத்தகரத்
     தணிந்தாழி வனைக்கடகச் ...... சுடர்வேலுஞ்

சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கோசை மிகுத்ததிரச்
     சிவந்தேறி மணத்தமலர்ப் ...... புனைபாதந்

திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனனத்
     தினந்தோறு நடிப்பதுமற் ...... புகல்வேனோ

இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்
     டிளந்தாது மலர்த்திருவைச் ...... சிறைமீளும்

இளங்காள முகிற் கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்
     திருங்கான நடக்குமவற் ...... கினியோனே

குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்கமுனைக்
     கொடுந்தாரை வெயிற்கயிலைத் ...... தொடும்வீரா

கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை புணர்க்குமிசைக்
     குரங்காடு துறைக்குமரப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அலங்கார முடிக்கிரணத் திரண்டாறு முகத்தழகிற்கு
அசைந்தாடு குழை
... அலங்காரமான கிரீடமும், ஒளி நிறைந்த ஆறு
திருமுகங்களில் அழகுடன் அசைந்தாடும் குண்டலங்களும்,

கவசத் திரள் தோளும் அலந்தாம ... கவசமும், திரண்ட புஜங்களின்
மீது போதுமானவரை சூடிய பூமாலைகள்,

மணித்திரளை புரண்டாட ... ரத்தின மாலைகள் வரிசையாகப்
புரண்டு ஆடவும்,

நிரைத்த கரத்து அணிந்த ஆழி ... திருக்கரங்களில் அணிந்துள்ள
மோதிரங்களும்,

வனைக்கடகச் சுடர்வேலும் ... புனைந்துள்ள வீரக் கடகமும், ஒளி
வீசும் வேலும்,

சிலம்போடு மணிச்சுருதிச் சலங்கு ... சிலம்பும், அழகிய வேத
ஒலியைச் செய்யும் சலங்கையும்,

ஓசை மிகுத்து அதிர ... இவைகள் ஓசை மிகுந்த ஒலி செய்ய,

சிவந்தேறி மணத்தமலர்ப் புனைபாதம் ... செந்நிறமாய், மணம்வீசும்
மலர்களைப் புனைந்துள்ள திருவடிகள்

திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன
     திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன
...
(இந்த தாளத்துக்கு)

தினந்தோறு நடிப்பதுமற் புகல்வேனோ ... நாள்தோறும் நீ நடனம்
செய்யும் அழகையும் - இவை எல்லாவற்றையும் நன்றாகச் சொல்லித்
துதிக்க மாட்டேனோ?

இலங்கேசர் வனத்துள்வனக் குரங்கேவி யழற்புகையிட்டு ...
இலங்கைக்கு அரசனான ராவணனின் அசோக வனத்தில் அழகான
குரங்காம் அனுமனை அனுப்பி இலங்கையை எரியூட்டி புகையை
மூட்டிவிட்டவரும்,

இளந்தாது மலர்த்திருவைச் சிறைமீளும் ... மென்மையான
மகரந்தம் கொண்ட செந்தாமரை மீது அமரும் லக்ஷ்மியாம் சீதையைச்
சிறையிலிருந்து மீட்டியவரும்,

இளங்காள முகில் ... இளமை வாய்ந்தவரும், கருமுகிலைப் போன்ற
நிறம் கொண்டவரும்,

கடுமைச் சரங்கோடு கரத்திலெடுத்து ... கொடிய அம்பையும்
வளைந்த வில்லையும் கையில் ஏந்தியவரும்,

இருங்கான நடக்கும் அவற்கு இனியோனே ... தந்தை
ஆணையால் இருண்ட கானகத்தில் நடந்து வனவாசம் செய்தவருமான
ஸ்ரீராமனுக்கு (திருமாலுக்கு) இனியவனே,

குலங்கோடு படைத்தசுரப் பெருஞ்சேனை யழிக்க ... குலபலமும்,
கொடிய படைபலமும் படைத்த அசுரர்களின் பெரிய சேனையை
அழிப்பதற்காக

முனைக் கொடுந்தாரை வெயிற்கு அயிலைத் தொடும்வீரா ...
போர்க்களத்தில், கொடியதும், கூர்மையானதும், ஒளிமயமானதுமான
வேலாயுதத்தைச் செலுத்திய வீரனே,

கொழுங்காவின் மலர்ப்பொழிலிற் கரும்பாலை
புணர்க்குமிசை
... செழித்த சோலைகளிலும், மலர்ப் பூங்காக்களிலும்
கரும்பு ஆலைகள் இயங்குவதால் ஏற்படும் ஓசை கேட்கும்

குரங்காடு துறைக்குமரப் பெருமாளே. ... திருக்குரங்காடுதுறைத்
தலத்தில்* வீற்றிருக்கும் குமரப் பெருமாளே.


* வட குரங்காடுதுறை கும்பகோணத்தை அடுத்த ஐயம்பேட்டைக்கு 4 மைலில்
உள்ளது. தென் குரங்காடுதுறை இப்போது ஆடுதுறை எனப்படும் ஊர்.
திருவிடைமருதூருக்கு கிழக்கே 2 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1141  pg 2.1142  pg 2.1143  pg 2.1144  pg 2.1145  pg 2.1146 
 WIKI_urai Song number: 883 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Swamy Gughanandha Thirupugazh Sabha, Salem
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை &
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)

Sri Maha Periyava Thirupugazh Sabha &
Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)


Smt Seethalakshmi Radhakrishnan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Thirupugazh Semmani Sri K.S. Ramadoss
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை
(சேலம்)
இப்பாடலின் பொருள்

Swamy Gughanandha Thirupugazh Sabha
(Salem)
meanings in Tamil


Thirupugazh Semmani K.S.Krishna Doss
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 879 - alangkAra mudikkiraNa (thirukkurangkAduthuRai)

alankAra mudik kiraNa thiraNdARu mugath azhagil
     asaindhAdu kuzhaik kavachath ...... thiraL thOLum

alandhAma maNith thiraLaip puraNdAda niraith thakarath
     thaNin dhAzhi vanaik kataga ...... sudar vElum

silambOdu maNich churudhi salangOsai miguth adhira
     sivandhERi maNaththa malarp ...... punai pAdhan

dhimin thOdhi dhimith dhimidhi thanan thAna thanath anana
     dhinanthORu nadip padhumaR ...... pugalvEnO

ilankEsar vanaththuL vana kurangEvi azhal pugaiyit
     tiLandhAthu malarth thiruvai ...... siRaimeeLum

iLang kALa mugil kadumai sarangOdu karaththil eduth
     thirungkAna nadakkum avaRk ...... kiniyOnE

kulang kOdu padaith asura perun sEnai azhikka munai
     kodun thArai veyiR kayilaith ...... thodum veerA

kozhung kAvin malarp pozhilil karum bAlai puNarkkum isai
     kurangAdu thuRaik kumarap ...... perumALE.

......... Meaning .........

alankAra mudi: Your ornamental crowns,

kiraNa thiraNdARu mugath azhagil asaindhAdu kuzhai: Your six radiant hallowed faces on which the hanging ear studs swing and sway beautifully,

kavachath thiraL thOLum alandhAma: the shield covering Your chest, Your broad shoulders wearing plenty of garlands,

maNith thiraLaip puraNdAda: the chains made of precious gems and stones swinging together,

niraiththakarath thaNin dhAzhi: the beautiful rings worn on Your holy hands,

vanaik kataga sudar vElum: the victory anklets around Your ankles, Your sparkling Spear,

silambOdu maNich churudhi salangOsai miguth adhira: the cilambu (another type of anklet) with the beads inside sounding like the chanting of the VEdAs,

sivandhERi maNaththa malarp punai pAdhan: and Your lotus feet, reddened by the red fragrant flowers,

dhimin thOdhi dhimith dhimidhi thanan thAna thanath anana: dancing to the meter of "dhimin thOdhi dhimith dhimidhi thanan thAna thanath anana" - (all these come to my mind);

dhinanthORu nadip padhumaR pugalvEnO: so why shall I not sing about Your dancing glory everyday?

ilankEsar vanaththuL vana kurangEvi azhal pugaiyittu: He sent the cute monkey, Hanuman, to AshOkavanam in LankA which went up in flames and smoke;

iLandhAthu malarth thiruvai siRaimeeLum: Lakshmi, sitting on the lotus of soft and fresh petals, came as SitA who was rescued by Him from captivity;

iLang kALa mugil: He was youthful; He had the complexion of black cloud;

kadumai sarangOdu karaththil eduththu: He held in His hands the curved bow (KOthaNdam) and several powerful arrows;

irungkAna nadakkum avaRk kiniyOnE: and He walked through the dark forests (obeying His father's command). You are that Rama's (Vishnu's) favourite nephew!

kulang kOdu padaith asura perun sEnai azhikka: To destroy the asuras backed by their tribes and fierce armies

munai kodun thArai veyiR kayilaith thodum veerA: in the battlefield, You sent Your sharp, powerful and sparkling Spear, Oh Great Warrior!

kozhung kAvin malarp pozhilil: In this place, there are very fertile groves and many flower gardens;

karumbAlai puNarkkum isai: in their midst, are sugarcane crushers making their humming musical sound;

kurangkAdu thuRaik kumarap perumALE.: and this town is KurangkAduthuRai*, which is Your abode, KumarA. You are the Great One!


* North KurangkAduthuRai is at a distance of 4 miles from AyyampEttai, near KumbakONam.
South KurangkAduthuRai, is now simply known as AaduthuRai, which is 2 miles to the east of ThiruvidaimarudhUr, near KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 879 alangkAra mudikkiraNa - thirukkurangkadudhuRai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]