பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருக்குரங்காடுதுறிை திருப்புகழ் உரை 585 திருப்தி தரும்படியான (அல்லத போதுமான) (தாமம்) பூமாலைகள், ரத்னமணிக்கூட்ட (மாலைகள்) புரண்டாடுங் (காட்சி) வரிசையாய் அமைந்தனவும், திருக்கரங்களில் அணியப் பட்டனவுமான மோதிரம், புனைந்துள்ள வீரகடகம் . கங்கணம், ஒளிவீசும் வேல். சிலம்பு, அழகிய வேத ஒலி காட்டும் (சலங்கு) சலங்கை சதங்கை - இவைகள் ஒசை மிகுந்த ஒலி செய்யச் செந்நிறம் மிக்கு நறுமணம் வீசும் மலர்கள் புனைந்துள்ள திருவடிகள். திமிந்தோதி திமித்திமிதித் தனந்தான தனத்தனன என்னும் வகையில் நாள்தோறும் நீநடனம் செய்யும் அழகுஆக இவைகளை எல்லாம் (மன்) நன்றாக - நிரம்ப - நான் சொல்லுவேனோ-சொல்லித் துதிக்க மாட்டேனோ! இலங்கைக்குத் தலைவனான ராவணனுடைய (அசோக) வனத்தில் (வனம்) அழகுள்ள (அல்லது காட்டில் வாசம் செய்யும்) குரங்கை (அநுமாரை) அனுப்பி, அவரால் இலங்கையில் நெருப்பின் புகையைக் கிளம்பவைத்து, மென்மை வாய்ந்த பூந்தாதுகளை (மகரந்தப் பொடியைக்) கொண்ட செந்தாமரை மலரில் வீற்றிருக்கும் லக்ஷமியாம் சீதையின் சிறையை மீட்ட இளமை வாய்ந்தவரும், கரிய மேகநிறங் கொண்டவரும். (கடுமை) கொடிதான (சரம்) அம்பையும், (கோடு) வளைந்த வில்லையும் (அல்லது கடுமை, கோடு சரம், கடுமையும் (கோடு) கொடுமையும் கொண்ட அம்பைக்) கையிற் கொண்டவரும். (தந்தையின் சொல்வழியே) இருண்ட பெரிய காட்டில் நடந்து வனவாசம் செய்தவருமான (ரீராமருக்கு - திருமாலுக்கு) இனியவனே! (உகந்தவனே): (குலம்) கூட்டமான இனத்தாரையும், (கோடு) கொடுமையையும் கொண்டிருந்த அசுரர்களின் பெரிய சேனையை அழிக்கப் போர் முனையில், கொடியதும், கூர்மை உடையதும், வெயிற்கு - ஒளிக்குப் பேர் போனதுமான (அயிலை) வேலாயுதத்தைப் பிரயோகித்த வீரனே! (அல்லது சேனையை அழிக்க (முனை) போர்க்களத்தில் கொடிய முன்னணிப் படையின் (வெயிற்கு) வெயில்போன்ற கொடுமையைக் குலைக்க வேலைச் செலுத்தின வீரனே!)