திருப்புகழ் 859 இலகு குழைகிழிய  (திருவிடைமருதூர்)
Thiruppugazh 859 ilagukuzhaikizhiya  (thiruvidaimarudhUr)
Thiruppugazh - 859 ilagukuzhaikizhiya - thiruvidaimarudhUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தனதனன தான தானதன
     தனன தனதனன தான தானதன
          தனன தனதனன தான தானதன ...... தந்ததான

......... பாடல் .........

இலகு குழைகிழிய வூடு போயுலவி
     யடர வருமதன னூல ளாவியெதி
          ரிளைஞ ருயிர்கவர ஆசை நேர்வலைபொ ...... திந்தநீலம்

இனிமை கரைபுரள வாகு லாவுசரி
     நெறிவு கலகலென வாசம் வீசுகுழ
          லிருளின் முகநிலவு கூர மாணுடைய ...... கன்றுபோக

மலையு மிதழ்பருகி வேடை தீரவுட
     லிறுக இறுகியநு ராக போகமிக
          வளரு மிளகுதன பார மீதினில்மு ...... யங்குவேனை

மதுர கவியடைவு பாடி வீடறிவு
     முதிர அரியதமி ழோசை யாகவொளி
          வசன முடையவழி பாடு சேருமருள் ...... தந்திடாதோ

கலக அசுரர்கிளை மாள மேருகிரி
     தவிடு படவுதிர வோல வாரியலை
          கதற வரியரவம் வாய்வி டாபசித ...... ணிந்தபோகக்

கலப மயிலின்மிசை யேறி வேதநெறி
     பரவு மமரர்குடி யேற நாளும்விளை
          கடிய கொடியவினை வீழ வேலைவிட ...... வந்தவாழ்வே

அலகை யுடனடம தாடு தாதைசெவி
     நிறைய மவுனவுரை யாடு நீபஎழில்
          அடவி தனிலுறையும் வேடர் பேதையைம ...... ணந்தகோவே

அமணர் கழுவில்விளை யாட வாதுபடை
     கருது குமரகுரு நாத நீதியுள
          தருளு மிடைமருதில் மேவு மாமுனிவர் ...... தம்பிரானே.

......... சொல் விளக்கம் .........

இலகு குழை கிழிய ஊடு போய் உலவி அடர வரு மதன நூல்
அளாவி எதிர் இளைஞர் உயிர் கவர ஆசை நேர் வலை
பொதிந்த நீலம்
... விளங்குகின்ற குண்டலத்தைத் தாக்கும்படி
அதனிடையே போய்ப் பாய்ந்து நெருங்கி வந்தும், காம சாஸ்திரத்தை
ஆராய்ந்து எதிரே வரும் இளைஞர்களின் உயிரைக் கவர்வதற்காகவே
விரித்த ஆசை நிறைந்த வலையாக அமைந்தும் உள்ள நீலோற்பலம்
போன்ற கண்கள்.

இனிமை கரை புரள வாகு உலாவு சரி நெறிவு கலகல என
வாசம் வீசு குழல் இருளின் முக நிலவு கூர
... இனிமை என்பது
மிக்கெழுந்து கரை புரண்டு ஒழுக, கையில் விளங்கும் வளை வகைகள்
கலகல என்று ஒலிக்க, நறு மணம் வீசுகின்ற கூந்தல் என்னும் இருளில்
முகம் என்னும் நிலாவொளி மிக்கு எழுந்து விளங்க,

மாண் உடை அகன்று போக மலையும் இதழ் பருகி வேடை
தீர
... சிறந்த ஆடை விலகிப் போக, எதிர்ப்பட்டு முட்டி மோதும் வாயிதழ்
ஊறலை உண்டு காம தாகம் அடங்க,

உடல் இறுக இறுகி அநுராக போக மிக வளரும் இளகு தன
பாரம் மீதினில் முயங்குவேனை
... விலை மகளிரின் உடலை
அழுந்தக் கட்டி அணைத்து, காமப் பற்றால் ஏற்படும் சுகம் நன்றாக
வளர்ந்தும், நெகிழ்ச்சியுறும் மார்பின் பாரங்களைத் தழுவும் எனக்கு,

மதுர கவி அடைவு பாடி வீடு அறிவு முதிர அரிய
தமிழோசை ஆக ஒளி வசனம் உடைய வழிபாடு சேரும் அருள்
தந்திடாதோ
... இனிமை நிரம்பிய பாடல்கள் எல்லாவற்றையும் பாடி,
வீட்டின்ப ஞானம் நிரம்ப உண்டாக, அருமையான தமிழ் இசை பிறக்க,
அறிவு மொழிகள் பொலிகின்ற வழிபாட்டு நெறியில் சேரும்படியான
உனது திருவருளைத் தர மாட்டாயோ?

கலக அசுரர் கிளை மாள மேரு கிரி தவிடு பட உதிர ஓல
வாரி அலை கதற
... போர் செய்யும் அசுரர்களின் கூட்டம் மாண்டு
அழிய, மேரு மலை தவிடு பொடியாக, ரத்த வெள்ளம் ஓலமிடும் கடலின்
அலைகள் பேரொலி செய்ய,

வரி அரவம் வாய் விடா பசி தணிந்த போகக் கலப மயிலின்
மிசை ஏறி வேத நெறி பரவும் அமரர் குடியேற
... கோடுகளை
உடைய பாம்பைத் தன் வாயினின்றும் விடாது, பசி அடங்கிய இன்பம்
கொண்ட, தோகை மயில் மேல் ஏறி வந்து, வேத சன்மார்க்கத்தைப்
போற்றும் தேவர்கள் தங்கள் பொன்னுலகுக்குக் குடிபுகச் செய்து,

நாளும் விளை கடிய கொடிய வினை வீழ வேலை விட வந்த
வாழ்வே
... நாள்தோறும் விளைகின்ற மிகப் பொல்லாத வினை
வீழ்ந்தழிய வேலாயுதத்தை ஏவுதற்கு என்று தோன்றிய செல்வமே,

அலகையுடன் நட(ன)ம் அது ஆடும் தாதை செவி நிறைய
மவுன உரையாடு(ம்) நீப
... பேய்களுடன் நடமிடும் தந்தையாகிய
சிவபெருமானுடைய காதுகள் நிரம்ப மவுன உபதேசம் செய்தவனே,
கடப்ப மாலையை அணிந்தவனே,

எழில் அடவி தனில் உறையும் வேடர் பேதையை மணந்த
கோவே
... அழகிய காட்டில் வாசம் செய்த வேடர்களின் மகளாகிய
வள்ளியை திருமணம் புரிந்த தலைவனே,

அமணர் கழுவில் விளையாட வாது படை கருது குமரகுரு
நாத
... சமணர்கள் கழுவில் துள்ளிக் குதிக்க (சம்பந்தராக வந்து) வாதப்
போர் கருதிச் செய்த குமரனே, குரு நாதனே,

நீதி உளது அருளும் இடை மருதில் மேவும் மா முனிவர்
தம்பிரானே.
... நீதி உள்ளவற்றை அருளிச் செய்பவனே, திருவிடை
மருதூரில் வீற்றிருப்பவனே, சிறந்த முனிவர்களுக்குத் தம்பிரானே.


* திருவிடைமருதூர் கும்பகோணத்துக்கு வடகிழக்கில் 5 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1087  pg 2.1088  pg 2.1089  pg 2.1090 
 WIKI_urai Song number: 863 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 859 - ilagu kuzhaikizhiya (thiruvidaimarudhUr)

ilaku kuzhaikizhiya vUdu pOyulavi
     yadara varumathana nUla LAviyethi
          riLainja ruyirkavara Asai nErvalaipo ...... thinthaneelam

inimai karaipuraLa vAku lAvusari
     neRivu kalakalena vAsam veesukuzha
          liruLin mukanilavu kUra mANudaiya ...... kanRupOka

malaiyu mithazhparuki vEdai theeravuda
     liRuka iRukiyanu rAka pOkamika
          vaLaru miLakuthana pAra meethinilmu ...... yangkuvEnai

mathura kaviyadaivu pAdi veedaRivu
     muthira ariyathami zhOsai yAkavoLi
          vachana mudaiyavazhi pAdu sErumaruL ...... thanthidAthO

kalaka asurarkiLai mALa mErukiri
     thavidu padavuthira vOla vAriyalai
          kathaRa variyaravam vAyvi dApasitha ...... NinthapOkak

kalapa mayilinmisai yERi vEthaneRi
     paravu mamararkudi yERa nALumviLai
          kadiya kodiyavinai veezha vElaivida ...... vanthavAzhvE

alakai yudanadama thAdu thAthaisevi
     niRaiya mavunavurai yAdu neepaezhil
          adavi thaniluRaiyum vEdar pEthaiyaima ...... NanthakOvE

amaNar kazhuvilviLai yAda vAthupadai
     karuthu kumarakuru nAtha neethiyuLa
          tharuLu midaimaruthil mEvu mAmunivar ...... thambirAnE.

......... Meaning .........

ilaku kuzhai kizhiya Udu pOy ulavi adara varu mathana nUl aLAvi ethir iLainjar uyir kavara Asai nEr valai pothintha neelam: Their eyes, looking like the blue lily, swiftly leap up to the ears as if they are about to attack the elegant ear-studs swinging there; those eyes appear to have researched into erotic art, looking like an enticing net, spread specially to grab the lives of young men;

inimai karai puraLa vAku ulAvu sari neRivu kalakala ena vAsam veesu kuzhal iruLin muka nilavu kUra: their sweetness gushes like the flood breaking the boundaries; the varieties of bangles in their arms make a jingling sound; against the backdrop of their dark and fragrant hair, their face rises like the bright and radiant moon;

mAN udai akanRu pOka malaiyum ithazh paruki vEdai theera: their nice attire becomes loosened; imbibing the saliva oozing from their confronting lips, the thirst of passion is quenched;

udal iRuka iRuki anurAka pOka mika vaLarum iLagu thana pAram meethinil muyanguvEnai: tightly hugging the bodies of the whores, the pleasure derived from passion soars unabatedly as I embrace their melting bosom;

mathura kavi adaivu pAdi veedu aRivu muthira ariya thamizhOsai Aka oLi vasanam udaiya vazhipAdu sErum aruL thanthidAthO: to make me sing all the sweet songs that give me the Knowledge of heavenly bliss and to enable me to compose rare music in Tamil, will You not kindly bless me so that I might reach the righteous path where I could offer worship with words of wisdom?

kalaka asurar kiLai mALa mEru kiri thavidu pada uthira Ola vAri alai kathaRa: The warring multitude of demons was destroyed; Mount MEru was shattered to pieces; the waves of the sea, filled with floods of blood, roared loudly;

vari aravam vAy vidA pasi thaNintha pOkak kalapa mayilin misai ERi vEtha neRi paravum amarar kudiyERa: mounting Your happy peacock, having satiated its hunger as evidenced by the striped serpent hanging from its beak, You enabled the celestials, devoted to the righteous path laid out in the scriptures, to resettle in their golden world;

nALum viLai kadiya kodiya vinai veezha vElai vida vantha vAzhvE: You came to this world to destroy the evil deed, that recurs everyday, by wielding Your spear, Oh my Treasure!

alakaiyudan nada(na)m athu Adum thAthai sevi niRaiya mavuna uraiyAdu(m) neepa: He dances with the devils; He is Your Father; and filling the ears of that Lord SivA, You preached the silent ManthrA, Oh Master! You wear the garland of the kadappa flowers!

ezhil adavi thanil uRaiyum vEdar pEthaiyai maNantha kOvE: She is the daughter of the hunters who live in the beautiful forest; You married that VaLLi, Oh Leader!

amaNar kazhuvil viLaiyAda vAthu padai karuthu kumarakuru nAtha: Making the samaNAs jump at the gallows, You came (as ThirugnAna Sambandhar) to wage a well-contemplated war of words, Oh Kumara! Oh Supreme Master!

neethi uLathu aruLum idai maruthil mEvum mA munivar thambirAnE.: You graciously shower all the righteous things! You are seated in ThiruvidaimaruthUr! You are the Lord of the wisest sages, Oh Great One!


* ThiruvidaimaruthUr is located 5 miles northeast of KumbakONam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 859 ilagu kuzhaikizhiya - thiruvidaimarudhUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]