பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1088

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவிடைமருதூர்) திருப்புகழ் உரை 529 உனது இரண்டு திருவடிகளைப் போற்றி செய்யும் உன்னுடைய அடியவர்கள் பெறுவதென்றால் அங்ங்னம் அவர்கள் பெறுவதை (உலகத்தவர்) இகழமாட்டார்களா-ஏ! பாச நாசம் செய்யும் பெருமானே! ஆதலால் - (நல்வினை தீவினை என்னும்) இருவினையும். ஆணவம், கன்மம், மாயை (எனப்படும்) மும்மலங்களும் நீங்கவும், இறப்பொடு பிறப்பு என்பது ஒழியவும், ஒரே இன்பநிலையில். நீயும் நானும் ஒன்றுபட்டு அழுந்திக் கலக்கும் வகை வருமாறு பேரின்ப நிலையதனை அருள்புரிவாயாக! திருவிடைமருதுாரில் வீற்றிருக்கும் தனிநாயகனே! லோக நாயகனே! தேவர்கள் பெருமாளே! (பரமசுகம் அதனை அருள்) 863. விளங்குகின்ற குை மு) காதணி தாக்குண்ணும்படி அதனிடையே போய் உலவி நெருங்கி வந்தும்,காம சாத்திரத்தை ஆய்ந்தாய்ந்து தன் எதிரே வரும் இளைஞர்களின் உயிரைக் கவர்வதற்கு ஆசை கூடிய வலையாக அமைந்தும் உள்ள நீலோற்பலம் போன்ற கண்கள். இனிமை என்பது (கரைபுரண்டு) மிக்கெழுந்து ஒழுக, தோளில் (கையில்) விளங்கும் (சரி) இlஇ) இTஇlஇ)தி ஒன்றோடொன்று நெரிப்புண்டு கலகல என்று ஒலிக்க, நறுமணம் க ம் கூந்தல் என்னும் இருளில் முகம் என்னும் நிலாவொளி மிக்கு எழுந்து விளங்க, சிறந்த ஆடை விலகிப் போக எதிர்ப்பட்டு பொருதற்குரிய - எதிர்த்து மோதும் . வாயிதழ் ஊறலை உண்டு, காமதாகம் அடங்கவேண்டி, உடலை அழுந்தக் கட்டி அணைத்து, காமப்பற்றால் ஏற்படும் (போகம்) இன்பசுகம் நன்றாக வளர்ந்தும், நெகிழ்ச்சியு றும் கொங்கைப் பாரங்களின் மேலே தழுவிப் புணரும் எனக்கு