திருப்புகழ் 853 கும்பமு நிகர்த்த  (திருப்பந்தணை நல்லூர்)
Thiruppugazh 853 kumbamunigarththa  (thiruppandhaNai nallUr)
Thiruppugazh - 853 kumbamunigarththa - thiruppandhaNainallUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தந்தன தனத்த தந்தன தனத்த
     தந்தன தனத்த ...... தனதான

......... பாடல் .........

கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த
     கொஞ்சுகி ளியொத்த ...... மொழிமானார்

குங்கும பணிக்குள் வண்புழு குவிட்ட
     கொந்தள கம்வைத்த ...... மடவார்பால்

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து
     மங்கிந ரகத்தில் ...... மெலியாமல்

வண்கயி லைசுற்றி வந்திடு பதத்தை
     வந்தனை செய்புத்தி ...... தருவாயே

பம்புந தியுற்ற பங்கொரு சமர்த்தி
     பண்டுள தவத்தி ...... லருள்சேயே

பைம்புய லுடுத்த தண்டலை மிகுத்த
     பந்தணை நகர்க்கு ...... ளுறைவோனே

சம்புநி ழலுக்குள் வந்தவ தரித்த
     சங்கரர் தமக்கு ...... மிறையோனே

சங்கணி கரத்த ரும்பர்ப யமுற்ற
     சஞ்சல மறுத்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கும்பமு(ம்) நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சு கிளி
ஒத்த மொழி மானார்
... குடத்தை ஒத்த மார்பகங்களை
வளர்த்துள்ளவர்களும், கொஞ்சுகின்ற கிளியைப் போன்ற பேச்சுக்களை
உடையவர்களும் ஆகிய மான் போன்ற விலைமாதர்கள்,

குங்கும பணிக்குள் வண் புழுகு விட்ட கொந்து அளகம்
வைத்த மடவார்பால்
... குங்குமம் ஆகிய அலங்காரத்துடன், நல்ல
புனுகை விட்டு (வாரப்பட்ட), பூங்கொத்துக்களை உள்ள கூந்தலை
உடைய விலைமாதர்களிடத்தில்,

வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கி நரகத்தில்
மெலியாமல்
... வீண் செயல்களைச் செய்து, நட்புச் செயல்களைக்
காட்டி, அழிந்து, நரகத்தில் மெலியாதவாறு,

வண் கயிலை சுற்றி வந்திடு பதத்தை வந்தனை செய் புத்தி
தருவாயே
... வளப்பமுள்ள கயிலை மலையைச் சுற்றி வந்த உன்
திருவடியை வணங்குகின்ற புத்தியைக் கொடுத்து அருளுக.

பம்பு நதி பங்கு உற்ற ஒரு சமர்த்தி பண்டு உள தவத்தில்
அருள் சேயே
... செறிந்துள்ள கங்கை நதியும், (சிவனார்) பாகத்தில்
பொருந்தியுள்ள ஒப்பற்ற சாமர்த்தியம் உள்ள பார்வதி தேவியும் (தத்தமது)
பழைமையானத் தவப்பேற்றால் அருளிய குழந்தையே,

பைம் புயல் உடுத்த தண்டலை மிகுத்த பந்தணை நகர்க்குள்
உறைவோனே
... பசுமையான மேகங்கள் படியும் சோலைகள்
மிக்குள்ள திருப்பந்தணை நல்லூர்* என்னும் தலத்தில் வீற்றிருப்பவனே,

சம்பு நிழலுக்குள் வந்து அவதரித்த சங்கரர் தமக்கும்
இறையோனே
... நாவல் மரத்தடியில் (திருவானைக்காவில்) வந்து
தோன்றிய சிவபெருமானுக்கும் தலைவனே,

சங்கு அணி கரத்தர் உம்பர் பயம் உற்ற சஞ்சலம் அறுத்த
பெருமாளே.
... சங்கை ஏந்திய திருமாலும், தேவர்களும் (சூரனிடம்)
கொண்ட பயத்தினால் ஏற்பட்ட துன்பத்தை நீக்கி ஒழித்த பெருமாளே.


* இத்தலம் கும்பகோணத்துக்கு அருகிலுள்ள திருவிடைமருதூர் ரயில்
நிலையத்துக்கு வடகிழக்கில் 8 மைல் தொலைவில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1067  pg 2.1068  pg 2.1069  pg 2.1070 
 WIKI_urai Song number: 857 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 853 - kumbamu nigarththa (thiruppandhaNai nallUr)

kumpamu nikarththa kongaiyai vaLarththa
     konjuki Liyoththa ...... mozhimAnAr

kunguma paNikkuL vaNpuzhu kuvitta
     konthaLa kamvaiththa ...... madavArpAl

vampukaL viLaiththu naNpukaL koduththu
     mangina rakaththil ...... meliyAmal

vaNkayi laisutRi vanthidu pathaththai
     vanthanai seypuththi ...... tharuvAyE

pampuna thiyutRa pangoru samarththi
     paNduLa thavaththi ...... laruLsEyE

paimpuya luduththa thaNdalai mikuththa
     panthaNai nakarkku ...... LuRaivOnE

sampuni zhalukkuL vanthava thariththa
     sankarar thamakku ...... miRaiyOnE

sangaNi karaththa rumparpa yamutRa
     sanjala maRuththa ...... perumALE.

......... Meaning .........

kumpamu(m) nikarththa kongaiyai vaLarththa konju kiLi oththa mozhi mAnAr: These whores have developed their breasts to the size of a pot; these deer-like women are endowed with the endearing speech of a parrot;

kunguma paNikkuL vaN puzhuku vitta konthu aLakam vaiththa madavArpAl: adorned with vermilion on the forehead, the hair of these whores, bedecked with bunches of flowers, has been groomed with musk of high quality;

vampukaL viLaiththu naNpukaL koduththu mangi narakaththil meliyAmal: making me refrain from mischievous and intimate actions with them, that lead to my deterioration and decaying in hell,

vaN kayilai sutRi vanthidu pathaththai vanthanai sey puththi tharuvAyE: kindly grant me the intellect to worship Your hallowed feet that circumambulated the resourceful mountain, KailAsh!

pampu nathi pangu utRa oru samarththi paNdu uLa thavaththil aruL sEyE: You are the child born due to the good fortune of old penance performed by the vast river Gangai and PArvathi DEvi who with Her matchless wisdom is concorporate on the left side of Lord SivA!

paim puyal uduththa thaNdalai mikuththa panthaNai nakarkkuL uRaivOnE: You are seated in ThiruppanthaNainallUr* having an abundance of groves over which fresh clouds hover, Oh Lord!

sampu nizhalukkuL vanthu avathariththa sankarar thamakkum iRaiyOnE: You are the Master of even Lord SivA who is seated under the shade of the nAval tree (in ThiruvAnaikkA)!

sangu aNi karaththar umpar payam utRa sanjalam aRuththa perumALE.: You eradicated the suffering of Lord VishNu, with a conch-shell in His hand, and of the celestials who were all afraid of the demon, SUran, Oh Great One!


* This town is 8 miles northeast of ThiruvidaimarudhUr Railway Station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 853 kumbamu nigarththa - thiruppandhaNai nallUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]