பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/1067

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

508 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை ககன விஞ்சையர் கோவென வேகுவ டவுனர் சிந்திட வேகடல் தீவுகள் கமற வெந்தழல் வேல்விடு சேவக முருகோனே. கரிநெ டும்புலி தோலுடை யாரெனை யடிமை கொண்டசு வாமிச தாசிவ கடவு ளெந்தையர் பாகம் விடாவுமை யருள்பாலா, f செகமு மண்டமு மோருரு வாய்நிறை நெடிய அம்புயல் மேனிய னாரரி # திருவு றைந்துள மார்பக ணார்திரு மருகோனே. திணைவ னந்தனில் வாழ்வளி நாயகி வளர்த ணம்புதை மார்பழ காமிகு திலக பந்தனை மாநகர் மேவlய பெருமாளே.(3) 857. வணங்க தந்தன தனத்த தந்தன தனத்த தந்தன தனத்த தனதான கும்பமு நிகர்த்த கொங்கையை வளர்த்த கொஞ்சுகிளி யொத்த மொழிமானார். Xகுங்கும பணிக்குள் வண்புழுகு விட்ட கொந்தளகம் வைத்த மடவார்பால்; வம்புகள் விளைத்து நண்புகள் கொடுத்து மங்கிநர கத்தில்

  • அருணாசலேசுரரும் அருணகிரியாரை ஆட்கொண்டனர் என்பது இதனாற் பெறப்படும் - அருணகிரிநாதர் வரலாறு பக்கம் 11-12; சிவபிரான் இவரை ஆட்கொண்டு திருநீறும் அளித்தார் என்பதைத் திருப்புகழ் 568ஆம் பாடலிற் காண்க -

i எங்கும் உளன் கண்ணன்"- திருவாய்மொழி 2.8-9. "ஏழுலகமும் துன்னி முற்றுமாகி நின்றசோதி 4.3-8

  1. திருவாழ் மார்வன் தன்னை" - பெரிய திருமொழி 7-6-7.

'திருக்கலந்து சேரும் மார்ப தேவ தேவ தேவனே." - சந்த விருத்தம் 103. X குங்கும பணி குங்குமபரணி - எனக் கொள்ளலாம்: பரணி-பணி-இடைக்குறை தாதகி - தாகி என்புழிப் போல. மெலியாமல்.