திருப்புகழ் 834 மைக்குழல் ஒத்த  (எட்டிகுடி)
Thiruppugazh 834 maikkuzhaloththa  (ettikudi)
Thiruppugazh - 834 maikkuzhaloththa - ettikudiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தத்தன தத்தன தானா தானா
     தத்தன தத்தன தானா தானா
          தத்தன தத்தன தானா தானா ...... தனதான

......... பாடல் .........

மைக்குழ லொத்தவை நீலோ மாலோ
     அக்கணி ணைக்கிணை சேலோ வேலோ
          மற்றவர் சொற்றெளி பாலோ பாகோ ...... வடிதேனோ

வத்திர மெய்ச்சசி தானோ நாணா
     குத்துமு லைக்கிள நீரோ மேரோ
          வைப்பதி டைக்கிணை நூலோ மேலோ ...... வெனமாதர்

தக்கவு றுப்பினுள் மாலே மேலாய்
     லச்சைய றப்புணர் வாதே காதே
          சைச்சையெ னத்திரி நாயே னோயா ...... தலையாதே

தற்பொறி வைத்தருள் பாராய் தாராய்
     தற்சமை யத்தக லாவே னாதா
          தத்தும யிற்பரி மீதே நீதான் ...... வருவாயே

முக்கணர் மெச்சிய பாலா சீலா
     சித்தசன் மைத்துன வேளே தோளார்
          மொய்த்தம ணத்தது ழாயோன் மாயோன் ...... மருகோனே

முத்தமிழ் வித்வவி நோதா கீதா
     மற்றவ ரொப்பில ரூபா தீபா
          முத்திகொ டுத்தடி யார்மேல் மாமால் ...... முருகோனே

இக்குநி ரைத்தவி ராலுார் சேலூர்
     செய்ப்பழ நிப்பதி யூரா வாரூர்
          மிக்கவி டைக்கழி வேளூர் தாரூர் ...... வயலூரா

எச்சுரு திக்குளு நீயே தாயே
     சுத்தவி றற்றிறல் வீரா தீரா
          எட்டிகு டிப்பதி வேலா மேலோர் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மைக் குழல் ஒத்தவை நீலோ மாலோ ... கரிய கூந்தலுக்கு
ஒப்பானவை கருங் குவளையோ, கருமையோ?

அக் கண் இணைக்கு இணை சேலோ வேலோ ... அந்தக் கண்கள்
இரண்டுக்கும் ஒப்பானவை சேல் மீன்களோ, வேலோ?

மற்று அவர் சொல் தெளி பாலோ பாகோ வடி தேனோ ...
பின்னர் அந்தப் பெண்களின் சொல்லுக்கு இணை தெளிந்த பாலோ,
வெல்லமோ, வடித்த தேனோ?

வத்திரம் மெய்ச் சசி தானோ நாணா குத்து முலைக்கு இள
நீரோ மேரோ
... முகம் உண்மையாகவே சந்திரன் தானோ? வெட்குதல்
இல்லாமல் எழுந்த குத்தும் மார்பகத்துக்கு ஒப்பானவை இளநீரோ,
மேரு மலையோ?

இடைக்கு இணை வைப்பது நூலோ மேலோ என மாதர் தக்க
உறுப்பினுள் மாலே மேலாய் லச்சை அற புணர் வாது
ஏகாதே
... இடைக்கு இணையாகக் கூறப்படுவது (நுண்ணியதான)
நூலோ, அதை விட மேலானது ஒன்றோ என்றெல்லாம் மாதர்களுடைய
மனத்தைக் கவர வல்ல அவயவங்களுள் காம மயக்கம் மிக்கவனாய்,
கூச்சம் இல்லாமல் சேர்கின்ற போட்டிச் சண்டையில் நுழையாமல்,

சைச் சை எனத் திரி நாயேன் ஓயாது அலையாதே தற்பொறி
வைத்து அருள் பாராய் தாராய்
... சீச் சீ என்று (பிறர் சொல்லும்படி)
திரிகின்ற நாயேன் எப்போதும் அலையாமல், உனது முத்திரையை
(வேல்-மயில் அடையாளத்தை) என் மேல் பொறித்து வைத்து கண் பார்த்து
அருளுக.

தற்சமையத்த கலா வேல் நாதா தத்து மயில் பரி மீதே நீ தான்
வருவாயே
... சிவசமயத்தனே, ஒளி வேல் ஏந்தும் நாதனே, (குதிரை
போலத்) தாவிச் செல்லும் மயில் வாகனத்தின் மேல் நீதான் வந்து அருள
வேண்டும்.

முக்க(ண்)ணர் மெச்சிய பாலா சீலா சித்தசன் மைத்துன
வேளே தோள் ஆர் மொய்த்த மணத்த துழாயோன் மாயோன்
மருகோனே
... மூன்று கண்களை உடைய சிவபெருமான் மெச்சிப் புகழும்
பாலனே, தூயவனே, மன்மதனின் மைத்துனனான* செவ்வேளே,
தோள்கள் நிரம்ப மொய்த்துள்ள, நறுமணம் உள்ள, துளசி மாலை
அணிந்தவனாகிய திருமாலின் மருகனே,

முத்தமிழ் வித்வ விநோதா கீதா மற்றவர் ஒப்பு இல ரூபா
தீபா முத்தி கொடுத்து அடியார் மேல் மா மால் முருகோனே
...
முத்தமிழ்ப் புலமை வாய்ந்த விநோதனே, இசை ஞானியே, பிறர் எவரும்
உனக்கு ஒப்பில்லாத உருவத்தனே, (ஞான) ஒளி விளக்கே, முக்தியைத்
தந்தருளி அடியார்கள் மீது மிக்க ஆசை கொள்ளும் முருகனே,

இக்கு நிரைத்த விராலூர் சேல் ஊர் செய்ப் பழநிப்பதி ஊரா
வாரூர் மிக்க விடைக்கழி வேளூர் தார் ஊர் வயலூரா
... கரும்பு
வரிசையாக உள்ள விராலியூர், சேல் மீன்கள் நீந்தி ஊடுருவும் வயல்கள்
உள்ள பழனி ஊரனே, திருவாரூர், சிறப்பு வாய்ந்த திருவிடைக்கழி,
புள்ளிருக்கும் வேளூர் (ஆகிய வைதீஸ்வரன் கோவில்), பூ அரும்புகள்
அடர்ந்து நிறைந்துள்ள வயலூர் என்னும் தலங்களில் வீற்றிருப்பவனே,

எச் சுருதிக்கு(ள்)ளும் நீயே தாயே சுத்த விறல் திறல் வீரா
தீரா எட்டிகுடிப் பதி வேலா மேலோர் பெருமாளே.
... எத்தகைய
வேதத்துக்குள்ளும் நீயே தாய் போல் மூலப் பொருளாய் நிற்கின்றவனே,
பரிசுத்தமான வலிமையும், திறமையும் வாய்ந்த வீரனே, தீரனே,
எட்டிகுடியில்** வீற்றிருக்கும் வேலனே, தேவர்களின் பெருமாளே.


* நாகப்பட்டினத்துக்கு அருகில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.1015  pg 2.1016  pg 2.1017  pg 2.1018  pg 2.1019  pg 2.1020 
 WIKI_urai Song number: 838 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

திருமதி காந்திமதி சந்தானம்

Mrs Kanthimathy Santhanam
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 
Mrs Kanthimathy Santhanam

Song 834 - maikkuzhal oththa (ettikudi)

maikkuzha loththavai neelO mAlO
     akkaNi NaikkiNai sElO vElO
          matRavar sotReLi pAlO pAkO ...... vadithEnO

vaththira meycchasi thAnO nANO
     kuththumu laikkiLa nIrO mErO
          vaippathi daikkiNai nUlO mElO ...... venamAthar

thakkavu RuppinuL mAlE mElAy
     lacchaiya RappuNar vAthE kAthE
          chaicchaiye naththiri nAyE nOyA ...... thalaiyAthE

thaRpoRi vaiththaruL pArAy thArAy
     thaRchamai yaththaka lAvE nAthA
          thaththuma yiRpari mIthE nIthAn ...... varuvAyE

mukkaNar mecchiya bAlA seelA
     siththasan maiththuna vELE thOLAr
          moyththama Naththathu zhAyOn mAyOn ...... marukOnE

muththamizh vithvavi nOthA kIthA
     matRava roppila rUpA thIpA
          muththiko duththadi yArmEl mAmAl ...... murukOnE

ikkuni raiththavi rAluar sElUr
     seyppazha nippathi yUrA vArUr
          mikkavi daikkazhi vELUr thArUr ...... vayalUrA

ecchuru thikkuLu nIyE thAyE
     suththavi RatRiRal vIrA thIrA
          ettiku dippathi vElA mElOr ...... perumALE.

......... Meaning .........

maik kuzhal oththavai neelO mAlO: "Is their dark hair comparable to black lily or blackness itself?

ak kaN iNaikku iNai sElO vElO: Are their two eyes comparable to sEl fish or spears?

matRu avar sol theLi pAlO pAkO vadi thEnO: Further, is the speech of these women comparable to clear milk, jaggery or refined honey?

vaththiram meyc chasi thAnO nANA kuththu mulaikku iLa nIrO mErO: Is their face really the moon itself? Are their shamelessly prominent and sharp breasts comparable to the tender coconut or Mount MEru?

idaikku iNai vaippathu nUlO mElO ena mAthar thakka uRuppinuL mAlE mElAy lacchai aRa puNar vAthu EkAthE: Is their waist comparable to the slender thread or something even thinner than that?" - so on and so forth, I do not wish to expose my passion for the various enchanting body-parts of these women; nor do I wish to shamelessly enter into any kind of debate on this subject.

chaic chai enath thiri nAyEn OyAthu alaiyAthE thaRpoRi vaiththu aruL pArAy thArAy: I constantly roam about like a dog being ridiculed by one and all; saving me from such disgrace, kindly engrave Your seal (of the spear and the peacock) on my body and look after me compassionately, Oh Lord!

thaRchamaiyaththa kalA vEl nAthA thaththu mayil pari mIthE nI thAn varuvAyE: Oh Symbol of the Order of SivA! You hold the dazzling spear in Your hand. Mounting the peacock that sprints (like a horse), kindly come to me all by Yourself to bless me!

mukka(N)Nar mecchiya bAlA seelA siththasan maiththuna vELE thOL Ar moyththa maNaththa thuzhAyOn mAyOn marukOnE: You are the child lauded and praised by the three-eyed Lord SivA! You are chaste! You are the reddish Lord who is the cousin* of Manmathan (God of Love)! He wears the fragrant thuLasi garland, swarmed about by beetles; and You are the nephew of that Lord VishNu!

muththamizh vithva vinOthA kIthA matRavar oppu ila rUpA thIpA muththi koduththu adiyAr mEl mA mAl murukOnE: You are the wonderful genius well-versed in the three branches of Tamil language! You are a musical prodigy! Your figure is not comparable to that of anyone else, Oh Lord! You are the bright lamp (of Knowledge)! You grant liberation to Your devotees on whom You dote, Oh Lord MurugA!

ikku niraiththa virAlUr sEl Ur seyp pazhanippathi UrA vArUr mikka vidaikkazhi vELUr thAr Ur vayalUrA: In VirAliyUr where rows of sugarcane are abundant, in Pazhani surrounded by many paddy-fields through which the sEl fish penetrate and swim about, in ThiruvArUr, in the famous shrine of Thiruvidaikkazhi, in PuLLirukkum vELUr (Vaitheeswaran Kovil) and in VayalUr filled with many flowery gardens, You are seated with relish, Oh Lord!

ec churuthikku(L)Lum nIyE thAyE suththa viRal thiRal vIrA thIrA ettikudip pathi vElA mElOr perumALE.: In each and every VEdA, You reside like the Divine Mother as the Primeval principle, Oh Lord! You are valorous, with unblemished strength and enormous power, Oh Mighty One! You are the Lord with the spear in Your hand, seated in Ettikkudi**, and You are the Lord of the celestials, Oh Great One!


* This town is situated near NAgappattinam.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 834 maikkuzhal oththa - ettikudi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]