திருப்புகழ் 797 பெருக்க மாகிய  (திருவிடைக்கழி)
Thiruppugazh 797 perukkamAgiya  (thiruvidaikkazhi)
Thiruppugazh - 797 perukkamAgiya - thiruvidaikkazhiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தானன தனதன தனதன
     தனத்த தானன தனதன தனதன
          தனத்த தானன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

பெருக்க மாகிய நிதியினர் வரின்மிக
     நகைத்து வாமென அமளிய ருகுவிரல்
          பிடித்து போயவர் தொடையொடு தொடைபட ...... வுறவாடிப்

பிதற்றி யேயள விடுபண மதுதம
     திடத்தி லேவரு மளவுந லுரைகொடு
          பிலுக்கி யேவெகு சரசமொ டணைகுவர் ...... கனமாலாய்

முருக்கி னேரித ழமுதுப ருகுமென
     வுரைத்து லீலைக ளதிவித மொடுமலை
          முலைக்கு ளேதுயில் கொளமயல் புரிகுவர் ...... பொருள்தீரின்

முறுக்கி யேயுதை கொடுவசை யுரைதரு
     மனத்து ரோகிக ளிடுதொழில் வினையற
          முடுக்கி யேயுன திருகழல் மலர்தொழ ...... அருள்தாராய்

நெருக்கி யேவரு மவுணர்கள் குலமற
     வுறுக்கி யேமயில் முதுகினில் விசைகொடு
          நிலத்தி லேசமர் பொருதவ ருயிர்பலி ...... கொளும்வேலா

நெகத்தி லேஅயன் முடிபறி யிறைதிரி
     புரத்தி லேநகை புரிபர னடியவர்
          நினைப்பி லேயருள் தருசிவ னுதவிய ...... புதல்வோனே

செருக்கு வேடுவர் தருமொரு சிறுமியை
     மருக்கு லாவிய மலரணை மிசைபுணர்
          திருக்கை வேல்வடி வழகிய குருபர ...... முருகோனே

சிறக்கு மாதவ முனிவரர் மகபதி
     யிருக்கு வேதனு மிமையவர் பரவிய
          திருக்கு ராவடி நிழல்தனி லுலவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

பெருக்கமாகிய நிதியினர் வரின் மிக நகைத்து வாம் என
அமளி அருகு விரல் பிடித்து போய் அவர் தொடையோடு
தொடை பட உறவாடி
... திரண்டு பெருகியுள்ள செல்வத்தை
உடையவர்கள் தம்மிடம் வந்தால், மிகவும் சிரிப்புடன் வாருங்கள் என்று
படுக்கை அருகில் (வந்தவரின்) விரலைப் பிடித்து (அழைத்துக் கொண்டு)
போய் அவர் தொடை தம் தொடை மீது நெருங்கிப் பட, உறவு
மொழிகளைப் பேசி விளையாடி,

பிதற்றியே அளவிடு பணம் அது தமது இடத்திலே வரும்
அளவு நல் உரை கொ(ண்)டு பிலுக்கியே வெகு சரசமோடு
அணைகுவர்
... பல அன்பு மொழிகளைப் பிதற்றி தாம் கணக்கு
வைத்திருந்த பணம் முழுதும் தம் வசம் வந்து சேரும் வரை நல்ல
இன்பமான வார்த்தைகளால் பகட்டுப் பேச்சுக்களைப் பேசி மிக்க
சல்லாபத்துடன் அணைவார்கள்.

கன மாலாய் முருக்கி நேர் இதழ் அமுது பருகும் என
உரைத்து லீலைகள் அதி விதமொடு மலை முலைக்கு(ள்)ளே
துயில் கொள மயல் புரிகுவர்
... பெருத்த அன்பு பூண்டவர்கள் போல
முருக்கம் பூவைப் போல் சிவந்த வாயிதழ் ஊறலை உண்ணும் என்று கூறி,
காம லீலைகளில் பல விதங்கள் காட்டி மலை போல் பருத்த
மார்பகங்களின் மீது சாய்ந்து கொள்ளும்படி மயக்கம் ஊட்டுபவர்.

பொருள் தீரின் முறுக்கியே உதை கொடு வசை உரை தரு
மனத் துரோகிகள் இடு தொழில் வினை அற முடுக்கியே
உனது இரு கழல் மலர் தொழ அருள் தாராய்
... பொருள்
தீர்ந்துபோன பிறகு, முறுக்கும் திருப்புமாய் கோபக் குறி காட்டி உதையும்
உதைத்து வசை மொழிகளைப் பேசும் நன்றி கெட்டவர்கள் ஆகிய
விலைமாதர்களின் ஆணையால் செய்யும் செயல்களில் ஈடுபடும் கருத்து
அற்றுப் போக, என்னைத் திருப்பி உனது இரண்டு திருவடி மலர்களைத்
தொழும்படியாக திருவருளைத் தந்து அருள்வாய்.

நெருக்கியே வரும் அவுணர்கள் குலம் அற உறுக்கியே மயில்
முதுகினில் விசை கொடு நிலத்திலே சமர் பொருது அவர்
உயிர் பலி கொளும் வேலா
... நெருங்கி வந்த அசுரர்களின் கூட்டம்
அழிபடக் கோபித்து, மயிலின் முதுகில் வேகமாய் வந்து, இந்தப் பூமியில்
போர் செய்தவர்களாகிய அந்த அசுரர்களின் உயிரைப் பலி கொண்ட
வேலனே,

நெகத்திலே அயன் முடி பறி இறை திரி புரத்திலே நகை புரி
பரன் அடியவர் நினைப்பிலே அருள் தரு சிவன் உதவிய
புதல்வோனே
... கைந்நகத்தால் பிரமனுடைய தலையை கிள்ளிப் பறித்த
இறைவன், திரிபுரத்தில் (தீயெழச்) சிரித்த பரமன், அடியவர் நினைத்தாலே
அருள் பாலிக்கும் சிவ பெருமான் பெற்ற பிள்ளையே.

செருக்கு வேடுவர் தரும் ஒரு சிறுமியை மருக் குலாவிய மலர்
அணை மிசை புணர் திருக் கை வேல் வடிவு அழகிய குருபர
முருகோனே
... அகந்தை கொண்ட வேடர்கள் வளர்த்த ஒப்பற்ற
வள்ளியை நறு மணம் வீசும் மலர்ப் படுக்கையின் மேல் அணைந்த,
திருக்கை வேலுடன் திருவுருவம் அழகுள்ள குருபரனே, முருகனே,

சிறக்கு மா தவ முனிவரர் மக பதி இருக்கு வேதனும்
இமையவர் பரவிய திருக் குரா அடி நிழல் தனில் உலவிய
பெருமாளே.
... சிறப்புற்ற மகா தவசிகளும் இந்திரனும் ரிக்வேதம் வல்ல
பிரமனும் தேவர்களும் போற்றிப் பரவும் திருக் குரா மரத்தின் அடி நிழலில்
(திருவிடைக்கழியில்*) விளங்கிப் பொலியும் பெருமாளே.


* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே
திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு
வீற்றிருக்கிறான்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.927  pg 2.928  pg 2.929  pg 2.930 
 WIKI_urai Song number: 801 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 797 - perukka mAgiya (thiruvidaikkazhi)

perukka mAkiya nithiyinar varinmika
     nakaiththu vAmena amaLiya rukuviral
          pidiththu pOyavar thodaiyodu thodaipada ...... vuRavAdip

pithatRi yEyaLa vidupaNa mathuthama
     thidaththi lEvaru maLavuna luraikodu
          pilukki yEveku sarasamo daNaikuvar ...... kanamAlAy

murukki nEritha zhamuthupa rukumena
     vuraiththu leelaika Lathivitha modumalai
          mulaikku LEthuyil koLamayal purikuvar ...... poruLtheerin

muRukki yEyuthai koduvasai yuraitharu
     manaththu rOkika Liduthozhil vinaiyaRa
          mudukki yEyuna thirukazhal malarthozha ...... aruLthArAy

nerukki yEvaru mavuNarkaL kulamaRa
     vuRukki yEmayil muthukinil visaikodu
          nilaththi lEsamar poruthava ruyirpali ...... koLumvElA

nekaththi lEayan mudipaRi yiRaithiri
     puraththi lEnakai puripara nadiyavar
          ninaippi lEyaruL tharusiva nuthaviya ...... puthalvOnE

serukku vEduvar tharumoru siRumiyai
     marukku lAviya malaraNai misaipuNar
          thirukkai vElvadi vazhakiya gurupara ...... murukOnE

siRakku mAthava munivarar makapathi
     yirukku vEthanu mimaiyavar paraviya
          thirukku rAvadi nizhalthani lulaviya ...... perumALE.

......... Meaning .........

perukkamAkiya nithiyinar varin mika nakaiththu vAm ena amaLi aruku viral pidiththu pOy avar thodaiyOdu thodai pada uRavAdi: When people with a lot of wealth seek their company, they receive them with a broad smile, lead them to their bed holding their fingers, copulate with them so intimately that their thighs rub each other and play with them inventing many a relationship;

pithatRiyE aLavidu paNam athu thamathu idaththilE varum aLavu nal urai ko(N)du pilukkiyE veku sarasamOdu aNaikuvar: they babble sweet nothings into their ears, and until such time as their precalculated amount due for their services is received, they keep on engaging them in pleasant conversation, talking bombastically and hugging them with utmost intimacy;

kana mAlAy murukki nEr ithazh amuthu parukum ena uraiththu leelaikaL athi vithamodu malai mulaikku(L)LE thuyil koLa mayal purikuvar: as if they are in deep love, they offer the saliva oozing in their mouth, red like the murukkam (palas) flower, perform many erotic acts and tantalisingly ask their suitors to rest their heads on their mountain-like bosom;

poruL theerin muRukkiyE uthai kodu vasai urai tharu manath thurOkikaL idu thozhil vinai aRa mudukkiyE unathu iru kazhal malar thozha aruL thArAy: once the source of income dries up, they revolt with a jerk, showing signs of anger, kick them hard and use abusive words to turn them away; to put an end to my running errands for such ungrateful whores, kindly turn me inside out and bless me to worship Your hallowed lotus feet, Oh Lord!

nerukkiyE varum avuNarkaL kulam aRa uRukkiyE mayil muthukinil visai kodu nilaththilE samar poruthu avar uyir pali koLum vElA: When the multitude of demons closed in confrontingly, You destroyed them in a fit of rage; mounting the peacock and rushing to the battlefield, You took the lives of all the demons on this earth who came to fight, Oh Lord with the Spear!

nekaththilE ayan mudi paRi iRai thiri puraththilE nakai puri paran adiyavar ninaippilE aruL tharu sivan uthaviya puthalvOnE: He is the Lord who plucked the head of Brahma with His nail; He is the Supreme One who burnt down Thiripuram by His laugh; He is Lord SivA who bestows His grace upon His devotees upon their mere contemplation, and You are His Son, Oh Lord!

serukku vEduvar tharum oru siRumiyai maruk kulAviya malar aNai misai puNar thiruk kai vEl vadivu azhakiya gurupara murukOnE: She is VaLLi, the matchless damsel reared by the proud hunters; You hugged her on the fragrant flowery bed! Oh Great Master, You have a handsome figure with the spear adorning Your hallowed hand, Oh MurugA!

siRakku mA thava munivarar maka pathi irukku vEthanum imaiyavar paraviya thiruk kurA adi nizhal thanil ulaviya perumALE.: The highly venerable sages known for their penance, Indra, Brahma who is well-versed in RigvEdA and all the celestials praise You and worship You as You are seated majestically under the kurA tree (in Thiruvidaikkazhi*), Oh Great One!


* Thiruvidaikkazhi is 17 miles southeast of MayilAduthurrai (MAyUram) - near Thirukkadaiyur.
Murugan is cosily seated under a KurA tree in this place.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 797 perukka mAgiya - thiruvidaikkazhi

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]