திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 796 பழியுறு சட்டகமான (திருவிடைக்கழி) Thiruppugazh 796 pazhiyuRusattagamAna (thiruvidaikkazhi) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதனனத் தனதான தனதனனத் தனதான தனதனனத் தனதான ...... தனதான ......... பாடல் ......... பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான பகரும்வினைச் செயல்மாதர் ...... தருமாயப் படுகுழிபுக் கினிதேறும் வழிதடவித் தெரியாது பழமைபிதற் றிடுலொக ...... முழுமூடர் உழலும்விருப் புடனோது பலசவலைக் கலைதேடி யொருபயனைத் தெளியாது ...... விளியாமுன் உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற உனதுதிருப் புகழோத ...... அருள்வாயே தெழியுவரிச் சலராசி மொகுமொகெனப் பெருமேரு திடுதிடெனப் பலபூதர் ...... விதமாகத் திமிதிமெனப் பொருசூர னெறுநெறெனப் பலதேவர் ஜெயஜெயெனக் கொதிவேலை ...... விடுவோனே அழகுதரித் திடுநீப சரவணவுற் பவவேல அடல்தருகெற் சிதநீல ...... மயில்வீரா அருணைதிருத் தணிநாக மலைபழநிப் பதிகோடை அதிபஇடைக் கழிமேவு ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... பழியுறுசட் டகமான குடிலையெடுத் திழிவான ... பழி பாவங்களுக்கு இருப்பிடமான உடலாகிய இந்தக் குடிசையை எடுத்து இழிவான சொற்களை பகரும்வினைச் செயல்மாதர் தருமாயப் ... சொல்லும் செயல்களை உடைய மாதர்கள் தருகின்ற மாயமான படுகுழிபுக்கு இனிது ஏறும் வழிதடவித் தெரியாது ... படுகுழியில் வீழ்ந்து நல்லபடியாக கரையேறும் வழி உண்டோ என்று தடவிப் பார்த்தும் தெரியாமல், பழமை பிதற்றிடு லோக முழுமூடர் ... பழங்கொள்கைகளையே ஆராயாமல் பிதற்றும் இவ்வுலக முழுமூடர்கள் உழலும்விருப்புடனோது பலசவலைக் கலைதேடி ... திருந்து விருப்பமுடன் ஓதும் பல குழப்பம்தரும் நூல்களைத் தேடி ஒருபயனைத் தெளியாது விளியாமுன் ... ஒரு பயனையும் தெளிந்து அறியாமல் இறப்பதன்முன்பு, உனகமலப் பதநாடி யுருகியுளத் தமுதூற ... உன் தாமரைப் பாதங்களை விரும்பி உருகி, உள்ளத்தில் பக்திரசம் அமுதமாக ஊற உனதுதிருப் புகழோத அருள்வாயே ... உன் திருப்புகழை ஓதுவதற்கு அருள்வாயாக. தெழியுவரிச் சலராசி மொகுமொகென ... முழங்கும் உப்புக் கடல் மொகு மொகு என்று கொந்தளிக்கவும், பெருமேரு திடுதிடென ... பெரிய மேருமலை திடு திடு என்று பொடிபட்டு இடிபடவும், பலபூதர் விதமாகத் திமிதிமென ... பலவகை பூதகணங்கள் விதவிதமாக திமிதிமி என்று கூத்தாடவும், பொருசூர னெறுநெறென ... சண்டையிட்ட சூரன் மாமர உருவில் இருந்து நெறுநெறு என்று முறிந்து விழவும், பலதேவர் ஜெயஜெயென ... பல தேவர்களும் ஜெய ஜெய என்று வெற்றி கோஷம் இடவும், கொதிவேலை விடுவோனே ... கோபித்து எழுந்த வேலாயுதத்தைச் செலுத்தியவனே, அழகுதரித் திடுநீப ... அழகு நிறைந்திட்ட கடப்பமாலையை அணிந்தவனே, சரவணவுற் பவவேல ... சரவணப்பொய்கையில் தோன்றியவனே, வேலனே, அடல்தருகெற்சிதநீல மயில்வீரா ... வெற்றியைத் தருவதும், முழங்கி ஒலிப்பதும் நீல நிறமானதுமான மயில் வாகனத்தில் ஏறும் வீரனே, அருணைதிருத்தணிநாக மலைபழநிப் பதி ... திருவண்ணாமலை, திருத்தணிகை, திருச்செங்கோடு, பழநிநகர், கோடை அதிபஇடைக் கழிமேவு பெருமாளே. ... வல்லக்கோட்டை ஆகிய தலங்களில் வாழும் தலைவனே, திருவிடைக்கழித் தலத்தில்* வீற்றிருக்கும் பெருமாளே. |
* திருவிடைக்கழி மாயூரத்திற்கு (மயிலாடுதுறைக்கு) 17 மைல் தென்கிழக்கே திருக்கடையூருக்கு அருகில் உள்ளது. இங்கு முருகன் குராமரத்தடியில் கொலு வீற்றிருக்கிறான். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.925 pg 2.926 WIKI_urai Song number: 800 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 796 - pazhiyuRu sattagamAna (thiruvidaikkazhi) pazhiyuRu sattagamAna kudilai yeduth izhivAna pagarum vinai seyal mAdhar ...... tharu mAya padukuzhik inidhERum vazhi thadavith theriyAdhu pazhamai pidhatridu lOka ...... muzhumUdar uzhalum virup puda nOdhu pala savalaik kalai thEdi oru payanaith theLiyAdhu ...... viLiyAmun una kamalp padha nAdi urugi uLath amudhURa unadhu thirup pugazh Odha ...... aruLvAyE thezhi uvarich jalarAsi mogu mogenap peru mEru dhiduthidena pala bUthar ...... vidhamAga dhimi dhimenap porusUra neRu neRenap pala dhEvar jeya jeyenak kodhi vElai ...... viduvOnE azhagu dharith thidu neepa saravaNa uRbava vEla adal tharu geRjitha neela ...... mayil veerA aruNai thiruththaNi nAgamalai pazhanip padhikOdai adhipa idaik kazhi mEvu ...... perumALE. ......... Meaning ......... pazhiyuRu sattagamAna kudilai yeduththu: The body is a cottage functioning as a seat for all sins. izhivAna pagarum vinai seyal mAdhar tharu mAya padukuzhi: Women with foul words and deeds set up treacherous traps for this body; inidhERum vazhi thadavith theriyAdhu: and not knowing the way out of those pits, people grope in the dark. pazhamai pidhatridu lOka muzhumUdar: Such stupid fools of this world talk only about their so-called old values; uzhalum virup puda nOdhu pala savalaik kalai thEdi: and roam about in search of many lustful and confusing books. oru payanaith theLiyAdhu viLiyAmun: Ultimately, they die without deriving any benefit whatsoever. Before I perish like them, una kamalp padha nAdi urugi uLath amudhURa: I seek Your lotus feet, melting in ecstasy, with the nectar of devotion gushing in my heart. unadhu thirup pugazh Odha aruLvAyE: Do bless me with the capacity to sing Your glory! thezhi uvarich jalarAsi mogu mogena: As the saline water in the ocean simmered, peru mEru dhiduthidena: as the large mount Meru rumbled and trembled, pala bUthar vidhamAga dhimi dhimena: as various bhUthAs (SivA's armies) severally jumped about and rejoiced, porusUra neRu neRena: as the warring SUran (in the disguise of a mango tree) began to crack and collapse, pala dhEvar jeya jeyena: and as the numerous celestials hailed Your victory, kodhi vElai viduvOnE: You flung the red hot Spear! azhagu dharith thidu neepa: You are adorned with the beautiful kadappa garland! saravaNa uRbava vEla: You emerged from the Pond of SaravaNa! Oh VElA! adal tharu geRjitha neela mayil veerA: You mount valorously on the blue Peacock, roaring triumphantly! aruNai thiruththaNi nAgamalai pazhanip padhikOdai adhipa: ThiruvaNNAmalai, ThiruththaNigai, ThiruchchengkOdu, Pazhani and VallakkOttai are some of the places under Your reign! idaik kazhi mEvu perumALE.: You love to reside at Thiruvidaikkazhi, Oh Great One! |
* Thiruvidaikkazhi is 17 miles southeast of MayilAduthurrai (MAyUram) - near Thirukkadaiyur. Murugan is cosily seated under a KurA tree in this place. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |