திருப்புகழ் 789 ஆடல் மாமத ராஜன்  (பாகை)
Thiruppugazh 789 AdalmAmadharAjan  (pAgai)
Thiruppugazh - 789 AdalmAmadharAjan - pAgaiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தானன தானம், தான தானன தானம்
     தான தானன தானம் ...... தனதான

......... பாடல் .........

ஆடல் மாமத ராஜன் பூசல் வாளியி லேநொந்
     தாகம் வேர்வுற மால்கொண் ...... டயராதே

ஆர வாணகை யார்செஞ் சேலி னேவலி லேசென்
     றாயு வேதனை யேயென் ...... றுலையாதே

சேடன் மாமுடி மேவும் பாரு ளோர்களுள் நீடுந்
     த்யாக மீபவர் யாரென் ...... றலையாதே

தேடி நான்மறை நாடுங் காடு மோடிய தாளுந்
     தேவ நாயக நானின் ...... றடைவேனோ

பாடு நான்மறை யோனுந் தாதை யாகிய மாலும்
     பாவை பாகனு நாளும் ...... தவறாதே

பாக நாண்மலர் சூடுஞ் சேக ராமதில் சூழ்தென்
     பாகை மாநக ராளுங் ...... குமரேசா

கூட லான்முது கூனன் றோட வாதுயர் வேதங்
     கூறு நாவல மேவுந் ...... தமிழ்வீரா

கோடி தானவர் தோளுந் தாளும் வீழவு லாவுங்
     கோல மாமயி லேறும் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

ஆடல் மா மத ராஜன் பூசல் வாளியிலே நொந்து ... காம
லீலைகளை விளைவிக்கும் சிறந்த மன்மதன் காமப் போரில் செலுத்தும்
(மலர்ப்) பாணங்களால் மனம் நொந்து,

ஆகம் வேர்வுற மால் கொண்டு அயராதே ... உடல் வேர்வை வர
மோகம் கொண்டு தளராமலும்,

ஆரம் வாள் நகையார் செம் சேலின் ஏவலிலே சென்று
ஆயு(ள்) வேதனையே என்று உலையாதே
... முத்துப் போன்ற
ஒளி வீசும் பற்களை உடைய விலைமாதரது சிவந்த சேல் மீன் போன்ற
கண்களின் கட்டளைப்படி கீழ்ப்படிந்து ஆயுட் காலம் வரையில் துன்பமே
என்னும்படி நிலை குலையாமலும்,

சேடன் மா முடி மேவும் பார் உ(ள்)ளோர்களுள் நீடும்
த்யாகம் ஈபவர் யார் என்று அலையாதே
... ஆதிசேஷனின் பெரிய
பணாமுடியின் மேல் தாங்கப்படுகின்ற இந்தப் பூமியில் உள்ளவர்களுள்
பெரிய கொடை வள்ளல்கள் யார் யார் என்று தேடி அலையாமலும்,

தேடி நான் மறை நாடும் காடும் ஓடிய தாளும் தேவ நாயக
நான் இன்று அடைவேனோ
... நான்கு வேதங்களும் தேடி
நாடுகின்றனவும், (வள்ளியைத் தேடிக்) காட்டில் ஓடி அலைந்தனவுமான
உனது திருவடிகளை தேவ நாயகனே, யான் என்று அடையப்
பெறுவேனோ?

பாடு நான் மறையோனும் தாதை ஆகிய மாலும் பாவை
பாகனும் நாளும் தவறாதே
... நான்கு வேதங்களும் பாடுகின்ற
பிரமனும், (அவனுக்குத்) தகப்பனாகிய திருமாலும், பார்வதி என்ற
பெண்ணொரு பாகனாம் சிவபெருமானும், நாள் தோறும் தவறாமல்,

பாக நாள் மலர் சூடும் சேகரா ... பக்குவமாக அன்று அலர்ந்த
மலர்களைச் சூட்டுகின்ற திருமுடியை உடையவனே,

மதில் சூழ் தென் பாகை மா நகர் ஆளும் குமரேசா ... கோட்டை
மதில்கள் சூழ்ந்த அழகிய பாகை* நகரில் வீற்றிருக்கும் குமரேசனே,

கூடலான் முது கூன் அன்று ஓட வாது உயர் வேதம் கூறு(ம்)
நாவல மேவும் தமிழ் வீரா
... மதுரைப் பதி அரசனின் (கூன்
பாண்டியனின்) கூன் அன்று தொலையும்படி, (சமணரோடு) வாதம்
செய்த, உயர்ந்த வேதப் பொருள் கொண்ட தேவாரப் பாடல்களைப் பாடிய
(திருஞானசம்பந்தராகிய) நாவன்மை மிக்க தமிழ் வீரனே,

கோடி தானவர் தோளும் தாளும் வீழ உலாவும் கோல மா
மயில் ஏறும் பெருமாளே.
... பல கோடி அசுரர்கள் கைகளும்
கால்களும் அற்று விழும்படியாக, வெற்றி உலாச் செய்யும் அழகிய சிறந்த
மயில் ஏறும் பெருமாளே.


* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள பாகசாலை என்னும் தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.911  pg 2.912 
 WIKI_urai Song number: 793 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 789 - Adal mAmadha rAjan (pAgai)

Adal mAmatha rAjan pUsal vALiyi lEnon
     thAkam vErvuRa mAlkoN ...... dayarAthE

Ara vANakai yArsenj chEli nEvali lEsen
     RAyu vEthanai yEyen ...... RulaiyAthE

sEdan mAmudi mEvum pAru LOrkaLuL needun
     thyAka meepavar yAren ...... RalaiyAthE

thEdi nAnmaRai nAdung kAdu mOdiya thALun
     thEva nAyaka nAnin ...... RadaivEnO

pAdu nAnmaRai yOnun thAthai yAkiya mAlum
     pAvai pAkanu nALum ...... thavaRAthE

pAka nANmalar chUdum sEka rAmathil chUzhthen
     pAkai mAnaka rALung ...... kumarEsA

kUda lAnmuthu kUnan ROda vAthuyar vEthang
     kURu nAvala mEvun ...... thamizhveerA

kOdi thAnavar thOLun thALum veezhavu lAvung
     kOla mAmayi lERum ...... perumALE.

......... Meaning .........

Adal mA matha rAjan pUsal vALiyilE nonthu: Suffering from the flowery arrows shot by the great Manmathan (God of Love) who wages a war by provoking carnal desire,

Akam vErvuRa mAl koNdu ayarAthE: I do not want to languish in lust with a perspiring body;

Aram vAL nakaiyAr sem sElin EvalilE senRu Ayu(L) vEthanaiyE enRu ulaiyAthE: I do not want to feel miserable being sentenced for life running errands for whores with flashy teeth like pearls and reddish eyes like the sEl fish;

sEdan mA mudi mEvum pAr u(L)LOrkaLuL needum thyAkam eepavar yAr enRu alaiyAthE: I do not want to roam about in search of those who would be the greatest benefactors among the people on this earth which is supported upon the large hood of the serpent, AdhisEshan; instead,

thEdi nAn maRai nAdum kAdum Odiya thALum thEva nAyaka nAn inRu adaivEnO: Oh Leader of the Celestials, when will I be able to attain Your hallowed feet sought by the four VEdAs, which feet ran around in the forest in search of VaLLi?

pAdu nAn maRaiyOnum thAthai Akiya mAlum pAvai pAkanum nALum thavaRAthE: Without fail, everyday, BrahmA whose glory is sung by the four VEdAs, His father, Lord VishNu and Lord SivA, in whose body DEvi PArvathi is concorporate,

pAka nAL malar chUdum sEkarA: offer You freshly blossomed flowers to adorn Your hair, Oh Lord!

mathil chuzh then pAkai mA nakar ALum kumarEsA: Oh Lord KumarA, You have Your abode in the beautiful town PAgai*, surrounded by fortress walls!

kUdalAn muthu kUn anRu Oda vAthu uyar vEtham kURu(m) nAvala mEvum thamiz veerA: You straightened the hunch-back of Pandya King in Madhurai; You successfully debated with the camaNAs and sang (as ThirugnAna Sambandhar) the ThEvaram hymns that contain the core of the lofty vEdAs, Oh valorous Tamil poet with great eloquence!

kOdi thAnavar thOLum thALum veezha ulAvum kOla mA mayil ERum perumALE.: Millions of demons were destroyed, with their arms and legs severed, while You mounted Your beautiful peacock and strolled about, Oh Great One!


* PAgai is now known as PAgasAlai, a coastal town near MayilAduthuRai - MAyUram.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 789 Adal mAmadha rAjan - pAgai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]