பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/912

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகை) திருப்புகழ் உரை 353 LIITCUN55. 793. காமலிலைகளை விளைக்கும் சிறந்த மன்மத ராஜனுடைய காமப்போரிற் செலுத்தப்படுகின்ற (மலர்ப்) பாணங்களாலே மனம் நொந்து, உடலில் வேர்வை வர மோகங்கொண்டு தளராமலும். வளிவீ (ஆரம்) ந்கப்போன் சும் பற்களை உடைாேம் து) கேளிே செவ்விய }ன் போன்ற கண்களின் கட்டளைக்கு இணங்கிச் சென்று ஆள்காலம் வரையில் துன்பமே என்னும்படி நிலைகுல்ைந் தழியாமலும் ஆதிசேடனுடைய சிறந்த முடிகளின்மேல் தாங்கப்படுகின்ற (இந்தப்) பூமியில் உள்ளவர்களுள், பெருகிய கொடை கொடுப்பவர் (பேர் சிறந்த கொடையாளிகள்) யார் யார் என்று தேடி அலையாமலும். தேடி நான்கு வேதங்களும் நாடுகின்றதும், (வள்ளியின்) தினைப்புனக் காட்டில் ஒடி அலைந்ததுமான - உனது திருவடிகளை தேவநாயகனே! நான் இன்று அடையப் பெறுவேனோ! பாடுகின்ற நான்கு மறைகளும் வல்ல பிரமாவும், அவனுக்குத் தந்தையாகிய திருமாலும், பெண்ணொரு பாகனாம் சிவனும், நாள்தோறும் தவறாமல். பக்குவமாப் அன்று மலர்ந்ததான மலர்களைச் சூட்டுகின்ற (சேகரனே) திருமுடியை உன்டயவனே! மதில்கள் சூழ்ந்த அழகிய பாகை மாநகரில் வீற்றிருந்தருளும் குமர்ேசனே! மதுரைப்பதியரசன் (கூன் பாண்டியனுடைய) நெடுநாள்ாயிருந்த் கூன் அன்று தொலைந்து (முதுகு) நிமிரும்படி, (சமணரொடு) செய்த வாது சம்பந்தம்ாய் உயர்ந்த வேதப்பொருள் கொண்ட ழ்ப் பாடல்களைப் பாடின நாவின் வெற்றிபெற்ற தமிழ் வீரனே! கோடிக்கணக்கான அசுரர்களின் கையும் காலும் அற்றுவிழ உலவின பெருமாளே! அழகிய சிறந்த மயிலேறும் பெருமாளே! (தாள்....அடைவேனோ)