திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 790 ஈளை சுரங்குளிர் (பாகை) Thiruppugazh 790 eeLaisurangkuLir (pAgai) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தான தனந்தன தான தனந்தன தான தனந்தன ...... தனதான ......... பாடல் ......... ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற ...... இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ...... ரிழவாதே மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் ...... முழுகாதே மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி ...... மொழிவாயே வாளை நெருங்கிய வாவியி லுங்கயல் சேல்கள் மறிந்திட ...... வலைபீறா வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள ...... மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கடல் ...... கழிபாயும் பாகை வளம்பதி மேவி வளஞ்செறி தோகை விரும்பிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் ... கோழை, காய்ச்சல், குளிர், வாதம் என்ற பல நோய்கள் வளைந்தற இளையாதே ... என்னைச் சூழ்ந்து நான் மிகவும் இளைப்பு அடையாமல், ஈடுபடுஞ் சிறு கூடு புகுந்து ... வலிமையை இழந்து துன்பமடையும் சிறிய கூடாகிய இவ்வுடலில் புகுந்து இடுகாடு பயின்று உயிர் இழவாதே ... சுடுகாட்டிற்குச் சேரும்படி உயிரை இழக்காமல், மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் ... மூளை, எலும்புகள், நாடிகள், நரம்புகள் வேறு படுந்தழல் முழுகாதே ... இவையெல்லாம் வெவ்வேறாகும்படி நெருப்பில் மூழ்கி வேகாமல், மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் ... மூலப்பொருளான சிவயோக பதவியில் வாழ்வு பெறும்படி மொழிவாயே ... நான் வாழ்வுபெறும்படியாக உபதேசித்தருள்வாயாக. வாளை நெருங்கிய வாவியிலும் ... வாளை மீன்கள் தமக்கு அருகில் உள்ள குளத்தில் இருக்கும் கயல் சேல்கள் மறிந்திட வலைபீறா ... கயல் சேல் மீன்கள் இவற்றை விரட்டி, வலைகளைக் கிழித்து, வாகை துதைந்து அணி கேதகை மங்கிட மோதி வெகுண்டு ... வெற்றி கொண்டாடி, வரிசையாக இருந்த தாழம்பூக்கள் உருக்குலையும்படி அவற்றை மோதிக் கோபிக்க, இள மதிதோயும் பாளை நறுங்கமழ் பூக வனம் ... பிறைச்சந்திரன் படியும் உயரமான பாளைகளைக் கொண்ட நறுமணம் கமழும் கமுக மரக்காட்டில் தலைசாடி நெடுங்கடல் கழிபாயும் ... அந்த மீன்கள் உச்சியில் சாடி, பெரிய கடலின் உப்பங்கழியில் பாயும், பாகை வளம்பதி மேவி ... பாகை* என்ற வளமான தலத்தில் வீற்றிருந்து, வளஞ்செறி தோகை விரும்பிய பெருமாளே. ... வளப்பம் நிறைந்த தோகைமயிலான வள்ளியை விரும்பிய பெருமாளே. |
* பாகை மாயூரத்திற்கு அருகே கடற்கரையை ஒட்டி உள்ள 'பாகசாலை' என்னும் தலம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.913 pg 2.914 WIKI_urai Song number: 794 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 790 - eeLai surangkuLir (pAgai) eeLai surang kuLir vAdha menum pala nOygaL vaLaindhaRa ...... iLaiyAdhE eedu padunj siRu kUdu pugundhidu kAdu payindruyir ...... izhavAdhE mULai elumbugaL nAdi narambugaL vERu padun thazhal ...... muzhugAdhE mUla menum siva yOga padhan thanil vAzhvu peRumpadi ...... mozhivAyE vALai nerungiya vAviyi lung kayal sElgaL maRindhida ...... valai peeRA vAgai thudhain dhaNi kEthakai mangida mOdhi veguNdiLa ...... madhithOyum pALai narung kamazh pUga vananthalai sAdi nedung kadal ...... kazhipAyum pAgai vaLampadhi mEvi vaLancheRi thOgai virumbiya ...... perumALE. ......... Meaning ......... eeLai surang kuLir vAdha menum pala nOygaL: Many diseases like the mucus in the lungs, fever, chillness, rheumatism etc., vaLaindhaRa iLaiyAdhE: have afflicted my body and made me debilitated; eedu padunj siRu kUdu pugundhu: these diseases enter this little shell of my miserable body idukAdu payindruyir izhavAdhE: leading me to the cremation ground. I do not want to lose my life like that nor do I want mULai elumbugaL nAdi narambugaL: my brain, bones, veins and nerves vERu padun thazhal muzhugAdhE: to be thrown apart and consumed by fire. Instead, mUla menum siva yOga padhan thanil vAzhvu peRumpadi mozhivAyE: I want to attain the status of Siva-yOgA, which is the Fundamental Principle; kindly teach me the way! vALai nerungiya vAviyi lung kayal sElgaL maRindhida valai peeRA vAgai thudhaindhu: The VALai fish enter the adjacent tanks and drive away the other fish like kayal and sEl; they tear apart the fishing nets and proclaim victory; aNi kEthakai mangida mOdhi veguNdu: they collide fiercely with the neat rows of thAzhai flowers and bend them out of shape; iLa madhithOyum pALai narung kamazh pUga vananthalai sAdi: they jump up to the top of the fragrant betelnut trees whose tall branches serve as the resting place for the crescent moon; and nedung kadal kazhipAyum: finally they leap into the backwaters of the sea pAgai vaLampadhi mEvi: in this fertile place, PAgai*, which is Your abode, vaLancheRi thOgai virumbiya perumALE.: and where You sought the robust peacock-like belle, VaLLi, Oh Great One! |
* PAgai is known as PAgasAlai, close to the seashore near MAyUram. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |