பக்கம்:முருகவேள் பன்னிரு திருமுறை-2.pdf/913

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

354 முருகவேள் திருமுறை 17ஆம் திருமுறை 794. சிவயோகபதம் பெற தான தனந்தன தான தனந்தன தான தனந்தன தனதான ஈளை சுரங்குளிர் வாத மெனும்பல நோய்கள் வளைந்தற இளையாதே ஈடு படுஞ்சிறு கூடு புகுந்திடு காடு பயின்றுயி ரிழவாதே. மூளை யெலும்புகள் நாடி நரம்புகள் வேறு படுந்தழல் முழுகாதே. மூல மெனுஞ்சிவ யோக பதந்தனில் வாழ்வு பெறும்படி மொழிவாயே, *வாளை 'ேi'iம லுங்கயல் ழி சேல்கள் மறிந்திட வலைபீறா. வாகை துதைந்தணி கேதகை மங்கிட மோதி வெகுண்டிள மதிதோயும், பாளை நறுங்கமழ் பூக வனந்தலை சாடி நெடுங்கட்ல் கழிபாயும். பாகை வளம்பதி மேவி வளஞ்செறி t தோகை விரும்பிய பெருமாளே.(2) 795. மவுனம் உற தனண தனதன தனண தனதன தான தானன தனதான குவளை பொருதிரு குழையை முடுகிய கோல வேல்விழி மடவார்தங். கொடிய ம்ருகமத புளக தனகிரி கூடி நாடொறு மயலாகித் துவள வுருகிய சரச விதமது சோர வாரிதி யலையூடே

  • வாளையின் பராக்ரமத்தைக் கூறுகின்றன 5 - 7 அடிகள்:

இவ்வடிகளின் கருத்து 272ஆம் பாடலின் 5-7 அடிகளின் கருத்தை ஒக்கும். 1 தோகை 793 ஆம் பாடலில் கோலமா மயில் ஏறும் பெருமாளே” என்றதனால் இங்கும் தோகை என்பதற்கு மயில் எனவும் பொருள் கொள்ளப்பட்டது.