திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 788 அமுதினை மெத்த (மாயூரம்) Thiruppugazh 788 amudhinaimeththa (mAyUram) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன தனதன தத்தத் தனந்த தானன ...... தனதான ......... பாடல் ......... அமுதினை மெத்தச் சொரிந்து மாவின தினியப ழத்தைப் பிழிந்து பானற வதனொடு தித்தித் தகண்ட ளாவிய ...... விதழாராய் அழகிய பொற்றட் டினொண்டு வேடையின் வருபசி யர்க்குற் றவன்பி னாலுண வருள்பவ ரொத்துத் தளர்ந்த காமுகர் ...... மயல்தீரக் குமுதம் விளர்க்கத் தடங்கு லாவிய நிலவெழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண ...... தனபாரக் குவடிள கக்கட் டியுந்தி மேல்விழு மவர்மய லிற்புக் கழிந்த பாவியை குரைகழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வுற ...... அருள்வாயே வமிசமி குத்துப் ப்ரபஞ்சம் யாவையு மறுகிட வுக்ரக் கொடும்பை யானபுன் மதிகொட ழித்திட் டிடும்பை ராவணன் ...... மதியாமே மறுவறு கற்பிற் சிறந்த சீதையை விதனம்வி ளைக்கக் குரங்கி னாலவன் வமிச மறுத்திட் டிலங்கு மாயவன் ...... மருகோனே எமதும லத்தைக் களைந்து பாடென அருளஅ தற்குப் புகழ்ந்து பாடிய இயல்கவி மெச்சிட் டுயர்ந்த பேறருள் ...... முருகோனே எழில்வளை மிக்கத் தவழ்ந்து லாவிய பொனிநதி தெற்கிற் றிகழ்ந்து மேவிய இணையிலி ரத்னச் சிகண்டி யூருறை ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... அமுதினை மெத்தச் சொரிந்து மாவினது இனிய பழத்தைப் பிழிந்து பால் நறவு அதனொடு தித்தித்த கண்டு அளாவிய இதழாராய் ... அமுதத்தை நிரம்ப ஊற்றி, மாமரத்தின் இனிப்பான பழத்தை அதனுடன் பிழிந்து, பாலும் அதனுடன் தேனையும் கலந்து கூட்டி, (அவையுடன்) தித்திக்கின்ற கற்கண்டையும் கலந்த அத்தனை சுவையுள்ள வாயிதழ் (ஊறலை) உடையவர்களாய், அழகிய பொன் தட்டில் நொண்டு வேடையின் வரு பசியார்க்கு உற்ற அன்பினால் உணவு அருள்பவர் ஒத்துத் தளர்ந்த காமுகர் மயல் தீர ... அழகான பொன் தட்டில் மொண்டு, காம நோயுடன் வருகின்ற மோகப் பசி உள்ளவர்கள் மேல் வைத்த அன்பினால் (அவர்கள்) உண்ணும்படி கொடுப்பவர்கள் போன்று இளைப்புள்ள காமிகளின் மோக மயக்கம் நீங்க, குமுதம் விளர்க்கத் தடம் குலாவிய நிலவு எழு முத்தைப் புனைந்த பாரிய குலவிய சித்ரப் ப்ரசண்ட பூரண தன பாரக் குவடு இளகக் கட்டி உந்தி மேல் விழும் ... (அதரபானத்தால்) வாய் வெளுத்த வேசையர்களின், இடம் பரந்த நிலவொளி வீசும் முத்து மாலையை அணிந்த, பருத்து விளங்கும், அழகுடன் மிக்கெழுந்த, நிறைந்த பாரமான மார்பாம் மலை இளகும்படி அணைத்து, வயிற்றின் மேல் விழுகின்ற அவர் மயலில் புக்கு அழிந்த பாவியை குரை கழல் பற்றிப் புகழ்ந்து வாழ்வு உற அருள்வாயே ... அந்த விலைமாதர்களின் மோக வலையில் பட்டு அழிந்த பாவியாகிய என்னை, ஒலிக்கும் கழல் அணிந்த திருவடியைப் பற்றிப் புகழ்ந்து நல் வாழ்வை அடைய அருள் செய்வாயாக. வமிசம் மிகுத்துப் ப்ரபஞ்சம் யாவையும் மறுகிட உக்ரக் கொடும்பையான புன் மதி கொடு அழித்திட்டு இடும்பை ராவணன் மதியாமே ... தன் குலத்தினர் பெருக, உலகம் எல்லாம் கலக்கமுற, மூர்க்கமும் கொடுமையும் நிறைந்த இழிவான புத்தியைக் கொண்டு அழிவு தரும் செயல்களைச் செய்து துன்பம் விளைவித்த ராவணன் சற்றும் பொருட்படுத்தாமல், மறு அறு கற்பில் சிறந்த சீதையை விதனம் விளைக்கக் குரங்கினால் அவன் வமிசம் அறுத்திட்டு இலங்கு மாயவன் மருகோனே ... குற்றம் அற்ற, கற்பில் மேம்பட்ட சீதைக்கு துக்கம் விளைவிக்க, குரங்குகளின் சேனையின் உதவியைக் கொண்டு அவனுடைய குலத்தை அறுத்து விளங்கும் (ராமனாம்) திருமாலின் மருகனே, எமது மலத்தைக் களைந்து பாடு என அருள அதற்குப் புகழ்ந்து பாடிய இயல் கவி மெச்சிட்டு உயர்ந்த பேறு அருள் முருகோனே ... என்னுடைய (ஆணவம், கன்மம், மாயை என்ற) மும்மலங்களையும் நீக்கி, பாடுவாயாக என்று நீ எனக்குத் திருவருள் பாலிக்க, அதன் படியே உன்னைப் புகழ்ந்து உழுவலன்புடன் பாடிய பாடல்களை விரும்பி மேலான பேற்றினை எனக்கு அருளிய முருகனே, எழில் வளை மிக்கத் தவழ்ந்து உலாவிய பொ(ன்)னி நதி தெற்கில் திகழ்ந்து மேவிய இணை இலி ரத்னச் சிகண்டி ஊர் உறை பெருமாளே. ... அழகிய சங்கு நிரம்பத் தவழ்ந்து உலாவுகின்ற காவிரி ஆற்றின் தெற்குக் கரையில் விளங்குகின்ற, ஒப்பு இல்லாத, ரத்தினமயமான மயிலாடு துறையில் வீற்றிருக்கும் பெருமாளே. |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.907 pg 2.908 pg 2.909 pg 2.910 WIKI_urai Song number: 792 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 788 - amudhinai meththa (mAyUram) amuthinai meththac chorinthu mAvina thiniyapa zhaththaip pizhinthu pAnaRa vathanodu thiththith thakaNda LAviya ...... vithazhArAy azhakiya potRat tinoNdu vEdaiyin varupasi yarkkut Ravanpi nAluNa varuLpava roththuth thaLarntha kAmukar ...... mayaltheerak kumuthamvi Larkkath thadamku lAviya nilavezhu muththaip punaintha pAriya kulaviya sithrap prasaNda pUraNa ...... thanapArak kuvadiLa kakkat tiyunthi mElvizhu mavarmaya liRpuk kazhintha pAviyai kuraikazhal patRip pukazhnthu vAzhvuRa ...... aruLvAyE vamisami kuththup prapanjam yAvaiyu maRukida vukrak kodumpai yAnapun mathikoda zhiththit tidumpai rAvaNan ...... mathiyAmE maRuvaRu kaRpiR chiRantha seethaiyai vithanamvi Laikkak kurangi nAlavan vamisa maRuththit tilangu mAyavan ...... marukOnE emathuma laththaik kaLainthu pAdena aruLA thaRkup pukazhnthu pAdiya iyalkavi mecchit tuyarntha pERaruL ...... murukOnE ezhilvaLai mikkath thavazhnthu lAviya poninathi theRkit Rikazhnthu mEviya iNaiyili rathnac chikaNdi yUruRai ...... perumALE. ......... Meaning ......... amuthinai meththac chorinthu mAvinathu iniya pazhaththaip pizhinthu pAl naRavu athanodu thiththiththa kaNdu aLAviya ithazhArAy: The saliva from their lips appears to be a concoction made by pouring nectar plentifully, adding to it the juice squeezed from sweet mango, blending milk and honey together and combining the sweet sugar-candy to top them all; azhakiya pon thattil noNdu vEdaiyin varu pasiyArkku utRa anpinAl uNavu aruLpavar oththuth thaLarntha kAmukar mayal theera: when their suitors, sick with passion, come to them with an amorous hunger, these women appear to come in with a golden plate filled with food which they offer to them ardently removing the weary lovers' obsessive delusion; kumutham viLarkkath thadam kulAviya nilavu ezhu muththaip punaintha pAriya kulaviya sithrap prasaNda pUraNa thana pArak kuvadu iLakak katti unthi mEl vizhum: The lips of the whores turn pale (due to excessive kissing); the copious and radiating string of pearls adorn their huge, beautiful, upright, stiff and mountain-like heavy breasts; hugging that bosom tightly as if to melt it and falling upon their belly, avar mayalil pukku azhintha pAviyai kurai kazhal patRip pukazhnthu vAzhvu uRa aruLvAyE: I have been ensnared in the net of those whores leading to my destruction; despite my being the worst sinner, kindly show me the path to the righteous life so that I can praise Your hallowed feet adorned with the jingling anklets, Oh Lord! vamisam mikuththup prapanjam yAvaiyum maRukida ukrak kodumpaiyAna pun mathi kodu azhiththittu idumpai rAvaNan mathiyAmE: Expanding his dynasty extensively and terrifying the rest of the people of the world, he carried out destructive acts with mean thoughts filled with ferocity and evil, causing distress to one and all; without any consideration whatsoever, that demon RAvaNan maRu aRu kaRpil chiRantha seethaiyai vithanam viLaikkak kuranginAl avan vamisam aRuththittu ilangu mAyavan marukOnE: harassed, and caused anguish to, SeethA DEvi, an embodiment of chastity who was without any blemish; that RAvanA's entire lineage was annihilated by RAmA, with the help of an army of monkeys; and You are the nephew of that Lord VishNU! emathu malaththaik kaLainthu pAdu ena aruLa athaRkup pukazhnthu pAdiya iyal kavi mecchittu uyarntha pERu aruL murukOnE: You removed all my three slags (arrogance, karma and delusion) and graciously commanded me to sing Your glory; accordingly, I praised You in my songs which You accepted with relish and granted me the greatest eminence, Oh Lord MurugA! ezhil vaLai mikkath thavazhnthu ulAviya po(n)ni nathi theRkil thikazhnthu mEviya iNai ili rathnac chikaNdi Ur uRai perumALE.: On the south bank of River KAvEri, which flows with a lot of beautiful conches floating on its water, this beautiful and unique town MAyUram is located, full of precious gems; and You are seated here, Oh Great One! |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |