திருப்புகழ் 787 அருக்கி மெத்தென சிரித்துமை  (திருப்படிக்கரை)
Thiruppugazh 787 arukkimeththenasiriththumai  (thiruppadikkarai)
Thiruppugazh - 787 arukkimeththenasiriththumai - thiruppadikkaraiSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனத்த தத்தனத் தனத்த தத்தனத்
     தனத்த தத்தனத் ...... தனதான

......... பாடல் .........

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக்கணிட்
     டழைத்தி தப்தடச் ...... சிலகூறி

அரைப்ப ணத்தைவிற் றுடுத்த பட்டவிழ்த்
     தணைத்தி தழ்க்கொடுத் ...... தநுராகத்

துருக்கி மட்டறப் பொருட்ப றிப்பவர்க்
     குளக்க ருத்தினிற் ...... ப்ரமைகூரா

துரைத்து செய்ப்பதித் தலத்தி னைத்துதித்
     துனைத்தி ருப்புகழ்ப் ...... பகர்வேனோ

தருக்கு மற்கடப் படைப்ப லத்தினிற்
     றடப்பொ ருப்பெடுத் ...... தணையாகச்

சமுத்தி ரத்தினைக் குறுக்க டைத்ததிற்
     றரித்த ரக்கர்பொட் ...... டெழவேபோர்

செருக்கு விக்ரமச் சரத்தை விட்டுறச்
     செயித்த வுத்தமத் ...... திருமாமன்

திருத்த கப்பன்மெச் சொருத்த முத்தமிழ்த்
     திருப்ப டிக்கரைப் ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அருக்கி மெத்தெனச் சிரித்து மைக் க(ண்)ணிட்டு அழைத்து
இதப்படச் சில கூறி
... அருமை பாராட்டி அமைதியாகச் சிரித்து, மை
பூசிய கண் கொண்டு அழைத்து, இன்பம் பெருகும்படி சில
வார்த்தைகளைப் பேசி,

அரைப் பணம் அத்தை விற்று உடுத்த பட்டு அவிழ்த்து
அணைத்து இதழ் கொடுத்து அநுராகத்து உருக்கி மட்டு அறப்
பொருள் பறிப்பவர்க்கு
... இடுப்பினில் உள்ள பெண்குறிக்காக பணம்
பெறும்பொருட்டு அதனை விற்பனை செய்து, கட்டியுள்ள பட்டாடையை
அவிழ்த்து, அணைத்து, வாயிதழ் ஊறலைத் தந்து, காமலீலையில்
உள்ளத்தை உருக வைத்து, குறைவிலா வகையில் பொருள் பறிக்கும்
பொது மகளிரிடம்

உளக் கருத்தினில் ப்ரமை கூராது உரைத்து செய்ப் பதித்
தலத்தினைத் துதித்து உனைத் திருப்புகழ் பகர்வேனோ
...
எனது உள்ளக் கருத்தில் மயக்கம் மிக்கு எழாது, செய்ப்பதி எனப்படும்
வயலூர் என்ற தலத்தைப் போற்றி உரைத்து, உன்னைத் துதித்து,
திருப்புகழ்ப் பாடல்களைச் சொல்வேனோ?

தருக்க மற்கடப் படைப் பலத்தினில் தடப் பொருப்பு எடுத்து
அணையாகச் சமுத்திரத்தினைக் குறுக்க அடைத்து
... பெருமை
உள்ள குரங்குப் படையின் பலத்தினால் பெரிய மலைகளை எடுத்துப்
போட்டு அணை கட்டி, கடலைக் குறுக்கே அடைத்து,

அதில் தரித்த அரக்கர் பொட்டு எழவே போர் செருக்கு
விக்ரமச் சரத்தை விட்டு உறச் செயித்த உத்தமத் திரு மாமன்
திருத் தகப்பன் மெச்சு ஒருத்த
... (அணைக்கு) அப்பால் இருந்த
அரக்கர்கள் பொடியாக, சண்டை மிக்கெழ, வீரம் உள்ள அம்பைச் செலுத்தி
வீழ்த்தி வெற்றி கொண்ட மேலான அழகிய (ராமனாகிய) திருமாலும்,
சிறந்த தந்தையாகிய சிவபெருமானும் மெச்சுகின்ற ஒப்பற்றவனே.

முத்தமிழ் திருப் படிக்கரைப் பெருமாளே. ... முத்தமிழ் வல்லானே,
திருப்படிக்கரையில்* வீற்றிருக்கும் பெருமாளே.


* இந்தத் தலம் திருமண்ணிப் படிக்கரை எனவும், இலுப்பைப்பட்டு எனவும்
வழங்கும். வைதீஸ்வரன்கோவிலுக்கு மேற்கே 6 மைலில் உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.905  pg 2.906  pg 2.907  pg 2.908 
 WIKI_urai Song number: 791 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 787 - arukki meththena siriththumai (thiruppadikkarai)

arukki meththenac chiaiththu maikkaNit
     tazhaiththi thappadac ...... chilakURi

araippa Naththaivit Ruduththa pattavizhth
     thaNaiththi thazhkkoduth ...... thanurAkath

thurukki mattaRap porutpa Rippavark
     kuLakka ruththiniR ...... pramaikUrA

thuraiththu seyppathith thalaththi naiththuthith
     thunaiththi ruppukazhp ...... pakarvEnO

tharukku maRkadap padaippa laththinit
     Radappo ruppeduth ...... thaNaiyAkac

chamuththi raththinaik kuRukka daiththathit
     Rariththa rakkarpot ...... tezhavEpOr

serukku vikramac charaththai vittuRac
     cheyiththa vuththamath ...... thirumAman

thiruththa kappanmec choruththa muththamizhth
     thiruppa dikkaraip ...... perumALE.

......... Meaning .........

arukki meththenac chiriththu maik ka(N)Nittu azhaiththu ithappadac chila kURi: Endearing themselves with a serene smile, they beckon with their painted eyes and utter a few provocative words;

araip paNam aththai vitRu uduththa pattu avizhththu aNaiththu ithazh koduththu anurAkaththu urukki mattu aRap poruL paRippavarkku: just to make money by selling their genital in the pelvic region, they loosen their silk attire, embrace (their suitors), offer the saliva filled in their mouth and melt their mind through amorous acts; on these whores who are out to grab money without limit,

uLak karuththinil pramai kUrAthu uraiththu seyp pathith thalaththinaith thuthiththu unaith thiruppukazh pakarvEnO: I do not wish to lose my mind in utter delusion; instead, I wish to praise Your favourite abode VayalUr, known as Cheippathi and to worship You by reciting poems of Your glory, Oh Lord!

tharukka maRkadap padaip palaththinil thadap poruppu eduththu aNaiyAkac samuththiraththinaik kuRukka adaiththu: With His famous army of monkeys, who threw huge mountains (into the sea) to build a bridge, He constructed a barrier in the sea;

athil thariththa arakkar pottu ezhavE pOr serukku vikramac charaththai vittu uRac cheyiththa uththamath thiru mAman thiruth thakappan mecchu oruththa: the demons on the other side (of the bridge) were shattered to pieces in the war that broke in a big way as He wielded His valorous arrow, defeated the enemies and scored victory; He is the great and handsome Lord VishNu (RAmA); joining Him, Your famous Father Lord SivA also lavishes praise on You, Oh Matchless One!

muththamizh thirup padikkaraip perumALE.: You are proficient in the three branches of Tamil language, Oh Lord! You are seated in Thiruppadikkarai*, Oh Great One!


(* This place is now known as ThirumaNNip padikkarai and Iluppaippattu, located 6 miles west of VaitheesvarankOvil).

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 787 arukki meththena siriththumai - thiruppadikkarai

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]