திருப்புகழ் 748 மாத்திரை யாகிலு  (திருவேட்களம்)
Thiruppugazh 748 mAththiraiyAgilu  (thiruvEtkaLam)
Thiruppugazh - 748 mAththiraiyAgilu - thiruvEtkaLamSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தாத்தன தானன தாத்தன தானன
     தாத்தன தானன ...... தனதான

......... பாடல் .........

மாத்திரை யாகிலு நாத்தவ றாளுடன்
     வாழ்க்கையை நீடென ...... மதியாமல்

மாக்களை யாரையு மேற்றிடு சீலிகள்
     மாப்பரி வேயெய்தி ...... அநுபோக

பாத்திர மீதென மூட்டிடு மாசைகள்
     பாற்படு ஆடக ...... மதுதேடப்

பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி
     பாற்கட லானென ...... வுழல்வேனோ

சாத்திர மாறையு நீத்தம னோலய
     சாத்தியர் மேவிய ...... பதவேளே

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட
     தாட்பர னார்தரு...... குமரேசா

வேத்திர சாலம தேற்றிடு வேடுவர்
     மீக்கமு தாமயில் ...... மணவாளா

வேத்தம தாமறை யார்த்திடு சீர்திரு
     வேட்கள மேவிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

மாத்திரை யாகிலு நாத்தவறாளுடன் ... ஒரு சிறிய அளவு கூட
வாக்குத் தவறாத மனைவியுடன்

வாழ்க்கையை நீடென மதியாமல் ... நடத்தும் இல்லற
வாழ்க்கையைப் பெரிதென மதியாமல்,

மாக்களை யாரையும் ஏற்றிடு சீலிகள் ... மிருகங்கள் போன்ற
மனிதர்கள் யாராயிருந்தாலும் ஏற்றுக்கொண்டு அவர்களோடு
அனுபவிக்கும் துர்க்குணப் பொது மாதர்களிடம்

மாப்பரிவேயெய்தி ... மிக்க அன்பைப் பூண்டு,

அநுபோக பாத்திரம் ஈதென ... வேசையர்களை அனுபவிக்கும்
பாத்திரம் இவன் என்று பிறர் ஏச,

மூட்டிடு மாசைகள் பாற்படு ... மூண்டு எழுகின்ற ஆசைகளில்
ஈடுபட்டு,

ஆடகம் அதுதேட ... (வேசையர்க்குக் கொடுக்கப்) பொன்னைத் தேட

பார்க்கள மீதினில் மூர்க்கரை யேகவி ... பூமியிலுள்ள மூர்க்க
லோபிகளையே எனது கவிகளில்

பாற்கடலானென உழல்வேனோ ... பாற்கடலில் பள்ளி கொண்ட
திருமாலே இவன் என்று வீணுக்குப் புகழ்ந்து திரிவேனோ?

சாத்திரம் ஆறையு நீத்த மனோலய ... ஆறு* சாஸ்திரங்களையும்
கடந்து, மனம் லயித்து ஒடுக்கவல்ல

சாத்தியர் மேவிய பதவேளே ... சாமர்த்தியசாலிகள் போற்றும்
திருவடிகளை உடைய வேளே,

தாத்தரி தாகிட சேக்கெனு மாநட ... தாத்தரி தாகிட சேக் என்ற
தாளத்துக்கு ஏற்ப சிறந்த நடனம் செய்யும்

தாட் பரனார்தரு குமரேசா ... பாதங்களை உடைய நடராஜப்
பெருமான் தந்த குமரேசனே,

வேத்திர சாலமது ஏற்றிடு வேடுவர் ... அம்புக் கூட்டங்களைச்
சுமந்து திரியும் வேடர்களின்

மீக்கு அமுதாமயில் மணவாளா ... மிக்க அமுதைப் போன்ற,
மயிலை ஒத்த, வள்ளியின் மணவாளனே,

வேத்தம தாம் மறை ஆர்த்திடு சீர் ... அறியப் படுவதான
வேதங்களின் கோஷம் முழங்கும் அழகிய

திருவேட்கள மேவிய பெருமாளே. ... திருவேட்களத்** தலத்தில்
வீற்றிருக்கும் பெருமாளே.


* ஆறு சாஸ்திரங்கள் பின்வருமாறு:

(1) வேதாந்தம் (உபநிஷதம்)

(2) வைசேஷிகம் (கணாதரால் ஸ்தாபிக்கப்பட்ட தர்க்க சாஸ்திரம்)

(3) பாட்டம் (குமாரில பட்டரால் பிரசாரம் செய்யப்பட்ட வேதமே தெய்வம் என்ற சாஸ்திரம்)

(4) ப்ரபாகரம் (ப்ரபகரன் என்பவரால் வேத வேதாந்தப் பொருட்களை ஆராயும் சாஸ்திரம்)

(5) பூர்வ மீமாம்சை (வேதத்தின் கர்ம காண்டத்தை ஆராய ஜைமினி முநிவர் இயற்றிய சாஸ்திரம்)

(6) உத்தர மீமாம்சை (வேதத்தின் பிற்பகுதியான ஞான காண்டத்தை ஆராய வியாசரால்
     எழுதப்பட்ட பிரம்ம சூத்திரம் முதலிய சாஸ்திரம்.


** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.801  pg 2.802  pg 2.803  pg 2.804 
 WIKI_urai Song number: 752 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 748 - mAththirai yAgilu (thiruvEtkaLam)

mAththirai yAkilu nAththava RALudan
     vAzhkkaiyai needena ...... mathiyAmal

mAkkaLai yAraiyu mERRidu seelikaL
     mAppari vEyeythi ...... anupOka

pAththira meethena mUttidu mAsaikaL
     pARpadu Adaka ...... mathuthEdap

pArkkaLa meethinil mUrkkarai yEkavi
     pARkada lAnena ...... vuzhalvEnO

sAththira mARaiyu neeththama nOlaya
     sAththiyar mEviya ...... pathavELE

thAththari thAkida cEkkenu mAnada
     thAtpara nArtharu ...... kumarEsA

vEththira sAlama thERRidu vEduvar
     meekkamu thAmayil ...... maNavALA

vEththama thAmaRai yArththidu seerthiru
     vEtkaLa mEviya ...... perumALE.

......... Meaning .........

mAththirai yAkilu nAththava RALudan vAzhkkaiyai needena mathiyAmal: Rather than respecting the superior married life with my wife who does not deviate from truthful path even for a moment,

mAkkaLai yAraiyu mERRidu seelikaL mAppari vEyeythi: I was seeking, with unlimited passion, harlots whose way of life was to accept even beastly men for cohabitation.

anupOka pAththira meethena: People mocked at me saying "He is a vessel for enjoyment (by the harlots)".

mUttidu mAsaikaL pARpadu Adakam athuthEda: Aroused by carnal pleasures and in search of gold (for showering on those harlots),

pArkkaLa meethinil mUrkkarai yEkavi: I sought to compose poems on rich miserly brutes in this world

pARkada lAnena vuzhalvEnO: comparing them with Vishnu on the milky ocean! Why should I wastefully roam about like this?*

sAththira mARaiyu neeththa manOlaya sAththiyar: Those great men capable of attaining sublimation of mind after transcending the stage beyond the six Sastras** (VEdic treatises)

mEviya pathavELE: worship Your hallowed feet, Oh Great King!

thAththari thAkida cEkkenu mAnadathAt: His feet dance superbly to the meter of "thAththari thAkida cEk";

para nArtharu kumarEsA: that Supreme Lord NadarAjA delivered You to us, Oh KumarEsA!

vEththira sAlama thERRidu vEduvar: Those hunters carry bunches of arrows on their shoulders;

meekkamu thAmayil maNavALA: You are the consort of their nectar-like daughter, VaLLi, looking like a peacock.

vEththama thAmaRai yArththidu seer: In this famous town, there is always the sound of chanting of VEdAs, worthy of understanding;

thiruvEtkaLa mEviya perumALE.: this is ThiruvEtkaLam**, Your abode, Oh Great One!


The first eight lines describe a part of the life story of Poet ArunagirinAthar.


* The six Sastras are:

     (1) Vedantam (Upanishads);
     (2) Vaiseshikam (established by GanAdhar, this deals with logic and economics);
     (3) BhAttam (established and propogated by KumArila Bhattar, this deals with the Godliness of VEdAs);
     (4) Prabhakaram (established by Prabhakaran it deals with research of VEdAs and vedantam);
     (5) PUrva MeemAmsai (established by Sage Jaimini, this deals with the former part of VEdAs covering Karma KAndam);
     (6) Uththara MeemAmsai (established by Sage VyAsa, this deals with the
          latter part of VEdAs covering GnAna KAndam and BrahmA SUthram.


** ThiruvEtkaLam is 2 miles east of Chidhambaram.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 748 mAththirai yAgilu - thiruvEtkaLam

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]