திருப்புகழ் 749 அறிவிலாதவர்  (திருநெல்வாயில்)
Thiruppugazh 749 aRivilAdhavar  (thirunelvAyil)
Thiruppugazh - 749 aRivilAdhavar - thirunelvAyilSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தனன தானன தானனாத் தனந்த
     தனன தானன தானனாத் தனந்த
          தனன தானன தானனாத் தனந்த ...... தனதான

......... பாடல் .........

அறிவி லாதவ ரீனர்பேச் சிரண்டு
     பகரு நாவினர் லோபர்தீக் குணங்க
          ளதிக பாதகர் மாதர்மேற் கலன்கள் ...... புனையாதர்

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து
     திரியு மானுடர் பேதைமார்க் கிரங்கி
          யழியு மாலினர் நீதிநூற் பயன்கள் ...... தெரியாத

நெறியி லாதவர் சூதினாற் கவர்ந்து
     பொருள்செய் பூரியர் மோகமாய்ப் ப்ரபஞ்ச
          நிலையில் வீழ்தரு மூடர்பாற் சிறந்த ...... தமிழ்கூறி

நினைவு பாழ்பட வாடிநோக் கிழந்து
     வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து
          நெளியு நீள்புழு வாயினேற் கிரங்கி ...... யருள்வாயே

நறிய வார்குழல் வானநாட் டரம்பை
     மகளிர் காதலர் தோள்கள்வேட் டிணங்கி
          நகைகொ டேழிசை பாடிமேற் பொலிந்து ...... களிகூர

நடுவி லாதகு ரோதமாய்த் தடிந்த
     தகுவர் மாதர்ம ணாளர்தோட் பிரிந்து
          நசைபொ றாதழு தாகமாய்த் தழுங்கி ...... யிடர்கூர

மறியு மாழ்கட லூடுபோய்க் கரந்து
     கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து
          வளரு மாவிரு கூறதாய்த் தடிந்த ...... வடிவேலா

மருவு காளமு கீல்கள்கூட் டெழுந்து
     மதியு லாவிய மாடமேற் படிந்த
          வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

அறிவி லாதவர் ஈனர் ... அறிவு இல்லாதவர்கள், இழிவானவர்கள்,

பேச்சிரண்டு பகரு நாவினர் லோபர் ... இருவிதமான பேச்சு பேசும்
நாவினை உடையவர்கள், கஞ்சர்கள்,

தீக் குணங்கள் அதிக பாதகர் ... கெட்ட குணங்களையே
மேற்கொண்டு மிக்க பாவங்களைச் செய்பவர்கள்,

மாதர்மேற் கலன்கள் புனையாதர் ... பொது மகளிருக்கு
நகைகளைப் புனைந்து பார்க்கும் அறிவிலிகள்,

அசடர் பூமிசை வீணராய்ப் பிறந்து திரியு மானுடர் ... அசடர்கள்,
பூமியில் வீணாகக் காலத்தைப் போக்கப் பிறந்து திரிகின்ற மனிதர்கள்,

பேதைமார்க்கு இரங்கி யழியு மாலினர் ... பெண்கள் மீது காம
இரக்கம் கொண்டு அழியும் மோக மனத்தினர்,

நீதிநூற் பயன்கள் தெரியாத நெறியிலாதவர் ... நீதி நூல்களின்
பயன் தெரியாது, நன்னெறியில் போகாதவர்கள்,

சூதினாற் கவர்ந்து பொருள்செய் பூரியர் ... சூதாட்டத்தால்
மற்றவர் பொருளைக் கவர்ந்து சேகரிக்கும் கீழ்மக்கள்,

மோகமாய்ப் ப்ரபஞ்ச நிலையில் வீழ்தரு மூடர்பால் ... ஆசைப்
பெருக்கால் உலக இன்பத்தையே விரும்பும் மூடர்கள் - இத்தகையோரிடம்
சென்று,

சிறந்த தமிழ்கூறி ... நல்ல தமிழ்ப் பாடல்களைப் பாடிக்காட்டி,

நினைவு பாழ்பட வாடிநோக்கு இழந்து ... நினைவு தேய்ந்து,
பாழ்பட்டு, வாட்டம் அடைந்து, பார்வை மங்கி,

வறுமை யாகிய தீயின்மேற் கிடந்து ... வறுமை என்ற
நெருப்பின்மேல் கிடந்து

நெளியு நீள்புழு வாயினேற்கு இரங்கி யருள்வாயே ... நெளியும்
நீண்ட புழுப்போல ஆன என்னை இரக்கத்துடன் ஆண்டருள்வாயாக.

நறிய வார்குழல் வானநாட்டு அரம்பை மகளிர் ...
நறுமணத்துடன் கூடிய நீண்ட கூந்தலை உடைய தேவநாட்டுப்
பெண்கள்

காதலர் தோள்கள்வேட்டு இணங்கி ... தங்கள் காதலர்களுடைய
தோள்களை விரும்பித் தழுவி,

நகைகொடு ஏழிசை பாடிமேற் பொலிந்து களிகூர ...
சிரிப்புடனே ஏழு ஸ்வரங்களிலும்* பாடி மகிழ்ந்து குலவவும்,

நடுவிலாத குரோதமாய்த் தடிந்த தகுவர் மாதர் ... நியாயம்
இல்லாதவராய், கோபம் மிக்கவராய், அழிவுப்பாதையிலே செல்லும்
அசுரர்களின் மனைவியர்

மணாளர்தோட் பிரிந்து நசைபொறாது அழுது ... தங்கள்
கணவரின் தோள்களைப் பிரிந்து, தமது பிரிவாற்றாமையை அடக்க
முடியாமல் அழுது,

ஆகமாய்த்து அழுங்கி யிடர்கூர ... தங்கள் உடலைத் தாமே
துன்புறுத்தி வருத்தமே பெருகவும்,

மறியும் ஆழ்கடலூடு போய்க் கரந்து ... அலைகள் பொங்கும்
ஆழ்கடலின் உள்ளே சென்று ஒளிந்துகொண்டு,

கவடு கோடியின் மேலுமாய்ப் பரந்து ... கிளைகள்
கோடிக்கணக்காய் கடல் மேல் விரிந்து

வளரு மா இரு கூறதாய்த் தடிந்த வடிவேலா ... வளர்ந்த
மாமரமாய் நின்ற சூரன் இரண்டு கூறாகும்படி வெட்டிப் பிளந்த
வேலாயுதனே,

மருவு காள முகீல்கள்கூட் டெழுந்து ... பொருந்திய கரு மேகங்கள்
கூட்டமாக எழுந்து,

மதியு லாவிய மாடமேற் படிந்த ... நிலவொளி வீசும் உயர்ந்த
மாடங்களின் மீது படியும் தலமாம்,

வயல்கள் மேவுநெல் வாயில்வீற் றிருந்த பெருமாளே. ...
வயல்கள் சூழ்ந்த திருநெல்வாயிலில்** அமர்ந்த பெருமாளே.


* ஏழிசை:

குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என தமிழிசையில் முறையே வழங்கும்
ஸப்த ஸ்வரங்களான ஷட்ஜம், ரிஷபம், காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் ஆகும்.


** திருநெல்வாயில் சிதம்பரத்துக்குத் தென்கிழக்கில் 3 மைலில் உள்ள
சிவபுரி என்ற தலம் ஆகும்.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.803  pg 2.804  pg 2.805  pg 2.806 
 WIKI_urai Song number: 753 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal
'குருஜி' ராகவன்
அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள்

'Guruji' Ragavan
and Thiruppugazh Anbargal
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 

Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 749 - aRivilAdhavar (thirunelvAyil)

aRivi lAthava reenarpEch chiraNdu
     pakaru nAvinar lOpartheek kuNanga
          Lathika pAthakar mAtharmER kalankaL ...... punaiyAthar

asadar pUmisai veeNarAyp piRanthu
     thiriyu mAnudar pEthaimArk kirangi
          yazhiyu mAlinar neethinUR payankaL ...... theriyAtha

neRiyi lAthavar cUthinAR kavarnthu
     poruLsey pUriyar mOkamAyp prapanja
          nilaiyil veezhtharu mUdarpAR ciRantha ...... thamizhkURi

ninaivu pAzhpada vAdinOk kizhanthu
     vaRumai yAkiya theeyinmER kidanthu
          neLiyu neeLpuzhu vAyinER kirangi ...... yaruLvAyE

naRiya vArkuzhal vAnanAt tarampai
     makaLir kAthalar thOLkaLvEt tiNangi
          nakaiko dEzhisai pAdimER polinthu ...... kaLikUra

naduvi lAthaku rOthamAyth thadintha
     thakuvar mAtharma NALarthOt pirinthu
          nasaipo RAthazhu thAkamAyth thazhungi ...... yidarkUra

maRiyu mAzhkada lUdupOyk karanthu
     kavadu kOdiyin mElumAyp paranthu
          vaLaru mAviru kURathAyth thadintha ...... vadivElA

maruvu kALamu keelkaLkUt tezhunthu
     mathiyu lAviya mAdamER padintha
          vayalkaL mEvunel vAyilveeR Riruntha ...... perumALE.

......... Meaning .........

aRivi lAthavar eenar pEchchiraNdu pakaru nAvinar: Unintelligent people, debased ones, double-talkers,

lOpar theekkuNangaLathika pAthakar: stingy persons, vicious ones bent upon committing heinous crimes,

mAtharmER kalankaL punaiyAthar asadar: stupid people deriving pleasure by bejewelling harlots, idiots,

pUmisai veeNarAyp piRanthu thiriyu mAnudar: men wasting their time in this world roaming around aimlessly,

pEthaimArk kirangi yazhiyu mAlinar: people destroying themselves by obsessively coveting women,

neethinUR payankaL theriyAtha neRiyi lAthavar: people ignorant of the value of moral treatises and deviating from the righteous path,

cUthinAR kavarnthu poruLsey pUriyar: the debauchees who grab the riches of others through gambling,

mOkamAyp prapanja nilaiyil veezhtharu mUdarpAR: and the imbeciles hankering after worldly pleasures - these are the people at whose doors,

ciRantha thamizhkURi: I sang great songs in Tamil.

ninaivu pAzhpada vAdinOk kizhanthu: My thinking was corrupted, and I languished with a diminishing eyesight.

vaRumai yAkiya theeyinmER kidanthu neLiyu neeLpuzhu vAyinERku: I looked like a large worm twitching after falling on the fire of poverty.

irangi yaruLvAyE: Kindly be merciful and bestow Your blessings on me.

naRiya vArkuzhal vAnanAt tarampai makaLir: The celestial women with long and fragrant hair

kAthalar thOLkaLvEt tiNangi: were locked in loving embrace with the shoulders of their lovers,

nakaiko dEzhisai pAdimER polinthu kaLikUra: amidst laughter and musical merriment in the seven notes*;

naduvi lAthaku rOthamAyth thadintha thakuvar mAthar: the women of the unjust and angry demons who were in the path of destruction

maNALarthOt pirinthu: were separated from the shoulders of their husbands

nasaipo RAthazhuthu AkamAythth azhungi yidarkUra: and cried uncontrollably due to the agony of separation, inflicting wounds on their bodies which intensified their distress;

maRiyum Azhkadal UdupOyk karanthu: he (SUran) hid himself in the innermost part of the deep and wavy sea,

kavadu kOdiyin mElumAyp paranthu vaLaru: taking the disguise of a mango tree, with its million branches sprawling on the surface of the sea;

mAviru kURathAyth thadintha vadivElA: and that SUran was split into two by Your sharp spear, Oh Lord!

maruvu kALamu keelkaLkUt tezhunthu: Dense and dark clouds gather together climbing up

mathiyu lAviya mAdamER padintha: to graze on the tall moonlit terraces of this town,

vayalkaL mEvunel vAyilveeR Riruntha perumALE.: famous for its many fertile fields, known as ThirunelvAyil**, which is Your abode, Oh Great One!


* The seven notes of Tamil music are: kural, thuththam, kaikkiLai, uzhai, iLi, viLari and thAram which correspond to Shadjam, Rishabham, GAndhAram, Madhyamam, Panchamam, Dhaivatham and NishAdham, respectively.


** ThirunelvAyil is 3 miles southeast of Chidhambaram, known as Sivapuri.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 749 aRivilAdhavar - thirunelvAyil

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]