திரு அருணகிரிநாதர் அருளிய Sri AruNagirinAthar's |
---|
திருப்புகழ் 747 சதுரத்தரை நோக்கிய (திருவேட்களம்) Thiruppugazh 747 sadhuraththarainOkkiya (thiruvEtkaLam) |
தமிழிலும் ஆங்கிலத்திலும் பொருள் எழுதியது ஸ்ரீ கோபால சுந்தரம் Meanings in Tamil and English by Sri Gopala Sundaram | English in PDF PDF அமைப்பு | ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் venue list alphabetical numerical search |
தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன தனனத்தன தாத்தன தானன ......தனதான ......... பாடல் ......... சதுரத்தரை நோக்கிய பூவொடு கதிரொத்திட ஆக்கிய கோளகை தழையச்சிவ பாக்கிய நாடக ...... அநுபூதி சரணக்கழல் காட்டியெ னாணவ மலமற்றிட வாட்டிய ஆறிரு சயிலக்குல மீட்டிய தோளொடு ...... முகமாறுங் கதிர்சுற்றுக நோக்கிய பாதமு மயிலிற்புற நோக்கிய னாமென கருணைக்கடல் காட்டிய கோலமும் ...... அடியேனைக் கனகத்தினு நோக்கினி தாயடி யவர்முத்தமி ழாற்புக வேபர கதிபெற்றிட நோக்கிய பார்வையு ...... மறவேனே சிதறத்தரை நாற்றிசை பூதர நெரியப்பறை மூர்க்கர்கள் மாமுடி சிதறக்கட லார்ப்புற வேயயில் ...... விடுவோனே சிவபத்தினி கூற்றினை மோதிய பதசத்தினி மூத்தவி நாயகி செகமிப்படி தோற்றிய பார்வதி ...... யருள்பாலா விதுரற்கும ராக்கொடி யானையும் விகடத்துற வாக்கிய மாதவன் விசையற்குயர் தேர்ப்பரி யூர்பவன் ...... மருகோனே வெளியெட்டிசை சூர்ப்பொரு தாடிய கொடிகைக்கொடு கீர்த்தியு லாவிய விறல்மெய்த்திரு வேட்கள மேவிய ...... பெருமாளே. ......... சொல் விளக்கம் ......... சதுரத்தரை நோக்கிய பூவொடு ... நான்கு இதழ் கொண்டதாய், தரையின் நான்கு திசைகளையும் நோக்கியதாய் உள்ள (மூலாதாரக்) கமலம் தொடங்கி, கதிர் ஒத்திட ஆக்கிய கோளகை தழைய ... முச்சுடர்களால் (அதாவது, சூரிய, சந்திர, அக்கினிச் சுடர்களால்) ஆன மண்டலங்கள் (ஆறாதார நிலைகள்)* குளிர்ந்து தழைய, சிவ பாக்கிய நாடக அநுபூதி ... சிவப் பேற்றைத் தருவதான நடனப் பெரும்பேறு ஆகிய சரணக் கழல் காட்டியே ... திருவடிக் கழலை (அடியேனுக்குக்) காட்டி, என் ஆணவ மலம் அற்றிட வாட்டிய ... என்னுடைய யான் எனது என்னும் அகங்கார மமகார மலங்கள் ஒழியுமாறு கெடுத்து ஒழித்த ஆறிரு சயிலக் குலம் ஈட்டிய தோளொடு முகம் ஆறும் ... (உனது) பன்னிரண்டு சிறந்த மலைகள் போன்ற தோள்களையும், ஆறு முகங்களையும், கதிர் சுற்று உக நோக்கிய பாதமும் ... ஒளி சுற்றிலும் பரவி (ஆன்மாக்களைப்) பாதுகாக்கின்ற திருவடியும், மயிலின் புறம் நோக்கியனாம் என ... மயிலின் மேலிருந்து பாதுகாக்கின்றவனாக கருணைக் கடல் காட்டிய கோலமும் ... கருணைக் கடலைக் காட்டி அருளிய திருக்கோலத்தையும், அடியேனை கனகத்தினும் நோக்கி இனிதாய் ... அடியேனை பொன்னைக் காட்டிலும் இனிய பார்வையுடன் பார்த்து, அடியவர் முத்தமிழால் புகவே ... உன் அடியவர்கள் போல யானும் முத்தமிழ் கொண்டு பாடிப் புகழவும், பர கதி பெற்றிட நோக்கிய பார்வையும் மறவேனே ... (நான்) மேலான நற் கதியைப் பெற நின் அருள்மிக்க தனிப்பார்வையையும் மறவேன். சிதறத் தரை நால்திசை பூதர(ம்) நெரிய ... பூமி அதிர, நான்கு திசைகளில் உள்ள மலைகள் நெரிந்து பொடிபட, பறை மூர்க்கர்கள் மா முடி சிதற ... பறை அடித்து வந்த மூர்க்க அசுரர்களின் பெரிய முடிகள் சிதறுண்டு விழ, கடல் ஆர்ப்பு உறவே அயில் விடுவோனே ... கடல் ஒலி செய்து வாய்விட்டு அலற வேலைச் செலுத்தியவனே, சிவ பத்தினி கூற்றினை மோதிய பத சத்தினி ... சிவனது பத்தினியும், யமனை உதைத்த பாதத்தைக் கொண்ட சக்தி வாய்ந்தவளும், மூத்த விநாயகி செகம் இப்படி தோற்றிய பார்வதி அருள்பாலா ... யாவர்க்கும் மூத்தவளும், (அடியார்களின்) இடர்களை நீக்குபவளும், அண்டங்களை இவ்வாறு ஒரு நொடியில் படைத்தவளுமாகிய பார்வதி தேவி ஈன்ற பாலனே, விதுரற்கும் அராக் கொடி யானையும் ... விதுரனுக்கும், பாம்புக் கொடி கொண்ட துரியோதனனுக்கும், விகடத் துறவு ஆக்கிய மாதவன் ... (மனம்) வேறுபடும்படியான பிரிவினையை உண்டு பண்ணிய கண்ணபிரான், விசையற்கு உயர் தேர்ப் பரி ஊர்பவன் மருகோனே ... அருச்சுனனின் பெரிய தேர்க் குதிரைகளை (பார்த்த சாரதியாக இருந்து) செலுத்தியவன் ஆகிய திருமாலின் மருகனே, வெளி எண் திசை சூரப் பொருது ஆடிய ... வெளியிலே எட்டுத் திக்குகளிலும் வெகு வீரமாய் நின்று போர் செய்த சூரனை கொடி கைக்கொடு கீர்த்தி உலாவிய ... (இறுதியில் வென்று, அவனது ஒரு பகுதியைச் சேவல்) கொடியாகக் கையிலேந்தி புகழ் விளங்க உலவிய (பெருமாளே), விறல் மெய்த் திருவேட்களம் மேவிய பெருமாளே. ... வெற்றியும் சத்தியமும் விளங்கும் திருவேட்களம்** என்னும் தலத்தில் வீற்றிருக்கும் பெருமாளே. |
* ஆதாரங்களின் பெயர்களும், உடலில் இருக்கும் இடம், உரிய ஐம்பூதங்கள், அனுட்டிக்கும்போது மலர் வடிவங்களின் அமைப்பு, அக்ஷரக் குறிப்பு ஆகியவை கீழே தரப்பட்டுள்ளன. மேலும் இந்த ஆதாரங்களுக்கு உரிய தலங்கள், கடவுளர்கள் பெயர்களும் கொடுக்கப்பட்டுள்ளன. | ||||||
ஆதாரம் மூலாதாரம் சுவாதிஷ்டானம் மணிபூரகம் அநாகதம் விசுத்தி ஆக்ஞா பிந்து சக்கரம் (துவாதசாந்தம், ஸஹஸ்ராரம், பிரமரந்திரம்) | இடம் குதம் கொப்பூழ் மேல்வயிறு இருதயம் கண்டம் புருவத்தின் நடு கபாலத்தின் மேலே | பூதம் மண் அக்கினி நீர் காற்று ஆகாயம் மனம் | வடிவம் 4 இதழ் கமலம் முக்கோணம் 6 இதழ் கமலம் லிங்கபீடம் நாற் சதுரம் 10 இதழ் கமலம் பெட்டிப்பாம்பு நடு வட்டம் 12 இதழ் கமலம் முக்கோணம் கமல வட்டம் 16 இதழ் கமலம் ஆறு கோணம் நடு வட்டம் 3 இதழ் கமலம் 1008 இதழ் கமலம் | அக்ஷரம் ஓம் ந(கரம்) ம(கரம்) சி(கரம்) வ(கரம்) ய(கரம்) | தலம் திருவாரூர் திருவானைக்கா திரு(வ) அண்ணாமலை சிதம்பரம் திருக்காளத்தி காசி (வாரணாசி) திருக்கயிலை | கடவுள் விநாயகர் பிரமன் திருமால் ருத்திரன் மகேசுரன் சதாசிவன் சிவ . சக்தி ஐக்கியம் |
** திருவேட்களம் சிதம்பரத்துக்குக் கிழக்கே 2 மைலில் உள்ள தலம். |
'wikisource' reference links for this song இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள் pg 2.797 pg 2.798 pg 2.799 pg 2.800 pg 2.801 pg 2.802 WIKI_urai Song number: 751 goto wiki alpha list (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) |
'குருஜி' ராகவன் அவர்களுடன் திருப்புகழ் அன்பர்கள் 'Guruji' Ragavan and Thiruppugazh Anbargal பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
ஸ்ரீ மஹா பெரியவா திருப்புகழ் சபை & சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) Sri Maha Periyava Thirupugazh Sabha & Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) | பாடகர் பக்கத்திற்கு to singer's page |
சுவாமி குஹாநந்தா திருப்புகழ் சபை (சேலம்) இப்பாடலின் பொருள் Swamy Gughanandha Thirupugazh Sabha (Salem) meanings in Tamil |
திரு சபா. மெய்யப்பன் Thiru S. Meyyappan பாடகர் பக்கத்திற்கு to singer's page |
|
Song 747 - sadhuraththarai nOkkiya (thiruvEtkaLam) chathurath tharai nOkkiya pUvodu kadhiroth thida Akkiya gOLakai thazhaiya siva bAkkiya nAtaka ...... anubUthi charaNak kazhal katti enANava malamatrida vAttiya ARiru sayilakkula meettiya thOLodu ...... mukam ARung kadhir sutruga nOkkiya pAdhamu mayiliR puRa nOkkiya nAmena karuNaik kadal kAttiya kOlamum ...... adiyEnai kanakath thinu nOk kinidhAy adi yavar muth thamizhAR pugavE para gathi petrida nOkkiya pArvaiyu ...... maRavEnE sidhaRath tharai nAtRisai bUdhara neriyap paRai mUrkkargaL mA mudi sidhaRak kadalArp puRavE ayil ...... viduvOnE sivapaththini kUtrinai mOdhiya padha saththini mUththa vinAyagi jegam ippadi thotriya pArvathi ...... aruL bAlA vidhuraRkum arAkkodi yAnaiyum vikatath uRvAkkiya mAdhavan vijaiyaRk uyar thErp pari Urbavan ...... marugOnE veLiyet isai sUrp porudhAdiya kodi kaikkodu keerthi ulAviya viRalmeyth thiruvEtkaLa mEviya ...... perumALE. ......... Meaning ......... chathurath tharai nOkkiya pUvodu: This lotus in the MUlAdhAra Centre has four petals and faces the four corners of the floor; beginning from that centre, kadhiroth thida Akkiya gOLakai thazhaiya: the six (Kundalini) zones*, made up of the three major effulgences [namely, the Sun, the Moon and the Fire (Agni)], were cooled and flexed; siva bAkkiya nAtaka anubUthi charaNak kazhal katti: then, the vision of the great cosmic dance that proffers the ultimate bliss of SivA was witnessed by me from Your lotus feet of refuge; enANava malamatrida vAttiya: my two slags, namely, arrogance and possessiveness, were totally wiped out ARiru sayilakkula meettiya thOLodu mukam ARung: by Your twelve mountain-like solid shoulders, six holy faces, kadhir sutruga nOkkiya pAdhamu: and the feet around which there was a glow of halo protecting all lives, mayiliR puRa nOkkiya nAmena: mounting the peacock, looking around everywhere as the saviour, karuNaik kadal kAttiya kOlamum: Your majestic stature like the sea of compassion, adiyEnai kanakath thinu nOk kinidhAy adiyavar muth thamizhAR pugavE: Your glance more endearing and precious than gold, making me sing Your glory in chaste Tamil like Your devotees, para gathi petrida nOkkiya pArvaiyu maRavEnE: and Your choicest gaze that guided me towards my salvation can never be forgotten! sidhaRath tharai nAtRisai bUdhara neriya: There was tremor in the earth and the mountains in the four directions shuddered and were smashed to pieces; paRai mUrkkargaL mA mudi sidhaRa: the large heads of the evil demons who came to the war beating the drums were shattered; kadalArp puRavE ayil viduvOnE: and the seas were stirred up into a roar when You wielded the Spear! sivapaththini kUtrinai mOdhiya padha saththini: She is the Consort of Lord SivA; She is the powerful Shakthi who has the foot that kicked away Yaman, the God of Death; mUththa vinAyagi jegam ippadi thotriya pArvathi aruL bAlA: She is Primordial; She removes the obstacles (of Her devotees); She created the universe just like that in a flash; She is PArvathi, and You are Her Son! vidhuraRkum arAkkodi yAnaiyum vikatath uRvAkkiya mAdhavan: He is MAdhavan (Krishna) who created a serious wedge between Vidhuran and DuryOdhanan who held the staff of a serpent; vijaiyaRk uyar thErp pari Urbavan marugOnE: He is also the charioteer of Arjunan, driving his large horses (in the role of PArthasArathy); You are the nephew of that Lord VishNu! veLiyet isai sUrp porudhAdiya: The demon (SUran), who fought ferociously in the open and in all the eight directions, kodi kaikkodu keerthi ulAviya: was ultimately conquered, and You made him (partly) into a Rooster installed on Your staff carried in Your hand and strolled about in triumph, Oh Lord! viRalmeyth thiruvEtkaLa mEviya perumALE.: You have Your abode in ThiruvEtkaLam** where victory and truth prevail, Oh Great One! |
* The names of the chakrA centres, the deities, the elements, the zones of the body where they are located, the shape of the chakrAs, the description of the flowers in the chakrAs, the letters of the ManthrA governing them and the temple-towns representing them are given in the following chart: | ||||||
ChakrA mUlAthAram swAthishtAnam maNipUragam anAgatham visudhdhi AgnyA Bindu chakkaram (DhwAdhasAntham, SahasrAram, Brahma-ranthiram) | Body Zone Genitals Belly-button Upper belly Heart Throat Between the eyebrows Over the skull | Element Earth Fire Water Air Sky Mind | Shape 4-petal lotus Triangle 6-petal lotus Lingam Square 10-petal lotus cobra in box central circle 12-petal lotus Triangle lotus circle 16-petal lotus Hexagon central circle 3-petal lotus 1008-petal lotus | Letter Om na ma si va ya | Temple ThiruvArUr ThiruvAnaikkA Thiru aNNAmalai Chidhambaram ThirukkALaththi VaranAsi (kAsi) Mt. KailAsh | Deity VinAyagar BrahmA Vishnu RUdhran MahEswaran SathAsivan Siva-Sakthi Union |
** ThiruvEtkaLam is 2 miles east of Chidhambaram. |
தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் in PDF venue list alphabetical numerical search |
... www.kaumaram.com ... The website for Lord Murugan and His Devotees முகப்பு அட்டவணை மேலே தேடல் home contents top search |
If you do not see Tamil characters or for 'offline' viewing, please install 'SaiIndira' fonts from Azhagi.com download Free Azhagi software |
Kaumaram.com is a non-commercial website. This website is a dedication of Love for Lord Murugan. Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. |