திருப்புகழ் 731 கால முகில் என  (திருவாமாத்தூர்)
Thiruppugazh 731 kAlamugilena  (thiruvAmAththUr)
Thiruppugazh - 731 kAlamugilena - thiruvAmAththUrSri Gopala Sundaram    தமிழிலும் ஆங்கிலத்திலும்
    பொருள் எழுதியது
    ஸ்ரீ கோபால சுந்தரம்

   Meanings in Tamil and English by
   Sri Gopala Sundaram
English
in PDF

PDF அமைப்பு

with mp3 audio
previous page next page
ஆலய வரிசை
அகரவரிசை
எண்வரிசை
தேடல்

venue list
alphabetical
numerical
search

தான தனதன தனதன தனதன
     தான தனதன தனதன தனதன
          தான தனதன தனதன தனதன ...... தனதான

......... பாடல் .........

கால முகிலென நினைவுகொ டுருவிலி
     காதி யமர்பொரு கணையென வடுவகிர்
          காணு மிதுவென இளைஞர்கள் விதவிடு ...... கயலாலுங்

கான மமர்குழ லரிவையர் சிலுகொடு
     காசி னளவொரு தலையணு மனதினர்
          காம மிவர்சில கபடிகள் படிறுசொல் ...... கலையாலுஞ்

சால மயல்கொடு புளகித கனதன
     பார முறவண முருகவிழ் மலரணை
          சாயல் தனின்மிகு கலவியி லழிவுறும் ...... அடியேனைச்

சாதி குலமுறு படியினின் முழுகிய
     தாழ்வ தறஇடை தருவன வெளியுயர்
          தாள தடைவது தவமிக நினைவது ...... தருவாயே

வேலை தனில்விழி துயில்பவ னரவணை
     வேயி னிசையது நிரைதனி லருள்பவன்
          வீர துரகத நரபதி வனிதையர் ...... கரமீதே

வேறு வடிவுகொ டுறிவெணெய் தயிரது
     வேடை கெடவமு தருளிய பொழுதினில்
          வீசு கயிறுட னடிபடு சிறியவ ...... னதிகோப

வாலி யுடனெழு மரமற நிசிசரன்
     வாகு முடியொரு பதுகர மிருபது
          மாள வொருசரம் விடுமொரு கரியவன் ...... மருகோனே

வாச முறுமலர் விசிறிய பரிமள
     மாதை நகர்தனி லுறையுமொ ரறுமுக
          வானி லடியவ ரிடர்கெட அருளிய ...... பெருமாளே.

......... சொல் விளக்கம் .........

கால முகில் என நினைவு கொ(ண்)டு உருவு இலி காதி அமர்
பொரு கணை என
... உரிய காலத்தில் பெய்த மழையைக் கண்டால்
வரும் மகிழ்ச்சியைப் போல் உருவம் இல்லாதவனான மன்மதன்
கொல்வதற்குப் போரிட விட்ட அம்பு எனவும்,

வடு வகிர் காணும் இது என இளைஞர்கள் விதவிடு(ம்)
கயலாலும்
... மாவடுவின் கீற்று எனவும், வந்து இதைப் பாருங்கள்
என்றும் இளைஞர்கள் மிகுந்துரைக்கும் கயல் மீன் போன்ற கண்களாலும்,

கானம் அமர் குழல் அரிவையர் சிலு(க்) கொடு காசின் அளவு
ஒருதலை அ(ண்)ணும் மனதினர்
... காடு போன்ற கூந்தலை
உடைய விலைமாதர்கள் சண்டைக் கூச்சலுடன், (கொடுத்த)
பொருளுக்குத் தக்கபடி ஒருதலைக் காமம் பொருந்திய மனம்
கொண்டவராய்,

காமம் இவர் சில கபடிகள் படிறு சொல் கலையாலும் சால
மயல் கொடு
... இத்தகைய பொய்க்காமம் கொண்ட சில கபட
நெஞ்சத்தினராய் வஞ்சனைப் பேச்சு பேசும் காமசாஸ்திரங்களாலும்
மிக்க மோகம் கொண்டு,

புளகித கன தன பாரம் உற அ(ண்)ண முருகு அவிழ் மலர்
அணை
... புளகாங்கிதம் பூண்ட கனத்த மார்பின் பாரம் அழுந்த,
பொருந்திய வாசனை வீசுகின்ற மலர்ப் படுக்கை உள்ள

சாயல் தனில் மிகு கலவியில் அழிவு உறும் அடியேனை ...
துயிலில் மிக்க புணர்ச்சி இன்பத்தில் அழிவுறும் அடியேனை,

சாதி குலம் உறு படியினின் முழுகிய தாழ்வு அது அற ... சாதி
குலம் முதலியவை உள்ள இப் பூமியில் வந்து பிறந்து, முற்றும்
அனுபவிக்கின்ற சிறுமை நீங்க,

இடை தருவன வெளி உயர் தாள் அது அடைவது தவம் மிக
நினைவது தருவாயே
... வழி வந்து உதவுகின்ற பர வெளியில் உள்ள
திருவடியை அடைவதையும், தவ நெறியை மிகவும் நினைப்பதையும்
தந்து அருளுவாயாக.

வேலை தனில் விழி துயில்பவன் அரவணை ... பாற்கடலில் ஆதி
சேஷனாகிய பாம்புப் படுக்கை மேல் கண் துயில்பவன்,

வேயின் இசை அது நிரை தனில் அருள்பவன் ...
புல்லாங்குழலின் இசையால் பசுக் கூட்டங்களுக்கு அருள் புரிபவன்,

வீர துரகத நர பதி ... வீரமுள்ள குதிரைகளைச் செலுத்தின
சாரதியான கண்ணபிரான், அருச்சுனனுக்குக் குரு,

வேறு வடிவு கொடு உறி வெ(ண்)ணெய் தயிர் அது வேடை
கெட அமுது அருளிய பொழுதினில்
... வேறே உருவம் கொண்டு
உறியில் இருந்த வெண்ணெய், தயிர் இவைகளைத் திருடி உண்ணும்
வேட்கை தீர அனைவருக்கும் அமுதைப் பங்கிட்டு அருளியபோதில்,

வனிதையர் கரம் மீதே வீசு கயிறு உடன் அடிபடு சிறியவன் ...
மாதர்களின் கையால், எறியப்பட்ட கயிற்றால் அடிபட்ட சிறுவன்,

அதி கோப வாலியுடன் எழு மரம் அற ... மிக்க கோபம்
கொண்டிருந்த வாலியுடன், ஏழு மராமரங்களும் அற்று விழவும்,

நிசிசரன் வாகு முடி ஒரு பது(ம்) கரம் இருபது(ம்) மாள ஒரு
சரம் விடும் ஒரு கரியவன் மருகோனே
... அரக்கனாகிய
ராவணனின் அழகிய பத்துத் தலைகளும் இருபது கைகளும் அழியும்படி
ஓர் அம்பை விட்ட, ஒப்பற்ற கரிய நிறம் கொண்ட திருமாலின் மருகனே,

வாசம் உறு மலர் விசிறிய பரிமள மாதை நகர் தனில் உறையும்
ஒர் அறு முக
... நறு மணம் மிக்க மலர்கள் வீசின வாசனையைக்
கொண்ட திருவாமாத்தூர்* என்னும் ஊரில் எழுந்தருளியிருக்கும்
ஓர் ஆறுமுகனே,

வானில் அடியவர் இடர் கெட அருளிய பெருமாளே. ...
விண்ணுலகத்தினில் இருக்கும் அடியார்களின் துன்பம் நீங்கும்படியாக
அருளிய பெருமாளே.


* திருவாமாத்தூர் விழுப்புரம் ரயில் நிலயத்திலிருந்து 4 மைல் வடமேற்கே உள்ளது.

  'wikisource' reference links for this song  
  இப்பாடலுக்கான 'விக்கிமூலம்' இணையப் பக்கங்கள்  
 pg 2.757  pg 2.758  pg 2.759  pg 2.760  pg 2.761  pg 2.762 
 WIKI_urai Song number: 736 
  goto wiki alpha list  
 (Please note: Kaumaram.com is NOT responsible for accuracy and contents of external links) 
Murugan Songs by Thiru S Meyyappan
திரு சபா. மெய்யப்பன்

Thiru S. Meyyappan
 பாடகர் பக்கத்திற்கு 
 to singer's page 


Song 731 - kAla mugil ena (thiruvAmAththUr)

kAla mukilena ninaivuko duruvili
     kAthi yamarporu kaNaiyena vaduvakir
          kANu mithuvena iLainjarkaL vithavidu ...... kayalAlum

kAna mamarkuzha larivaiyar silukodu
     kAsi naLavoru thalaiyaNu manathinar
          kAma mivarsila kapadikaL padiRusol ...... kalaiyAlum

sAla mayalkodu puLakitha kanathana
     pAra muRavaNa murukavizh malaraNai
          sAyal thaninmiku kalaviyi lazhivuRum ...... adiyEnai

sAthi kulamuRu padiyinin muzhukiya
     thAzhva thaRaidai tharuvana veLiyuyar
          thALa thadaivathu thavamika ninaivathu ...... tharuvAyE

vElai thanilvizhi thuyilpava naravaNai
     vEyi nisaiyathu niraithani laruLpavan
          veera thurakatha narapathi vanithaiyar ...... karameethE

vERu vadivuko duRiveNey thayirathu
     vEdai kedavamu tharuLiya pozhuthinil
          veesu kayiRuda nadipadu siRiyava ...... nathikOpa

vAli yudanezhu maramaRa nisisaran
     vAku mudiyoru pathukara mirupathu
          mALa vorusaram vidumoru kariyavan ...... marukOnE

vAsa muRumalar visiRiya parimaLa
     mAthai nakarthani luRaiyumo raRumuka
          vAni ladiyava ridarkeda aruLiya ...... perumALE.

......... Meaning .........

kAla mukil ena ninaivu ko(N)du uruvu ili kAthi amar poru kaNai ena: These (eyes) are like the arrows shot by the formless God of Love, Manmathan, who elates one like the seasonal rain that showers at the appropriate time;

vadu vakir kANum ithu ena iLainjarkaL vithavidu(m) kayalAlum: these are like the wrinkles on a baby mango and like the kayal fish, attracting the attention of youngsters who enthusiastically call one another to behold their beauty;

kAnam amar kuzhal arivaiyar silu(k)kodu kAsin aLavu oruthalai a(N)Num manathinar: these whores with forest-like hair create a furore and cacophony showing one-sided love commensurate with the money they have received;

kAmam ivar sila kapadikaL padiRu sol kalaiyAlum sAla mayal kodu: being smitten by excessive passion for such devious whores showing false love who glibly speak of erotic texts,

puLakitha kana thana pAram uRa a(N)Na muruku avizh malar aNai: under the exciting weight of their heavy breasts and in their flowery beds exuding an agreeable fragrance,

sAyal thanil miku kalaviyil azhivu uRum adiyEnai: I drowned myself in a debilitating sleep of carnal pleasure;

sAthi kulam uRu padiyinin muzhukiya thAzhvu athu aRa: having taken a miserable birth on this earth full of castes and creeds, I wish to be liberated from the total humiliation I have imposed upon myself; for that,

idai tharuvana veLi uyar thAL athu adaivathu thavam mika ninaivathu tharuvAyE: kindly show me the goal of attaining Your hallowed feet in the Cosmos that serve as the guiding beacon, making me think a lot about the ascetic way of life!

vElai thanil vizhi thuyilpavan aravaNai vEyin isai athu nirai thanil aruLpavan: He slumbers on a serpent-bed (AdhisEshan) on the milky ocean; He graciously protects the cattle by playing the flute;

veera thurakatha nara pathi: He is Lord KrishNA coming as the charioteer to drive brave horses; He is the Master of Arjunan;

vERu vadivu kodu uRi ve(N)Ney thayir athu vEdai keda amuthu aruLiya pozhuthinil: He took several disguises to steal butter and curd stored in an elevated vessel on the roof (uRi), and when He distributed the stolen nectar-like food among friends satiating the hunger of all,

vanithaiyar karam meethE veesu kayiRu udan adipadu siRiyavan: that little boy KrishNA got a beating at the hands of women who whipped him with pieces of ropes;

athi kOpa vAliyudan ezhu maram aRa: knocking VAli who was enraged, felling the seven mighty marAmara trees,

nisisaran vAku mudi oru pathu(m) karam irupathu(m) mALa oru saram vidum oru kariyavan marukOnE: and destroying the ten great heads and twenty arms of the demon, RAvaNan, by wielding a unique arrow was the matchless RAmA (Lord VishNu); and You are His nephew!

vAsam uRu malar visiRiya parimaLa mAthai nakar thanil uRaiyum or aRu muka: In this town ThiruvAmAththUr* filled with the aroma of many fragrant flowers, You are seated, Oh Lord with six faces!

vAnil adiyavar idar keda aruLiya perumALE.: You graciously eradicated the sufferings of the devoted celestials in the sky, Oh Great One!


* ThiruvAmAththUr is situated 4 miles northwest of Vizhuppuram railway station.

தமிழில் PDF அமைப்பு ஆலய வரிசை அகரவரிசை எண்வரிசை தேடல் 
in PDF venue list alphabetical numerical search 

with mp3 audio
previous page next page

Thiru Arunagirinathar's Thiruppugazh - 731 kAla mugil ena - thiruvAmAththUr

... www.kaumaram.com ...
The website for Lord Murugan and His Devotees


 முகப்பு   அட்டவணை   மேலே   தேடல் 
 home   contents   top   search 



Get Free Tamil and other Indian Language Software from Azhagi dot com
If you do not see Tamil characters or for 'offline' viewing,
please install 'SaiIndira' fonts from Azhagi.com
 download Free Azhagi software 

Kaumaram.com is a non-commercial website.
This website is a dedication of Love for Lord Murugan.

 Please take note that Kaumaram.com DOES NOT solicit any funding, DIRECTLY or INDIRECTLY. 

[xhtml] 0504.2022[css]